India vs England 3rd ODI Live Cricket Score Streaming Online, Ind vs Eng Live Cricket Score: இந்தியா vs இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றிப் பெற்று சமநிலையில் உள்ளதால், இன்றைய போட்டியில் வென்று எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
IND XI: RG Sharma, S Dhawan, V Kohli, D Karthik, S Raina, MS Dhoni, H Pandya, B Kumar, K Yadav, S Thakur, Y Chahal
— BCCI (@BCCI) July 17, 2018
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு, புவனேஷ் குமார் மற்றும் ஷர்துள் தாகுர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக ஜேசன் ராய் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: இன்றைய இறுதிப் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான முன் மாதிரியா?
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டை ஐஇதமிழில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.