நம்பர்.1 இடத்தில் மும்பை இந்தியன்ஸ்… பிளே ஆஃப்க்குள் நுழைந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL MI vs KKR: மும்பை வெற்றி

MI vs KKR Live Score, MI vs KKR Playing 11 Live Score
MI vs KKR Live Score, MI vs KKR Playing 11 Live Score

IPL 2019 MI vs KKR: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.5) இரவு வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

மேலும் படிக்க – லோகேஷ் ராகுல் அதிரடியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப்

Live Blog

IPL 2019: MI vs KKR


23:27 (IST)05 May 2019

பிளே ஆஃப்க்கு முன்னேறிய டாப் 4 அணிகள்

மும்பை இந்தியன் – 18 புள்ளிகள் – +0.421

சென்னை சூப்பர் கிங்ஸ் – 18 புள்ளிகள் – +0.131

டெல்லி கேபிடல்ஸ் – 18 புள்ளிகள் – +0.044

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – 12 புள்ளிகள் – +0.577

23:24 (IST)05 May 2019

கொல்கத்தா அவுட்… ஹைதராபாத் இன்

மும்பையுடனான இன்றைய தோல்வியால், கொல்கத்தா 12 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியது. ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அதிக ரன் ரேட் பெற்றதால், 12 புள்ளிகளுடன் நான்காவது அணியாக பிளே ஆஃப்-க்குள் நுழைந்தது.

23:19 (IST)05 May 2019

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

16.1 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

23:00 (IST)05 May 2019

சிஎஸ்கே ஸ்பாட் என்ன?

சரி… மும்பை ஜெயிக்கப் போறது தெரிஞ்ச கதை தான். புள்ளிப் பட்டியலில் எத்தனையாவது இடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதே கேள்வி. 

இதுல கேள்விக்கு என்ன வேலை… நம்பர்.1 தான். ரன் ரேட் படி மும்பை முதலிடத்துக்கு செல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் 2ம் இடத்திற்கு தள்ளப்படும். 

22:50 (IST)05 May 2019

88/1

11 ஓவர்கள் முடிவில், மும்பை 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. 

ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் களத்தில்…

22:38 (IST)05 May 2019

டி காக் அவுட்

தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஆடிய டி காக், 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். 

ஆனால், உண்மையில் அது மெர்சலான கேட்ச்

22:29 (IST)05 May 2019

ரோஹித் vs நரைன் (டி20க்களில்)

107 பந்துகள்
109 ரன்கள்
7 முறை அவுட்
SR 101.87
4s/6s 11/2

22:22 (IST)05 May 2019

45-0

5 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது. 

3 சிக்ஸர்களுடன் டி காக் 29 ரன்கள் எடுத்து களத்தில்…

22:08 (IST)05 May 2019

எளிய இலக்கை நோக்கி மும்பை

134 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர்ஸ் ரோஹித் ஷர்மா, டி காக்…

21:46 (IST)05 May 2019

134 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. 

பவர் பிளேயில் 49-0. 

டோட்டல் ஸ்கோர் – 133

21:27 (IST)05 May 2019

114/4

17 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. 

21:08 (IST)05 May 2019

ரசல் அவுட்

தினேஷ் கார்த்திக் 3 ரன்னில், மலிங்கா ஓவரில் கேட்சாக அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆந்த்ரே ரசல், அதே ஓவரில் 0 ரன்னில் கீப்பர் கேட்ச் ஆக, அம்பானி குடும்பத்தில் ஏகத்துக்கும் கொண்டாட்டம்!

20:42 (IST)05 May 2019

க்ரிஸ் லின் அவுட்

அடப்பாவமே!! இந்தாளுக்கு ஸ்டார்ட்டிங் பிரச்சனை இல்லை.. பினிஷிங் தான் பிரச்சனை. எப்போ பார்த்தாலும் நல்லா அடிக்க வேண்டியது. அப்புறம் அதே நல்ல ஸ்கோருக்கு கன்வே பண்ணாம அவுட்டாக வேண்டியது. 

ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 29 பந்துகளில் 41 ரன்களில் க்ரிஸ் லின் அவுட்

20:31 (IST)05 May 2019

கில் அவுட்

கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசி அசத்திய ஷுப்மன் கில், இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 9 ரன்களில் வெளியேறினார்.

போயும் போயும் ஹர்திக் ஓவருல அவுட்டான பாரு.. ச்சை…!

20:29 (IST)05 May 2019

வாவ்.. இது தான் சாத்தல்

கொல்கத்தா ஓப்பனர்ஸ் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், க்ரிஸ் லின் தனது கியரை சரமாரியாக மாற்ற, தற்போது 6 ஓவர்கள் முடிவில் 49-0. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதே நல்ல விஷயம் தான்.

20:17 (IST)05 May 2019

வெல்கம் மலிங்கா

மலிங்காவின் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, ஷாட் பந்தில் ஒரு சிக்ஸ் என ஸ்வீட் வெல்கம் கொடுத்திருக்கிறார் க்ரிஸ் லின். 

யார்க்கர்-ங்கற ஒரு ஆயுதம் இல்லைனா, மலிங்கா உண்மையில் ஒரு டம்மி பீஸ் என்பதில் சந்தேகமில்லை. 

20:10 (IST)05 May 2019

இது அட்டாக் புலி

மும்பை பவுலர்ஸ் தொடக்கம் முதலே அதிக யார்க்கர்ஸ் துல்லியமாக வீசி வருகின்றனர். கொல்கத்தா ஓப்பனர்ஸ்களை அவ்வளவு சீக்கிரத்தில் அடிக்க விடாமல் பந்து வீசுகின்றனர். 

இந்த மொமன்ட்ஸ், இன்றைய நாள் மும்பைக்கானது என்பதை நமக்கு காட்டுகிறது.

20:08 (IST)05 May 2019

லின்கில் களத்தில்….

புரியலை-ல… அதான் வேணும்.

அதாவது ஷுப்மன் கில், க்ரிஸ் லின் கொல்கத்தா ஓப்பனர்ஸ்களாக களத்தில்…

20:02 (IST)05 May 2019

கொல்கத்தா பேட்டிங்

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்ய, வாழ்வா சாவா ஆட்டத்தில் கொல்கத்தா களமிறங்கியுள்ளது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2019 mi vs kkr live cricket score updates

Next Story
லோகேஷ் ராகுல் அதிரடியில் பஞ்சாப் ஆறுதல் வெற்றி!CSK vs KXIP Live Score, CSK vs KXIP Playing 11 Live Score
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com