Advertisment

IND vs AFG: பவுண்டரி மழை பொழிந்த ரோகித்; ஆப்கானை எளிதாக வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஷஹிதி மற்றும் அஸ்மத்துல்லா அரை சதத்தால் 272 ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான்; 63 பந்துகளில் சதம் விளாசிய ரோகித்; 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

author-image
WebDesk
New Update
India vs Afghanistan Live Score World Cup 2023 Delhi Tamil News

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

Worldcup 2023 | India vs Afghanistan13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கும்  9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: India vs Afghanistan Live Score, World Cup 2023

டெல்லி பிட்ச் ரிப்போர்ட்  

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்; இந்தியா பவுலிங்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள். இந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை விரட்டிய இப்ராஹிம் சத்ரான் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

28 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட மற்றொரு தொடக்க வீரரான குர்பாஸ் ஹர்திக் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், பவுண்டரி கோட்டிற்கு அருகில் இருந்து பந்தை ஜம் அடித்து கேட்ச் பிடித்த தாக்கூர், ஒரு காலை கோட்டிற்கு வெளியேயும் மற்றொன்றை உள்ளேயும் வைத்து இருந்தார். எனினும், பந்தை மேலே தூக்கி போட்ட பிறகு, பவுண்டரி கோட்டிற்கு வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து சூப்பரான கேட்சை எடுத்தார். டி.வி அம்பயர் அவுட்டை உறுதிப்படுத்த குர்பாஸ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் வந்த ரஹ்மத் ஷா 3 பவுண்டரிகளை விரட்டி 16 ரன்களுக்கு அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஜோடியில் ஒமர்சாய் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

கேப்டன் ஷாஹிதி உடன் முகமது நபி ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. 

சிறப்பாக ஆடிய ஷாஹிதி அரை சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன் சேர்க்க முயன்றவர் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா 2 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ரஷித் கான் களமிறங்கினார்.

சிறிதுநேரம் தாக்குப்பிடித்த நபி 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக முஜீப் களமிறங்கினார். ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்த ரஷித் கான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நவீன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முஜீப் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அடுத்ததாக, பாண்டியா 2 விக்கெட்களையும், ஷர்துல் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரோகித் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் கம்பெனி கொடுக்க, ரோகித் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். ஆப்கான் பவுலர்களை வெளுத்து வாங்கிய ரோகித் 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். இந்தியா 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் ஆடிவந்த இஷான் கிஷனும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சதம் விளாசினார். ரோகித் 63 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்தியர் ஆனார் ரோகித்.

சிறிது நேரத்திலே இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. இஷான் கிஷன் 47 ரன்களில் அவுட் ஆனார். அவர் ரஷித் கான் பந்தில் இப்ராகிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து கோலி களமிறங்கினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

கோலி ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஆடிய ரோகித் அதிரடியை தொடர்ந்தார். இந்தியா 205 ரன்கள் எடுத்திருந்தப்போது ரோகித் அவுட் ஆனார். அவரை ரஷித் கான் போல்டாக்கினார். ரோகித் 84 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்.

அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். சிறப்பாக ஆடிவந்த கோலி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. கோலி 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மட்டும் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:- 

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபரூஸ்ஹாக்.

இந்தியா:  ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 199 ரன்னில் சுருட்டி, அந்த இலக்கை 41.2 ஓவர்களில் இந்தியா எட்டிப்பிடித்து அசத்தியது. அதே உத்வேகத்தில் இந்திய அணி இன்று களமிறங்கும். மறுபுறம், ஆப்கானிஸ்தான் தனது முதலாவது ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 156 ரன்னில் சுருண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியில் இருந்து மீள போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup India Vs Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment