Sriram Veera, London
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நேற்று(ஜூன்.9) நடந்த ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் அதிக வீரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பந்துவீச்சின் போது, பாண்ட்யா வீசிய 2வது ஓவரில் (ஆட்டத்தின் 10வது ஓவர்) 19 ரன்கள் விளாசப்பட்டது. புதிய பந்தில் பும்ரா, புவனேஷ் டைட் லென்த்தில் வீசிய பிறகு, பாண்ட்யாவின் ஓவர் விளாசப்பட்டது. நிச்சயம் அது அவ்வளவு எளிதாக இருந்துவிடப் போவது இல்லை. அதன் பிறகு, ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னரை பாண்ட்யா எப்படி நிறுத்தினார்?
அவரது பவுலிங் குறித்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரியும்: ஷார்ட் பந்துகளை வீசி, பிட்சில் பவுன்ஸ் ஆகிறதா என்பதை அறிய அவர் விரும்புவார். அதன் பிறகு, தனக்கு ஏற்ற லென்த் எது என்பதை கண்டறிந்து அங்கேயே தொடர்ந்து தாக்குதல் நடத்த ஆரம்பிப்பார். இருப்பினும், கிரீஸில் ஆங்கிளை எப்படி செயல்பட வைப்பது என்று தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் நிறைய ஸ்லோ கட்டர்ஸ் கூட வீசினார். இவை அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து, அதைத் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் நடைமுறைப்படுத்தினார்.
அவர் வீசிய இரண்டாவது ஓவரில், ஃபின்ச் சாத்தியதைப் பார்த்து அதிர்ச்சியே ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 54-0. ஆஸி., ஆட்டத்திற்குள் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது. பிரஷரை பாண்ட்யா தகர்த்து எறிவாரா? அல்லது பவுலிங் அட்டாக்கில் இருந்து இந்தியா அவரை தூக்கி எறியுமா? என்று நினைத்தோம். ஆனால், இறுதியில் பாண்ட்யா சாதித்துவிட்டார்.
மேலும் படிக்க - Ind vs Aus: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா! ஸ்பெஷல் ஹைலைட்ஸ் தருணங்கள் இதோ!
ஒரே ஓவரில் தனது ஆங்கிளை மாற்ற ஆரம்பித்தார். ஸ்டம்ப்பை சுற்றி வந்து பவுன்ஸும் வீசினார், ஸ்லோ பந்துகளையும் வீசினார். ஸ்டம்ப்பை குறி வைத்தும் பந்துகளை வீசினார். கிரிக்கெட்டின் புத்திசாலித்தனத்தை மட்டும் அவர் காட்டவில்லை, அவரது பந்துவீச்சை கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்தினார்.
தனது ஸ்பெல்லில் வெவ்வேறு பேட்ஸ்மேன்களுக்கும் வெவ்வேறு டெலிவரிகளை அனுப்பினார். வார்னருக்கு பக்கா லென்த்தில் ஆச்சர்ய பவுன்சர்களை வீசுகிறார், அவரது லெக் மற்றும் மிடில் ஸ்டெம்ப் லைனையும் டார்கெட் செய்தார். லைனில் டார்கெட் செய்தால், தடுமாறுவதை ஐபிஎல்-ல் டேவிட் வார்னர் வெளிச்சம் போட்டு காட்டினார்; மிடில் மற்றும் லெக் சைட் லைனில் வந்த பந்துகளில் அவர் அடக்கி வாசித்தார். இந்த சாதகத்தை பயன்படுத்திய பாண்ட்யா, அதே இடத்தில் கொஞ்சமும் அயராமல் வீசினார். அந்த ஆச்சர்ய பவுன்ஸ்களில் பின்னால் நகர்ந்து ஆட முயற்சிக்க, ஸ்லோ பந்துகளில் தொடைகளில் அடி வாங்கினார் வார்னர்.
மேலும் படிக்க - ஸ்மித்துகாக இந்திய ரசிகர்களை கண்டித்த விராட் கோலி! ஆஸி., ஊடகங்கள் பெருமிதம்! (வீடியோ)
மீண்டும் அவர் பவுல் செய்ய வந்தார். 24-வது ஓவரில் இருந்து மூன்று ஓவர் கொண்ட ஸ்பெல்லை வீச வந்தார். அப்போதும், தனது லென்த் வேரியேஷன்களால் அசத்தினார். Around the off-stump லைனில், ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடர்ந்து வீசினார். உஸ்மான் கவாஜாவுக்கு ஸ்லோ கட்டர்ஸ் மற்றும் சில பவுன்சர்களை வீசினார். அந்த ஸ்பெல்லில் மொத்தமாக 16 ரன்கள் வழங்கினார்.
இவையனைத்தும், பேட்டிங்கில் இந்தியாவுக்காக ஒரு ஆக்ரோஷமான அவரது பேட்டிங்கிற்கு பிறகு வெளியானவை. பாண்ட்யாவின் 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசலால், இந்தியா 350 ரன்களை கடந்தது. இருப்பினும், அவரது பேட்டிங், அவர் சந்தித்த முதல் பந்திலேயே முடிந்திருக்க வேண்டியது. நாதன் கோல்டர்-நைல் வீசில ஸ்லோ கட்டர் பந்தில் எட்ஜ் ஆன பாண்ட்யா, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே தவறவிட்டதால் தப்பித்தார்.
ஒட்டுமொத்தமாக பாண்ட்யாவின் பேட்டிங்கை விட, இந்திய நிர்வாகம், அவரது பவுலிங்கில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.