Advertisment

சுப்மன் கில் இடத்திற்கு 2 பேர் வெயிட்டிங்: வி.வி.எஸ்.லட்சுமண் எச்சரிக்கை

Shubman Gill News:

author-image
WebDesk
New Update
சுப்மன் கில் இடத்திற்கு 2 பேர் வெயிட்டிங்: வி.வி.எஸ்.லட்சுமண் எச்சரிக்கை

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க  ஆட்டக்காரர் சுப்மன் கில் தனது துடுப்பாட்ட யுக்தியை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்தார்.

Advertisment

மேலும்,கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள்  வாய்ப்புக்கு காத்திருக்கும் நிலையில், சுப்மன் கில் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும் என்றும்  அறிவுரை வழங்கினார்.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 3-1 என தொடரை வென்றது.

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கில் ரன் ஏதும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். இது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் கில்லின் ரன் விகிதம் 19.83 ஆக இருந்தது.

இந்நிலையில், சுப்மன் கில் குறித்து கருத்து பதிவிட்ட விவிஎஸ். லக்ஷ்மணன், " முதல் மூன்று ஆட்டங்களும் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. இதில், சோபிக்க முடியாமல் போனதை கோட்பாட்டின் அளவில் ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால், நான்காவது ஆட்டத்தில் கில்ளின் பேட்டிங் வருத்தமளிப்பதாக அமைந்ததுள்ளது. முதல் இரண்டு நாட்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகாமான போக்கு நிலவியது. ஆனால், கில் சோபிக்க தவறவிட்டார்.    அவர், தனது துடுப்பாட்ட யுக்தியை மேம்படுத்த வேண்டும். foot position and movement-ல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்தியா மூன்றுக்கு – ஒன்று என்ற ஆட்டக் கணக்கில்  தொடரை கைப்பற்றியது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில், சுப்மன் கில்-ன் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment