விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர், 1-1 என டிராவானது. இதைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலைட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி, லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், அஷ்வின், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா
இதில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் கோலி உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இருப்பினும், நங்கூரம் பாய்ச்சி நின்ற புஜாரா 123 ரன்கள் அடித்து, மோசமான நிலையில் இருந்து அணியை மீட்டெடுத்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் படிக்க - டாஸ் தோற்றாலும் முதல் நாளை வென்ற ஆஸ்திரேலியா, பவுலர்களை வென்ற புஜாரா
தொடர்ந்து, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் அதே 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
India vs Australia 1st Test Day 2 : பரபரப்பான இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் காணலாம்.
02:00 PM - இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 3 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், இந்தியாவை விட 59 ரன்கள் அந்த அணி பின்தங்கி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
11:40 AM - ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறி வருகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இஷாந்த் 2 விக்கெட்டையும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பேட்ஸ்மேன்களில் டிராவிஸ் ஹெட் மட்டும் களத்தில் உள்ளார்.
08:30 AM - ஆஸ்திரேலியாவின் முதல் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து, இந்திய பவுலர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி, தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
08:00 AM - உணவு இடைவேளைக்குப் பிறகு, ஷான் மார்ஷின் விக்கெட்டை கைப்பற்றினார் அஷ்வின். இது, அவரது 2வது விக்கெட்டாகும்.