Advertisment

IND vs AUS: கடைசிப் போட்டியிலும் வெற்றி; தொடரை கைப்பற்றிய இந்தியா

IND vs AUS: கோலி, சூர்யகுமார் அதிரடி; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி; தொடரையும் வென்று அசத்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs AUS: கடைசிப் போட்டியிலும் வெற்றி; தொடரை கைப்பற்றிய இந்தியா

India vs Australia final T20 match score updates: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் சேர்த்தும், சொதப்பலான பந்து வீச்சால் தோல்வி அடைந்தது. நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டி மழையால் இடையூறு ஏற்பட்டதால் 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இந்தபோட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள்: தரமான யார்க்கரை இறக்கி விட்ட பும்ரா… கதிகலங்கிப் போன ஆஸி,. வீரர்!

இந்தநிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா அணி

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ரோகித், கோலி, ராகுல், சூர்யகுமார் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர். அதேபோல் ஹர்திக் பாண்ட்யா மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சில்  இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். புவனேஷ்வர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ரன்களைக் கட்டுப்படுத்துவது முக்கியம். மிடில் ஓவர்களில் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை நம்பியுள்ளது, மேலும் அக்சர் ஒரு பெரிய சாதகமாக இருந்தபோதும், சாஹல் தடுமாறி வருகிறார். சாஹல் ஆசிய கோப்பையில் நிறைய ரன்களை வாரிக் கொடுத்தார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அந்த டிரெண்ட் தொடர்கிறது. யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அஸ்வினை அணியில் சேர்க்க இந்தியா பரிசீலிக்கலாம்.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச், கேமரூன் கிரீன் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டாலும், ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தடுமாறி வருகின்றனர். காயம் காரணமாக கடந்தப் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் இந்த போட்டியிலும் களமிறங்குவது கேள்விக்குறியாக இருப்பது, அந்த அணிக்கு பாதகமான அம்சமாகும். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், டேனியல் சாம்ஸ் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜாம்பா கலக்கி வருகிறார்.

இதனிடையே இன்றையப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும் என்பதால், இன்றையப் போட்டியில் ரன் மழை பொழியலாம். அதேநேரம் இன்றையப் போட்டியில் மழை குறுக்கிடலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் 11 வீரர்களின் விவரம்

இந்தியா: கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்சல் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இன்கிலிஸ், மேத்யூ வேட், டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஒருபக்கம் பிஞ்ச் நின்றுக் கொண்டிருக்க மறுபுறும் கிரீன் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். ஆஸ்திரேலியா அணி 44 ரன்கள் இருக்கையில், பிஞ்ச் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் தடுமாற, சிறப்பாக விளையாடிய கிரீன் அரை சதம் விளாசினார்.

7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்த கிரீன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய இங்கிலிஸ் அடித்து ஆட, ஸ்மித் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டிம் டேவிட் இங்கிலிஸ் உடன் ஜோடி சேர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.

நிதானமாக ஆடிய இங்கிலிஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட் 1 ரன்னில் அக்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சாம்ஸ் அடித்து ஆட, சிறப்பாக ஆடி அரை சதம் விளாசிய டேவிட் 54 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் பேட் கம்மின்ஸ் களமிறங்க ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாம்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 ரன்களில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது.

இன்றைய போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய அக்சர் பட்டேல் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்தப்படியாக புவனேஷ்வர், சாஹல், ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் ரோகித் களமிறங்கினர். ராகுல் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். மறுபுறம் சற்று நிலைத்து ஆடி வந்த ரோகித் 17 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறினர். அரை சதம் விளாசிய சூர்யகுமார், ஹேசல்வுட் பந்தில் அவுட் ஆனார். சூர்யகுமார் 36 பந்தில் 69 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்.

அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த பாண்டியா வழக்கம்போல் அதிரடியாக ஆடினார். இந்தநிலையில், அரை சதம் கடந்து விளையாடி வந்த கோலி, சாம்ஸ் பந்தில் அவுட் ஆனார். கோலி 48 பந்தில் 63 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். அடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கி 1 ரன் அடித்திருந்த நிலையில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 25 ரன்கள் அடித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில், சாம்ஸ் 2 விக்கெட்களையும், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 19.5 ஓவரில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Sports Cricket Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment