scorecardresearch

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு; அஸ்வின், தினேஷ் கார்த்திக்கு இடம்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; அஸ்வினுக்கு அணியில் இடம்; பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் மீண்டும் அணியில் சேர்ப்பு

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு; அஸ்வின், தினேஷ் கார்த்திக்கு இடம்

India squad for T20 World Cup 2022: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: அகில இந்திய தேர்வுக் குழு திங்கள்கிழமை ஒரு கூட்டத்திற்காக கூடியது மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது.

மீண்டும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் படேல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் காத்திருப்புப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டு வருவதால் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு ‘லவ் ப்ரபோஸ்’: வண்ணப் படங்கள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 23-ம் தேதி விளையாடுகிறது. உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த இரு வீரர்கள், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் மற்றும் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய். அவருக்கு பதிலாக மூத்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

உலகக் கோப்பைக்கு முன்னதாக, செப்டம்பர் 20 முதல் மொஹாலியில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20  தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அணி களமிறங்குகிறது. மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் செப்டம்பர் 28 முதல் தொடங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India squad for icc t20 world cup 2022 batsmen bowlers wicketkeeper