Advertisment

IND vs PAK Highlights: பண்ட் அசத்தல் பேட்டிங்; பும்ரா அபார பவுலிங்... பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு 120 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
India vs Pakistan LIVE Score T20 World Cup 2024 match today ind vs pak latest scorecard updates in tamil

டி20 உலகக்கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

India Vs Pakistan | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2  ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின

Advertisment

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி பேட்டிங் செய்ய களமாடினர். முன்னதாக, மழை காரணமாக போட்டியில் டாஸ் போட தாமதமானது. டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது போதும் மழை பெய்யாததால் போட்டி தொடங்கி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. 

ஒருவழியாக தொடங்கி நடந்த ஆட்டத்தில் அதிரடியாக பவுண்டரி விரட்டிய கோலி அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து 4 ரன்னுக்கு அவுட் ஆனார். 12 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ரோகித் 13 ரன்னுக்கு அவுட் ஆனார். இதன்பிறகு வந்த ரிஷப் பண்ட் - அக்சர் படேல் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். 

இந்த ஜோடியில் அக்சர் படேல் 20 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப்பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த துபே 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதனிடையே, 31 பந்துகளில் 6 பவுண்டரியை விரட்டி மிரட்டிய பண்ட் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவ்ருக்குப் பின் வந்த ஜடேஜா அடுத்த பந்திலே ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதன்பின்னர் வந்த வீரர்களில் தலா ஒரு பவுண்டரியை விரட்டிய ஹர்திக் 7 ரன்னுக்கும், அர்ஷ்தீப் சிங் ரன்னும் ஆட்டமிழந்தனர். பும்ரா டக்-அவுட் ஆகி வெளியேறிய நிலையில், இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 19 ஓவர்களுக்கு 119 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் தலா 3 விக்கெட்டையும், முகமது அமீர் 2 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அந்த அணி முதல் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ஆனால், 5வது ஓவரில் கேப்டன் பாபர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி திருப்புமுனை கொடுத்தார். அவர் 13 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 13 ரன்னிலும், ஃபகார் ஜமான் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். 

தொடக்கம் முதலே அதிரடி காட்டி, இந்திய ரசிகர்களை அச்சுறுத்தி வந்த முகமது ரிஸ்வான் 31 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இமாத் வாசிம் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். டாப் ஆடரை பறிகொடுத்த பாகிஸ்தான் தடுமாறி வந்தது. அந்த அணி 17  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில், வெற்றிக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டையும், ஹர்திக் 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Pakistan LIVE Score, T20 World Cup 2024:

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 10, 2024 00:50 IST
    5 விக்கெட் காலி 17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்திய வருகிறது. 

    பாகிஸ்தான் `17  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவை. 



  • Jun 09, 2024 23:55 IST
    6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்திய வருகிறது. 

    பாகிஸ்தான் 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 23:54 IST
    'இம்ரான் கானை ரிலீஸ் பண்ணுங்க': நியூயார்க் ஸ்டேடியத்தில் பேனருடன் பறந்த விமானம் - வீடியோ

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த நியூயார்க் ஸ்டேடியத்தின் மீது ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என்ற பேனருடன் குட்டி விமானம் ஒன்று பறந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

    இதையும் படியுங்கள்: IND vs PAK: 'இம்ரான் கானை ரிலீஸ் பண்ணுங்க': நியூயார்க் ஸ்டேடியத்தில் பேனருடன் பறந்த விமானம் - வீடியோ

     



  • Jun 09, 2024 23:50 IST
    5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் துரத்திய வருகிறது. 

    பாகிஸ்தான் 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 23:48 IST
    பாபர் அசாம் அவுட்

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 13 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

     



  • Jun 09, 2024 23:43 IST
    பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம்... இந்தியாவுக்கு விக்கெட் தேவை!

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ள நிலையில், 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 23:13 IST
    பாகிஸ்தான் மிரட்டல் பவுலிங்... 119 ரன்னில் சுருண்ட இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த நிலையில், 119 ரன்னில் ஆல்-அவுட் ஆகியது. மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்திய  பாகிஸ்தான் அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 09, 2024 22:57 IST
    17 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் - அர்ஷ்தீப் சிங் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:52 IST
    16 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்த இந்தியா

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் - அர்ஷ்தீப் சிங் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 100  ரன்கள் எடுத்துள்ளது.



  • Jun 09, 2024 22:47 IST
    15 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் - அர்ஷ்தீப் சிங் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:44 IST
    ஜடேஜா அவுட்!

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆட வந்த ஜடேஜா முதல் பந்தில் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினார். 



  • Jun 09, 2024 22:43 IST
    பண்ட் அவுட்!

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 



  • Jun 09, 2024 22:41 IST
    14 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - ஹர்திக் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:36 IST
    துபே அவுட்!

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ஆடி வந்த துபே 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 



  • Jun 09, 2024 22:34 IST
    13 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - துபே  களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. 

     



  • Jun 09, 2024 22:32 IST
    12 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - துபே  களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:28 IST
    சூரியகுமார் யாதவ் அவுட்!

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ஆடி வந்த சூரியகுமார் யாதவ் 8 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 



  • Jun 09, 2024 22:26 IST
    11 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - சூரியகுமார் யாதவ் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:24 IST
    10 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - சூரியகுமார் யாதவ் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:16 IST
    9 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - சூரியகுமார் யாதவ் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:09 IST
    8 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - சூரியகுமார் யாதவ் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 22:07 IST
    அக்சர் படேல் அவுட் 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அதிரடி காட்டி வந்த அக்சர் படேல் 18 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 



  • Jun 09, 2024 22:05 IST
    7 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - அக்சர் படேல் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. 

     



  • Jun 09, 2024 22:01 IST
    பவர் பிளே முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - அக்சர் படேல் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    பவர் பிளே (6 ஓவர்கள்) முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 21:55 IST
    5 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் - அக்சர் படேல் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 09, 2024 21:43 IST
    ரோகித் அவுட்!

    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீராக களமாடிய கேப்டன் ரோகித் 12 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 



  • Jun 09, 2024 21:34 IST
    நின்றது மழை... கோலியின் விக்கெட் காலி!

    இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி, அடுத்தப் பந்தில் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் அவுட் ஆனார். 



  • Jun 09, 2024 21:14 IST
    ஆட்டம் காட்டும் மழை... ஈரப்பதம் காரணமாக போட்டி நிறுத்தம்!

    இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டி நடக்கும் நியூயார்க் மைதானத்தில் மீண்டும் மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 



  • Jun 09, 2024 20:30 IST
    இரு அணிகளின் பிளேயிங் லெவன்

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது அமீர்



  • Jun 09, 2024 20:30 IST
    இரு அணிகளின் பிளேயிங் லெவன்

    இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். 

     



  • Jun 09, 2024 20:27 IST
    மீண்டும் இறங்கிய மழை... போட்டி தொடங்குவதில் தாமதம்

    இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டி நடக்கும் நியூயார்க் மைதானத்தில் மீண்டும் மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 



  • Jun 09, 2024 20:26 IST
    டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்

    இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணியின் கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனால், இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்யும். 



  • Jun 09, 2024 20:03 IST
    8:00 மணிக்கு டாஸ்; 8:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் 

    இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். டாஸ் வெல்லும் அணி மைதானத்தில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.



  • Jun 09, 2024 20:00 IST
    டாஸ் போடுவதில் தாமதம் 

    நியூயார்க் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 



  • Jun 09, 2024 19:27 IST
    இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் 

    பாகிஸ்தான் 

    பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சைம் அயூப், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்



  • Jun 09, 2024 19:27 IST
    இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் 

    இந்தியா 

    ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்



  • Jun 09, 2024 18:39 IST
    டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் -  நேருக்கு நேர்  

    டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா  -  பாகிஸ்தான் அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7ல் இந்தியா வென்றது. 1ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில், அதில் பவுல்-அவுட் மூலம் இந்திய அணி வென்றது. 

    2022ல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடைசியாக நடந்த போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

     



  • Jun 09, 2024 18:34 IST
     டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் -  அதிக மற்றும் குறைந்த ஸ்கோர் 

    இந்தியா (அதிக ஸ்கோர்) எதிராக பாகிஸ்தான்: 192/5 (20) – (அகமதாபாத்; 2012)

    இந்தியா (குறைந்த ஸ்கோர்) எதிராக பாகிஸ்தான்: 133/9 (20) – (பெங்களூரு; 2012)

    பாகிஸ்தான் (அதிக ஸ்கோர்) எதிராக இந்தியா: 182/5 (20) – (துபாய்; 2022)

    பாகிஸ்தான் (குறைந்த ஸ்கோர்) எதிராக இந்தியா: 83 (17.3) – (மிர்பூர்; 2016)



  • Jun 09, 2024 18:34 IST
    டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - நேருக்கு நேர் 

     டி20 போட்டிகளில் இந்தியா  -  பாகிஸ்தான் அணிகள் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8ல் இந்தியா வென்றது. 3ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில், அதில் பவுல்-அவுட் மூலம் இந்திய அணி வென்றது

    கடைசியாக நடந்த 5  டி20 போட்டிகளில் இந்தியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன. 

     



  • Jun 09, 2024 18:15 IST
     டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான்  - இரு அணி வீரர்கள் பட்டியல் 

    பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, ஆசம் கான், ஃபகார் ஜமான், ஹரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் ஷாமான் அப்ரிடி, யுஸ் ஷாமான் அப்ரிடி கான்.



  • Jun 09, 2024 18:14 IST
    டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான்  - இரு அணி வீரர்கள் பட்டியல்

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.



  • Jun 09, 2024 18:12 IST
     டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான்  - 8 மணிக்கு பலப்பரீட்சை 

    டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 



  • Jun 09, 2024 18:10 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



India Vs Pakistan T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment