Advertisment

CSK vs MI 2019 Live Streaming: ஐபிஎல் 2019 சிறந்த தருணங்கள்...

When and Where to Watch MI vs CSK Live on TV: மும்பை vs சென்னை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl 2019, mi vs csk live streaming

ipl 2019, mi vs csk live streaming

IPL 2019 CSK vs MI Live Streaming on TV: ஐபிஎல் 2019 தொடரின் கிளைமேக்ஸ் வந்தாச்சு!! ஜெயிக்கப் போவது சென்னையா, மும்பையா என்ற எதிர்பார்ப்பு தேர்தல் ஜூரத்தை எல்லாம் 'அப்படிக்கா போய் உட்காரு' என்று சொல்ல வைத்திருக்கிறது.

Advertisment

ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் சென்னையும், மும்பையும் கோதாவில் குதித்திருப்பதால், வழக்கத்தை விட கூடுதல் டிஆர்பி கிடைக்கும் என்பது மெகா உறுதி!!

ஆனால், இங்கு நிலவரம் சற்று கலவரமாக இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கசப்பான உண்மை என்பதை மறந்துவிடக்கூடாது. ஆம்! சென்னை அணியை கம்பேர் செய்கையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று மடங்கு பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.

பேட்டிங்,

பவுலின்,

பீல்டிங்

என மூன்றிலும் இந்த மூன்று மடங்கு ஃபார்முலா பொருந்தும். நிலைமை இப்படியிருக்க, சிஎஸ்கே வெற்றிப் பெறுவது என்பது ஏதாவது ஆச்சர்யமான சம்பவங்கள் பல நடந்தால் ஒழிய சாத்தியமில்லை.

மேலும் படிக்க - டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்

இதைக் கேட்க கடினமாக இருந்தாலும், உண்மை இதுவே.

தோனி + பவுலிங் சென்னை அணியின் பலம்

மும்பைக்கு எல்லாமே பலமாக இருக்க, பலவீனம் எது என்பதை லென்ஸ் வைத்து கூட கண்டறிய முடியவில்லை.

இருந்தாலும், ஏதாவது அதிசயங்கள் நடக்கும் என 'சித்தக்கூர்' சேவுகப் பெருமாளை வேண்டிக்கிட்டு காத்திருப்போம்.

மேலும் படிக்க - தோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்! அப்படித்தானே!!

இந்த இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக காணலாம். ஆன்லைனில், ஹாட்ஸ்டார் ப்ரீமியமில் காணலாம். ஹைதராபாத் உப்பல் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் நீங்கள் கண்டு களிக்கலாம்.

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment