scorecardresearch

India vs Pakistan: வீரர்கள் டென்ஷன்… மறக்கவே முடியாத 3 மோதல்கள்!

Most Notorious Fights Between Players During Ind vs Pak Matches Tamil News: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்றாலே, ஆட்டத்தை கண்டு களிக்கும் ரசிகர்கள் மத்தியிலும், நேரலையில் காண்போர் முகத்திலும் ஒருவித பதற்றத்தை விட்டுச் செல்லும்.

India vs Pakistan: வீரர்கள் டென்ஷன்… மறக்கவே முடியாத 3 மோதல்கள்!
 Shahid Afridi vs Gautam Gambhir – Shoaib Akhtar vs Harbhajan Singh

India vs Pakistan Tamil News: சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் ஆட்டம் எப்போதும் பரபரப்பாக அரங்கேறும். இந்த இரு அணிகளும் கடந்த காலங்களில் மோதி ஆட்டங்களில் எல்லாம் சில மோசமான சண்டைகள் நடந்துள்ளன. இது மைதானத்தில் இருந்து ஆட்டத்தை கண்டு களிக்கும் ரசிகர்கள் மத்தியிலும், நேரலையில் காண்போர் முகத்திலும் ஒருவித பதற்றத்தை விட்டுச் செல்லும்.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் அரசியல் சூழலால், கடந்த பத்து ஆண்டுகளாக, இவ்விரு நாடு கிரிக்கெட் அணிகளும் இரு தரப்பு தொடரில் பங்கேற்று விளையாடவில்லை. அது குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுந்தாலும், செயல் வடிவத்திற்கு எட்டப்படாமல் இருந்து வருகிறது. இருப்பினும், இவ்விரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து வருகின்றன. இது இருநாட்டு ரசிகர்களுக்கும் ஆறுதல் தரும் விடயமாக உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் கடைசியாக கடந்த 2012-2013 ஆண்டுகளில் நடந்தது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் வெற்றி வாகை சூடியது. இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எந்தவொரு தொடரில் விளையாடினாலும், அப்போதெல்லாம் ஒரே களேபரம் தான். அப்படி, இவ்விரு அணிகள் விளையாடிய ஆட்டத்தில், களத்தில் ஏற்பட்ட 3 மோசமான மற்றும் எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்கமுடியா மோதல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: இந்த ஓவர்களில் அதிரடி அவசியம்… ஆசியக் கோப்பையில் இந்தியா வியூகம் இதுதான்!

  1. ஷாஹித் அப்ரிடி vs எம்எஸ் தோனி (2005)

2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணமாக வந்தது. அதில் விசாகப்பட்டினத்தில் நடந்த 2- வது ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சேவாக் – சச்சின் ஜோடியில், சச்சின் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, எம்எஸ் தோனி இந்தியாவுக்காக முதன்முறையாக 3-வது இடத்தில் பேட்டிங் செய்தார். அதிரடி கலந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில், அவருடன் ஜோடியில் இருந்த சேவாக் அரைசதம் அடித்து 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எனினும் தனது அதிரடியை கைவிடாமல் தொடர்ந்து விளையாடி வந்தார் தோனி. அப்போது அவருக்கு பந்துவீசிய பாகிஸ்தானின் லெக்-ஸ்பின்னர் அப்ரிடியின் பந்தை கவர் திசையில் ஒரு பவுண்டரி விரட்டினார். அதை சிறிதும் ரசிக்காத அப்ரிடி தோனியிடம் மிகவும் ஆவேசமாக பேசினார். கூல் பையனாக இருந்த தோனி, அப்ரிடிக்கு வாய்மொழியாக பதில் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார்.

இதையும் படியுங்கள்: IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

தொடர்ந்து அப்ரிடி வீசிய அடுத்த பந்திலேயே, அதே பகுதியில் மீண்டும் ஒரு முறை சிக்ஸரை பறக்கவிட்டு பொருத்தமான பதிலடி கொடுத்தார். பின்னர் அப்ரிடி வீசிய அடுத்தடுத்த பந்துகளில் 4,4,6,6,4 என தெறிக்க விட்டார் தோனி. அதோடு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது முதல் சதத்தையும் விளாசினார். மேலும், மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் 123 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 148 ரன்கள் குவித்தார். கூல் பையனுக்கு சூட்டை கிளப்பி விட்ட அப்ரிடியின் வார்த்தைப்போர், இந்தியா – பாகிஸ்தான் மோதல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

  1. ஷாஹித் அப்ரிடி vs கௌதம் கம்பீர் (2007)

2007ல் நடந்த இந்த இருதரப்பு தொடர் இந்திய மண்ணில் நடந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3வது ஆட்டம் கான்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 3வது வீரராக கௌதம் கம்பீர் களமாடி இருந்தார். ஆட்டத்தின் 20 வது ஓவரில் வேகமான சிங்கிள் எடுக்க முயன்ற கம்பீர் அப்ரிடியை இடித்து விடுகிறார். அடுத்த கணத்திலே இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் தொடங்கியது.

ஏற்கனவே தனது ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டி காரணத்தால் கோபத் தனலோடு இருந்த அப்ரிடி கம்பீருடன் மோத முற்பட்டார். இருவருக்கும் இடையிலான மோதல் வார்த்தைப் போராக மாறியது. இருவரும் மாறி மாறி எதோ திட்டிக்கொண்டனர்.இறுதியில், இருவருக்கும் இடையில் கள நடுவர்கள் நுழைந்து வாக்குவாதத்தை கலைத்தனர். இதுபோன்ற தருணங்களில்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி உண்மையில் உச்சத்தை எட்டியது.

இதையும் படியுங்கள்: பாபர் அசாம் vs விராட் கோலி; யார் பெஸ்ட்? அக்ரம் எவ்ளோ நேர்மையா சொல்றார் பாருங்க!

  1. சோயப் அக்தர் vs ஹர்பஜன் சிங் (2010)

2010 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை போட்டிகள் இலங்கை மண்ணில் நடந்தது. இதில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 4வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

இதையும் படியுங்கள்: களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

இந்த ஆட்டத்தில், இந்திய அணி அதன் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது, பாகிஸ்தான் வேகப்புயல் ஷோயப் அக்தர் மற்றும் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கியது. பின்னர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார் ஹர்பஜன். அப்போது அணியின் வெற்றிக்கு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த ஆட்டத்தை பார்த்த அனைவருக்கும் பரபரப்பு தொற்றிகொள்ளவே, கொந்தளிப்போடு பேட்டிங் செய்த ஹர்பஜன், ஒரு மிரட்டல் சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். அதன்பின் அவர் அணியின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில், பவுண்டரி லயனில் இருந்த அக்தர், அங்கு நின்ற ஹர்பஜனை ஏளன பார்வை பார்த்துச் சென்றார். ஹர்பஜன் தனது பங்கிற்கு மட்டைச் சுழற்றி சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டார். இப்படி, பரபரப்பு மிகுந்த ஆட்டமாக மாறிய இந்த ஆட்டம். ஒளிபரப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு தொலைக்காட்சி விருந்தாக, இருந்து போனது.

இதையும் படியுங்கள்: 4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்ஸ்… பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா 11 இதுதானா?

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs pakistan 3 most notorious fights between players during ind vs pak matches in tamil