India vs West Indies LIVE Streaming: இந்தியா, விண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் இன்று (நவம்பர் 6) நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடும் இழுபறிகளுக்கு மத்தியில் இந்தியா வென்றது. எனவே இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பட்டாசை கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் வீரர்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று (நவம்பர் 6) தீபாவளியன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 109 ரன்னை சேஸ் செய்வதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து, தினேஷ் கார்த்திக் மற்றும் க்ருனல் பாண்ட்யாவின் சிறப்பான பேட்டிங்கால் வென்றது. போராடி இந்திய அணி வெற்றிப் பெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றிப் பெறுமா? என்று ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
இண்டீஸை பொறுத்தவரை, அவர்களது மாஸ் பேட்டிங் லைன் அப் சொதப்பினாலும், பவுலிங்கில் மிரட்டினார்கள். இன்றைய போட்டியில், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால், ரோஹித் தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, மெகா மாஸ் பேட்டிங் லைன் அப் மக்கர் செய்தாலும், பவுலிங் அபாரமாக இருந்தது. எப்போதாவது, இந்திய அணியின் பேட்டிங் கொலாப்ஸ் ஆவது உண்டு. அது முதல் போட்டியில் நடைபெற்றது. ஸோ, இன்று அப்படி மீண்டும் நடக்காது என நம்புவோம்.
ரிஷப் பண்ட் பொறுப்புணர்ந்து ஆட வேண்டியது அவசியம். முதல் போட்டியில் அவர் அடித்த படேல் சிலை உயர ஷாட்-லாம் தேவை இல்லாதது.
இந்த இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் உள்ள எகானா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம்.
ஆன்லைனில் Hotstar-ல் போட்டியை லைவாக காணலாம். அதுமட்டுமின்றி, நமது தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் -ல் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை காணலாம்.
மேலும் படிக்க - 'பிசிசிஐ தோற்றுவிட்டது' - அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்