நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24-ம் தேதி முதல், ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சென்று இந்தியா விளையாடுகிறது என்றாலே, அதில் ஒரு அலாதி குஷி இருக்கத்தான் செய்கிறது. வீரர்களுக்கு அல்ல; ரசிகர்களுக்கு. நியூசிலாந்து, சொந்த மண்ணில் வீழ்த்தவே முடியாத அணியும் கிடையாது; அதேசமயம் அவ்வளவு சாதாரணமாக வீழ்த்திவிடக் கூடிய அணியும் அல்ல.
கடந்த 20 ஆண்டுகால டிராக் ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால், 2000ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 2010 வரை நியூசிலாந்தில் இந்தியா 80:20 ரேஷியோவில் தான் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. தோனியின் முழு ஆக்கிரமிப்புக்கு பின்னர், அதாவது 2010க்கு பிறகு நியூசிலாந்தில் 50:50 என்ற ரேஷியோவில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.
ஐந்து போட்டி கொண்ட தொடர் என்றால் நிச்சயம் அது 3-2 என்ற கணக்கில் தான் முடியும் என்று கூறலாம். அந்தளவுக்கு போட்டிகளில் சம அளவில் சூடு பறக்கும்.
இப்போது விராட் கோலி தலைமையில் இந்திய அணி செல்கிறது. அதுவும் பலமாக செல்கிறது. பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி கடும் சோதனை அளிக்கக் கூடிய அணி நியூசிலாந்தில் தற்போது கால் பதித்திருக்கிறது.
பவுன்ஸ், பீமர், இன் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், லெக் கட்டர், ஆஃப் கட்டர், அவுட் ஸ்விங், knuckle என்று அனைத்து வித பாஸ்ட் பவுலிங் வேரியேஷன்களையும் நியூசிலாந்து பிட்சில் நாம் பார்க்க முடியும். இவை அனைத்தையும் இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடித்து கோப்பை வெல்வதை பார்ப்பது என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், ஏற்கனவே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (VC), ப்ரித்வி ஷா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர், கேதர் ஜாதவ்
ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை ரசிகர்களால் கொண்டாடப்படும் ப்ரித்வி ஷா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதால் ஷாவுக்கு அடித்தது ஜாக்பாட். மற்றபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை.
அதேசமயம், டி20 அணியில் ஷிகர் தவான் விலகியதால் அவருக்கு பதில் ஆஸ்திரேலியா தொடரில் கழட்டிவிடப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரைப் பொறுத்தவரை 3 போட்டிகள் மட்டுமே. ஸோ, மூச்சு விட இங்கு நேரமே கிடையாது. டாப் ஆர்டரில் ரோஹித் மற்றும் 'ஆல் ரோல் ஆள்' லோகேஷ் ராகுல், விராட் கோலி என்று அசுர பலத்துடன் இந்தியா உள்ளது. ஆனால், ஷிகர் தவான் விலகியதால் மிடில் சற்று வீக்காகி இருக்கிறது எனலாம். ஏனெனில் தவான் இருந்திருந்தால் ராகுல் மிடில் ஆர்டரிலோ அல்லது சூழலுக்கு ஏற்ப லோ ஆர்டரிலோ ஆடியிருப்பார். இப்போது அது மிஸ்ஸிங்.
ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டேவை நம்பியே மிடில் ஆர்டர் உள்ளது.
ஒருவேளை ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர் ராகுலுக்கு பதிலாக ஓப்பனிங் இறங்குவார். ஸோ, மிடில் ஆர்டர் நோ பிராப்ளம்.
லோ ஆர்டரில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா (அ) கேதர் ஜாதவ் உள்ளனர். பார்த்துக்கலாம்.
பவுலிங்கில் பும்ரா, ஷமி இருப்பது பலம். நியூசிலாந்து பிட்சில் சைனி ஜொலிக்க நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், அதை அவர் எந்தளவுக்கு பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்தே உள்ளது பும்ரா, ஷமி மீதான் பிரஷர். ஸ்பின்னுக்கு பெரிதாக வேலை இருக்காது. இருந்தாலும் 'ஸ்பின் ட்வின்ஸ்' கையில் இருப்பதால் சமாளித்துவிடலாம்.
ரோஹித், கோலி, ராகுல், பண்ட், பும்ரா ஆகிய இந்த ஐந்து வீரர்களின் பங்களிப்பை பொருத்துதான் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு நியூசிலாந்து தொடரில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.