India vs West Indies 1st Test Day 3 : இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (6.10.18) தொடங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வரும் மேற்கிந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தாலும், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிரேக் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
India vs West Indies 1st Test Day 3 : விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் மேற்கிந்திய அணி!
அதன்பின் வந்த ஷாய் ஹோப்பும், ஷிம்ரோனும் தலா 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுனில் அம்ப்ரிஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டிஸ் 74 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.
அதனையடுத்து, 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஸ்டன் சேஸுடன் கைகோர்த்த கீமோ பால், 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
read more.. நேற்றைய ஆட்டத்தின் ஹலைட் இதுதான்!
இந்நிலையில், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட, 468 ரன்கள் குறைவாகும்.
அதுமட்டுமின்றி, இந்தியா பெற்ற மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் இது 3வது சிறந்த முன்னிலையாகும். வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் கடந்த 2007ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 492 ரன்கள் பெற்றதே இந்தியாவின் சிறந்த முன்னிலையாகும்.
இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி ஃபாலோ ஆன் கொடுத்ததால், வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் இன்னிங்சை தொடங்கியுள்ளது. தற்போது உணவு இடைவேளை வரை, வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்பின், கீரன் பவல் மட்டும் 83 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் கம் அண்ட் கோ பிராசஸில் மும்முரமாக இருக்க, வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி இதுவேயாகும். இதற்கு முன்னதாக, இதே ஆண்டு பெங்களூருவில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வென்றே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீசின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது மிக மோசமான இன்னிங்ஸ் தோல்வியாகும்.