Advertisment

India vs Bangladesh LIVE Cricket Match Score: பாம்பு டான்ஸ் ஆட வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?

India vs Bangladesh LIVE Cricket Match Score Ball by Ball Updates: இலங்கையை தோற்கடித்துவிட்டு முஷ்பிகுர் ஆடிய பாம்பு டான்ஸை நாம் மறந்துவிட முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ndia vs Bangladesh LIVE Cricket Match Score updates: இந்தியா vs வங்கதேசம்

ndia vs Bangladesh LIVE Cricket Match Score updates: இந்தியா vs வங்கதேசம்

India vs Bangladesh LIVE Cricket Match Score: மிக முக்கியமான, அபாயகரமான... குறிப்பாக இந்தியா தோற்கவே கூடாது என இந்தியர்கள் நினைக்கும் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.

Advertisment

அதேதான்... இந்தியா vs பங்களாதேஷ்

இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றால் கூட, நமது ரசிகர்கள் அவ்வளவு டென்ஷன் ஆக மாட்டார்கள்... இப்போதெல்லாம், வங்கதேசத்திடம் மோதும் போது தான் ரசிகர்களின் டென்ஷன் எகிறுகிறது. அதற்கு காரணம் நாம் அல்ல... சாட்சாத் வங்கதேச அணியும், அவர்களது ரசிகர்களும் தான்.

ஓவர் வெரி காட்டுகிறேன் என்று, இந்திய வீரர்களின் புகைப்படங்களை அவமதிப்பது என்று வங்கதேச ரசிகர்கள் சின்னப்புள்ளத் தனமாய் நடந்து கொள்ள, வங்கதேச அணியின் மோஸ்ட் வான்டட் சீனியர் வீரரான முஷ்பிகுர் ரஹீமே, இந்தியா தோற்றால் குஷியாகி ட்விட்டரில் வீடியோ போட்டு அதள பாதாள சின்னப்புள்ளத் தனமாய் நடந்து கொள்கிறார்.

அதிலும், இந்த வருடம் இலங்கையில் நடந்த நிடாஹஸ் டிராபி முத்தரப்பு தொடரில், இலங்கையை தோற்கடித்துவிட்டு முஷ்பிகுர் ஆடிய பாம்பு டான்ஸை நாம் மறந்துவிட முடியுமா? இறுதிப் போட்டியிலும், இந்தியாவை தோற்கடித்து பாம்பாட்டம் போட்டிருப்பார். இந்தியாவும் தோற்கும் நிலையில் தான் இருந்தது. கடைசி நேரத்தில் நம்ம தினேஷ் கார்த்திக் உள்ளே புகுந்து மேட்சை திருப்பிவிட, ஒட்டுமொத்த இந்தியாவே அப்போதுதான் நிம்மதி பெருமூச்சுவிட்டது.

ஒருவேளை முடிவு மாறியிருந்தாள்... கடவுளே! நினைத்துப் பார்க்கவே முடியல...

Asia Cup 2018 India vs Bangladesh LIVE Cricket Match Score Ball by Ball Run Updates: இப்போது மீண்டும் வங்கதேசத்திற்கு இந்தியாவை வீழ்த்த ஒரு வாய்ப்பு கிடைத்திருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின், சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில், இந்தியா வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் காணலாம்.

மேலும் படிக்க: இந்தியா vs வங்கதேசம் ஆட்டத்தை எங்கு? எப்போது பார்க்கலாம்?

India Vs Bangladesh Asia Cup 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment