India T20, ODI Squad, against Sri Lanka, Australia Series 2020: இதோ அடுத்த சீரிஸ் வந்தாச்சுல…. இப்பவெல்லாம் ஒருநாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இல்லன்னா கூட, ஏதோ ஒரு ‘வெற்றிடம்’ இருப்பது போலவே இருப்பது எனக்கு மட்டும் தானா, இல்ல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அப்படித் தானா-னு தெரில… வெஸ்ட் இண்டீஸ் சீரிஸ் நேத்து தான் முடிஞ்சுது.
ஆனா, ‘என்னது! இன்னும் 10 நாளைக்கு மேட்ச் இல்லையா?’ என்று மனம் ஜெர்க் ஆகிறது. இந்த சோகமான சூழலை குஷியாக்கி இருக்கிறது புதிய அறிவிப்பு ஒன்று.
கிரிக்கெட்டின் ‘பீஸ்ட்’ கேட்ச்! – ஐபிஎல்-ல ஏன் இவருக்கு இவ்ளோ கிராக்கினு இப்போ புரியும் (வீடியோ)
வேற ஒன்றுமில்ல… இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய டி20 அணியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சில சர்பிரைஸ் கம்பேக்குகளும் உள்ளன.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்.
என்ன முழிக்குறீங்க?… பும்ரா ஈஸ் பேக்.
யோவ்… என்சிஏ பும்ராவுக்கு எப்பயா உடல் தகுதி சான்றிதழ் கொடுத்துச்சு?ன்னு கிராஸ் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது.
டீமுக்குள்ள வந்துட்டாரு, அவ்ளோ தான்.
பெறவு, ஷிகர் தவான் மீண்டும் அணிக்குள் திரும்பியிருக்கிறார்.
ரோஹித்துக்கும், ஷமிக்கும் ரெஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.
10.75 கோடி வெறியில் தனி ஒருவனாக சாத்திய மேக்ஸ்வெல்! – டி20ல் மெகா கம் பேக் (வீடியோ)
இந்தியா vs இலங்கை போட்டிகள்:
ஜனவரி 5: இந்தியா vs இலங்கை, முதல் டி20 (குவஹாத்தி)
ஜனவரி 7: இந்தியா vs இலங்கை, இரண்டாவது டி20 (இந்தூர்)
ஜனவரி 10: இந்தியா vs இலங்கை, மூன்றாவது டி20 (புனே)
அடுத்து ஒன்டே டூருக்கு வருவோம்….
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி
விராட் கோலி(c), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர்.
ஜனவரி 14: இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் (மும்பை)
ஜனவரி 17: இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் (ராஜ்கோட்)
ஜனவரி 19: இந்தியா vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் (பெங்களூரு)
ஒருநாள் தொடருக்கு, ரோஹித் மீண்டும் அணிக்கு கம்பேக் கொடுக்க, அணியில் பெரிய மாறுபாடு இல்லை.