Advertisment

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா ஆறுதல் வெற்றி.. சாஹல், ரோஹித் சாதனை.. மேலும் செய்திகள்

டி20 தொடரையும், ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்த இந்தியா, நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் இருந்தது.

author-image
WebDesk
New Update
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா ஆறுதல் வெற்றி.. சாஹல், ரோஹித் சாதனை.. மேலும் செய்திகள்

சாஹல் சாதனை

Advertisment

இந்திய கிரிக்கெட் அணிக்காக 20 ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் யுவேந்திர சாஹல்.

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று   நடைபெற்றது 

இந்த ஆட்டத்தில்  62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதில், சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் யுவேந்திர சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார் .இதனால்  இந்தியாவிற்காக  சர்வதேச  டி20 போட்டியில் அதிக விக்கெட் (67) எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.  பும்ரா (66 ) விக்கெட் எடுத்து இவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார் 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆண்டர்சன், பிராட் நீக்கம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து விளையாடவுள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தில் இருந்து ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

39 வயதான ஆண்டர்சன் இதுவரை 640 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அணிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை என்று போனில் தொடர்பு கொண்டு தெரிவித்த போது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. இத்துடன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன். 

ஒரு வேளை இங்கிலாந்து அணிக்காக இனி என்னால் விளையாட முடியாமல் போனால் எனக்கு ஆதரவாக பலர் உள்ளனர் என்பதை அறிவேன். இன்னும் பங்களிக்க நிறைய உள்ளது. தொடர்ந்து விளையாடும் வேட்கையுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

ஸ்டூவர்டு பிராடும் இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20-ல் அதிக ரன்கள்: ரோஹித் சாதனை

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது லக்னோவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்த போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (3,299 ரன், 112 ஆட்டம்) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். 

ரோகித் சர்மா இதுவரை 123 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 4 சதம், 26 அரைசதம் உள்பட 3,307 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 3,296 ரன்களுடன், 97 ஆட்டம்) 3-வது இடத்திலும், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 2,776 ரன்களுடன் (102 ஆட்டம்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

ஐ.எஸ்.எல்.: மோகன் பகான்-ஒடிஸா ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் மோகன் பகான்-ஒடிஸா அணிகள் மோதின.

கோவாவில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோலை பதிவு செய்தன.

ஆட்ட நேர முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் ஆட்டம் டிரா ஆனது.

இன்றைய ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதவுள்ளன. ஆட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

நியூசி.யின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய மகளிர்

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஒரு டி20, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடியது.

டி20 தொடரையும், ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்த இந்தியா, நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் இருந்தது. தொடர்ந்து நியூசிலாந்து 4 ஒரு நாள் ஆட்டத்திலும் வெற்றி நடை போட்டு வந்தது.

இந்நிலையில், கடைசி ஒரு நாள் ஆட்டம் நேற்று (பிப்.24) நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இது இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

IND vs SL 1St T20: இலங்கையை தும்சம் செய்த இந்தியா : 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது.

இந்தியா தரப்பில் கெய்க்வாட், தீப்தி சர்மா, ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் அரை சதம் விளாசினர்.

மிதாலி ராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment