India Vs Sri Lanka 2nd T20 Live Streaming: இன்று 2-வது டி20 போட்டி: இந்தூர் வானிலை நிலவரம் என்ன?
India Vs Sri Lanka 2020 Live: வெறும் ஒரு நாள் கேப்பில் அடுத்தப் போட்டி நாளை (ஜன.7) தொடங்குகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது
India Vs Sri Lanka 2020 Live: வெறும் ஒரு நாள் கேப்பில் அடுத்தப் போட்டி நாளை (ஜன.7) தொடங்குகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது
இதில், ஜனவரி 5 குவஹாத்தியில் நடைபெறவிருந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டி, மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
Advertisment
Advertisements
போட்டி தொடங்கிய போது, மழை குறுக்கிட்டு, பிறகு நின்ற போது, எப்படியும் போட்டியை பார்த்து விடலாம் என்ற மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய ரசிகர்கள், 'வந்தே மாதரம்' பாடலை அரங்கம் முழுக்க எதிரொலிக்க பாடினர்.
ஆனால், மைதான ஊழியர்கள் ஹேர் டிரையர், வேக்குவம் கிளீனர், அயர்ன் பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்துக் கொண்டிருந்தது கூட தெரியாமல் அப்பாவியாய் பாடிக் கொண்டிருந்தனர். பிறகு, கேமராக்கள் அயர்ன் பாக்ஸை வைத்து ஊழியர்கள் தேய்த்துக் கொண்டிருந்ததை காண்பித்த பிறகு, முகத்தில் ஈயாடாத குறையாக கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டேடியத்தில் இருந்து கிளம்பிச் செல்ல தொடங்கினர்.
இந்நிலையில், வெறும் ஒரு நாள் கேப்பில் அடுத்தப் போட்டி இன்று (ஜன.7) தொடங்குகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டியான இன்றும் மழை குறுக்கிட்டு விடக்கூடாது என தீவிர எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையே போட்டி நடைபெறும் நேரத்தில் (மாலை 7 மணி) இந்தூரில் 20 - 21 டிகிரி செல்ஸியஸ் வெப்பமாக இருக்கும் என்றும் வானம் கிளியராக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில், ஹாட் ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம். தவிர நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் போட்டியின் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் அப்டேட்டுகளை காணலாம்.