Advertisment

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score: சென்னை அணி அபார வெற்றி

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score சி.எஸ்.கே vs சன் ரைசர்ஸ் இடையிலான ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
csk-vs-srh-live-score1

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score சி.எஸ்.கே vs சன் ரைசர்ஸ் இடையிலான ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி Live Cricket Score தரப்படுகிறது.

Advertisment

IPL 2018 Final, Live Cricket Score, CSK vs SRH Live Score : ஐபிஎல் 2018 நிறைவு கட்டத்திற்கு வந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆட்டம் இன்று (மே 27) இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

IPL 2018 Final, Live Cricket Score Read English.

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score சி.எஸ்.கே vs சன் ரைசர்ஸ் இடையிலான ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி Live Cricket Score தரப்படுகிறது.

10:47PM : 19வது ஓவரில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வென்றது. இரண்டாண்டுகளுக்கு பின்னர் களம் இறங்கிய சென்னை அணி வெற்றியை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடினார்கள்.

10:45PM : 18ஓவரை சித்தார்த் கவுல் வீசிய கடைசி 2 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்த்தார், வாட்சன்.

10:35 PM: 17 வது ஓவரை ரஷித் கான் வீசினார். ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்து 100 ரன்னை கடந்தார் வாட்சன். ஓவரின் முடிவில் சென்னை 166/2

10:30 PM :16வது ஓவரை புவனெஸ்வர் குமார் வீசினார். ஓவரின் 3வது பந்தை ராயுடு சிக்ஸர் தூக்கினார். ஓவர் முடிவில் சென்னை அணி 152/2

10:25 PM: 15வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் ரஷித் கான் ஒரு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஓவர் முடிவில் சென்னை 146/2

10:20 PM:14வது ஓவரை ப்ராட் ஒயிட் வீசினார். அவருடைய 4வது பந்தில் ரெய்னா அவுடானார். ஓவர் முடிவில் 145/2

10:15PM : 13 ஓவரை சந்தீப் வீசினார். இந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார் வாட்சன். இதன் மூலம் வாட்சன் - ரெய்னா ஜோடி 100 ரன்களை கடந்தது. கடைசி பந்தில் வாட்சன் பவுண்டரிக்கு விளாசினார். ஓவர் முடிவில் சென்னை 131/1.

10:10 PM: 11 ஓவர் முடிவில் சென்னை அணி 105/1

10: 05PM: 11வது ஓவரை ஷகிப் வீசினார். முதல் பந்தை வாட்சன் சிக்ஸருக்கு விரட்டினார். அதன் மூலம் அவர் அரை சதத்தைக் கடந்தார். ஓவரின் கடைசி பந்தை ரெய்னா சிக்ஸர் அடித்தார். சென்னை அணி 95/1.

10: 00 PM : 10வது ஓவரை ரஷித் கான் வீசினார். ஓவரின் முடிவில் சென்னை அணி 79/1.

9:55 PM : 9 வது ஓவரை சித்தார்த் கெளல் வீசினார். ஓவரின் 3வது பந்தில் வாட்சன் சிக்ஸர் அடித்தார். 4வது பந்தில் வாட்சன் 2 ரன்கள் எடுத்தார். 5 வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் 2 ரன்களையும் அடித்தார், வாட்சன். வாட்சன், ரெய்னா ஜோடி 29 பந்தில் 50 ரன்களை சேர்த்தது. ஓவர் முடிவில் 72 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது, சென்னை

9:45 PM : 8வது ஓவரை ரஷித் கான் வீசினார். ஓவர் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.

9:40 PM : 7வது ஓவரை சித்தார்த் கெளல் வீசினார். 2 வது பந்தை வாட்சன் சிக்ஸருக்கு விரட்டினார். 3வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் மீண்டும் பவுண்டரி, ரெய்னா மூலம் கிடைத்தது. ஓவர் முடிவில் சென்னை 51/1

9:35 PM : பவர் பிளேயின் கடைசி ஓவரை சந்தீப் வீசினார். 3வது பந்தை வாட்சன் சிக்ஸர் விளாசினார். 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 5வது பந்துக்கு ஒரு ரன் ஓடிய போது ரன் அவுட் வாய்ப்பு மிஸ்ஸானது. ஓவரின் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.

9:30 PM : ஐந்தாவது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ரெய்னா முதல் பந்தை சந்தித்து ஒரு ரன் எடுத்தார். ஓவர் முடிவில் 21 ரன்கள் எடுத்தது.

9:22 PM : நான்காவது ஓவரை சந்தீப் வீசினார். 10 பந்துகளை சந்தித்த வாட்சன் ரன் எடுக்காமல் தடுமாறினார். 11வது பாலை சந்தித்த அவர் லாங் ஆன் திசையில் பவுண்டரி அடித்து தனது கணக்கைத் தொடங்கினார். ஓவரின் கடைசி பந்தில் டூப்ளக்ஸிஸ் தூக்கி அடித்து சந்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 4வது ஓவர் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது.

9:16 PM : மூன்றாவது ஓவரை புவனேஸ்வர்குமார் வீசினார். ஐந்தாவது பந்தில் டூப்ளஸிஸ் ஒரு ரன் எடுத்தார். ஓவர் துரோவில் 4 ரன்கள் கிடைத்தது. மூன்று ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்தது.

9:11 PM : இரண்டாவது ஓவரை சந்தீப் வீசினார். இரண்டாவது பந்தை டூப்ளஸிஸ் பவுண்டரிக்கு விரட்டினார். 2வது ஓவர் முடிவில் சென்னை அணி 5 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தது.

9:05 PM : சென்னை அணியின் ஒப்பனர்களாக வாட்சன், டூப்ளக்ஸிஸ் ஆகியோர் களமிறங்கினர். ஐதராபாத் அணி சார்பாக முதல் ஓவரை புவனேஸ்குமார் வீசினார். முதல் ஓவர் மெய்டன் ஓவராக அமைந்தது.

8:55 PM : 20 ஒவர் முடிவில் ஐதராபாத் அணி 178 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. 179 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8:25 PM : 15.5-வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் 23 ரன்களில் பிராவோ பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் ஆனார். அப்போது சன் ரைசர்ஸ் ஸ்கோர் 133/4.

8:15PM : 14 ஓவர்களில் சன் ரைசர்ஸ் 117 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான் ஜோடி விளையாடி வருகிறது.

8:05PM : 12 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் 101 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வில்லியம்சன் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார். கரன் ஷர்மா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

7:55PM: 10-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 3 ரன்களே கொடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே 73/2. ஷிகர் தவான், கோஸ்வாமி அவுட்!

IPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: How to watch 'Live' on mobile?

7:50 PM : 9வது ஓவரை ஜடேஜா வீசினார். ஜடேஜாவின் 2வது பந்தில் தவான் (26) க்ளின் போல்டானார். ஷகிப் அல் ஹசன் விளையாட வந்துள்ளார். முதல் பந்திலெயே 4 ரன்கள் கிடைத்தது. 9வது ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 70/2

7:45 PM : 8வது ஓவரை ப்ராவோ வீசினார். இந்த ஓவரின் 5 வது பந்தை பவுண்டரிக்கும், கடைசி பந்தை சிக்ஸருக்கும் விளாசினார், வில்லியம்சன். அணியின் ஸ்கோர் 62/1 ஆக உயர்ந்தது.

7:40 PM : 7வது ஓவரை கரண் ஷர்மா வீசினார். கரண் சர்மாவின் 5 வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார், தவான். 7 வது ஓவரின் முடிவில் ஐதராபாத் அணி 51/1 ரன்கள் எடுத்தது.

7:30 PM : பவர் ப்ளேயின் கடைசி ஓவரை தாக்கூர் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். ஆறாவது ஓவர் முடிவில் ஐந்தராபாத் அணி 42/1 ரன்கள் எடுத்திருந்தது.

7:25 PM : ஐதாவது ஓவரை சாஹர் வீச்சினார். 2வது பந்தை சந்தித்த வில்லியம்சன் சிக்சருக்கு விரட்டினார். நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஐந்தாவது ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 30/1 ரன்கள் எடுத்திருந்தது.

7:20 PM : இங்கிடி வீசிய நான்காவது ஓவர் மெயிடன் ஓவராக அமைந்தது.

7:15 PM : மூன்றாவது ஒவரின் முடிவில் ஐதராபாத் அணி 17/1 ரன்கள் அடித்தது.

7:10 PM: சென்னை அணியின் 2 ஓவரை இங்கிடி வீசினார். ஐதராபாத் அணியின் முதல் பவுண்ட்ர் 2.2 ஒவரில் வந்தது. 5வது பந்தில் கோஸ்வாமி (5) ரன் அவுட் ஆனார். ஸ்கோர் 13/1. வில்லியம்ஸன் இரண்டாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார்.

7 PM :சென்னை அணியின் முதல் ஓவரை சாஹல் வீசினார். ஐதராபாத் அணியின் தொடக்க வீஇரகளாக தவான், கோஸ்வாமி ஆகியோர் களம் இறங்கினர். முதல் பந்தை சாஹல் நோ பாலாக வீசினார். முதல் ஓவரில் ஐதராபாத் 6 ரன்களை எடுத்தனர்.

6:35PM : சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ‘டாஸ்’ ஜெயித்து பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

6:20PM : பெரும்பாலான பிரபலங்கள் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸைவிட சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள். இந்தத் தொடரிலேயே 3 முறை சன் ரைசர்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

6:20PM : இன்று (மே 27) இரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. முன்னதாக இந்தி நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score சி.எஸ்.கே vs சன் ரைசர்ஸ் இடையிலான ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி Live Cricket Score தரப்படுகிறது.

 

 

Chennai Super Kings Ipl 2018 Sunrisers Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment