Advertisment

MI vs SRH: சூப்பர் ஓவரில் வென்று பிளே ஆஃப்-ல் நுழைந்த மும்பை இந்தியன்ஸ்!

IPL MI vs SRH: மும்பை வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MI vs SRH Live Score, MI vs SRH Playing 11 Live Score

MI vs SRH Live Score, MI vs SRH Playing 11 Live Score

IPL 2019 MI vs SRH: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று(மே.2) இரவு 8 மணிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சூப்பர் ஓவரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

Live Blog

Advertisment

IPL 2019: MI vs SRH



























Highlights

    00:08 (IST)03 May 2019

    பிளே ஆஃப்-ல் மும்பை இந்தியன்ஸ்

    இப்போட்டியின் வெற்றி மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

    00:07 (IST)03 May 2019

    0.3

    பொல்லார்ட் - 2

    மும்பை வெற்றிப் பெற்றது.

    00:05 (IST)03 May 2019

    0.2

    ஹர்திக் - 1 

    00:04 (IST)03 May 2019

    0.1 (ஹர்திக், பொல்லார்ட் பேட்டிங்)

    ஹர்திக் - சிக்ஸ்

    00:02 (IST)03 May 2019

    இது அட்டாக் புலி

    ஹைதராபாத் அணி சார்பாக, ரஷித் கான் பந்து வீசுவார் என கேப்டன் வில்லியம்சன் அறிவிக்க, மும்பை டக் அவுட்டில் தீவிர டிஸ்கஷன்.

    23:58 (IST)02 May 2019

    0.4

    நபி - அவுட்

    மும்பைக்கு 9 ரன்கள் இலக்கு

    23:57 (IST)02 May 2019

    0.3

    நபி - 6

    23:57 (IST)02 May 2019

    0.2

    கப்தில்  - 1

    23:55 (IST)02 May 2019

    மனீஷ் பாண்டே அவுட்

    பும்ரா வீசிய முதல் பந்திலேயே, மனீஷ் பாண்டே ரன் அவுட்டாக, வான்கடே அதிர்கிறது!.

    23:54 (IST)02 May 2019

    மனீஷ் பாண்டே, நபி

    மார்டின் கப்தில் இருக்கும் போது, மனீஷ் பாண்டே, முகமது நபியை ஏன் சூப்பர் ஓவரில் இறக்கி விட்டார்கள் என தெரியவில்லை. 

    23:48 (IST)02 May 2019

    சூப்பர் ஓவர்

    கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மனீஷ் பாண்டே 6 அடிக்க, ஆட்டம் டிராவானது. 

    இதனால், நடப்பு தொடரில், இரண்டாவது சூப்பர் ஓவர் ஆட்டத்தை ரசிகர்கள் காண உள்ளனர். 

    23:46 (IST)02 May 2019

    20.0

    மனீஷ் பாண்டே - 6

    23:44 (IST)02 May 2019

    19.5

    மனீஷ் பாண்டே - 2 

    23:43 (IST)02 May 2019

    19.4

    நபி - அவுட்

    20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நபி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    23:42 (IST)02 May 2019

    19.3

    நபி - 6

    23:41 (IST)02 May 2019

    19.2

    மனீஷ் பாண்டே - 1 ரன்

    23:40 (IST)02 May 2019

    19.1 (ஹர்திக் பாண்ட்யா பவுலர்)

    நபி - 1 ரன்

    23:39 (IST)02 May 2019

    6 பந்துகளில் 17

    சன் ரைசர்ஸ் வெற்றிப் பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. 

    மனீஷ் பாண்டே வெற்றியைத் தேடித் தருவாரா?

    23:33 (IST)02 May 2019

    12 ரன்களில் 29

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிப் பெற 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை. 

    களத்தில் மனீஷ் பாண்டே, நபி... மலிங்காவின் 4 ஓவர்களில் 43 ரன்கள் விளாசப்பட்டது.

    23:24 (IST)02 May 2019

    மனீஷ் பாண்டே 50

    நாம அப்போதிலிருந்தே பாண்ட பாண்டே-னு கதறிட்டு இருக்கோம். அதற்கேற்றா மாதிரி பெயரை காப்பாற்றி இருக்கிறார் மனீஷ்.

    மற்றொரு அரைசதத்தை விளாசி, கடைசி நம்பிக்கையாக மிளிர்கிறார்.

    23:15 (IST)02 May 2019

    அபிஷேக்கா.. பேரு புடிக்கல கிளம்பு

    ஹர்திக் பாண்ட்யா என்ற அற்புத பவுலரின் ஓவரில், அபிஷேக் ஷர்மா எனும் வீரர் 2 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். 

    இதை என்னத்த சொல்ல...

    23:07 (IST)02 May 2019

    இன்னைக்கும் ஒன்னும் பண்ணல...

    விஜய் ஷங்கர் மீது அளவுக்கு அதிகமாக டி20 நம்பிக்கை வைத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

    இந்தப் போட்டியிலும் வெறும் 12 ரன்களில் க்ருனால் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    23:00 (IST)02 May 2019

    வெற்றியை நெருங்குகிறதா ஹைதராபாத்?

    12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது ஹைதராபாத். 

    யார்யா இவன்? முத்துப் பாண்டி கோட்டைக்கு உள்ளேயே வந்து அடிக்குறான்!!

    22:42 (IST)02 May 2019

    ஆக்ரோஷம் காட்டும் பாண்டே

    முதல் பாதியில் படு மோசமாக விளையாடி, பின் இரண்டாம் பாதியில் பார்முக்கு திரும்பிய தவானைப் போல, செகண்ட் ஹாஃபில் மெகா ஃபார்முக்கு திரும்பியவர் மனீஷ் பாண்டே.

    இன்றைய போட்டியில் அவரது மாஸ் தொடர்கிறது.

    22:32 (IST)02 May 2019

    போச்சே.. போச்சே...

    மனீஷ் பாண்டே, மலிங்கா ஓவரில் 17 ரன்கள் விளாசிய பிறகு, 5வது ஓவரை வீசிய பும்ராவிடம் எல்பிடபிள்யூ ஆகி 15 ரன்களில் வெளியேறினார் வார்னருக்கு மாற்றாக வந்த கப்தில்.

    பும்ராவுக்கு 2வது விக்கெட்

    22:23 (IST)02 May 2019

    சாஹா அவுட்

    பும்ரா ஓவரில் இரண்டு லவ்லி பவுண்டரிகளை ஓட விட்ட ரிதிமான் சாஹா, 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவர் ஓவரிலேயே கேட்ச் ஆனார்.

    களமிறங்கப் போவது கிரேட் மனீஷ் பாண்டே!.

    22:20 (IST)02 May 2019

    ஸ்மார்ட் தொடக்கம்

    ஹைதராபாத் அணியின் ஓப்பனர்ஸ் மிக நிதானமாக ஆட்டத்தை தொடக்கி நகர்த்தி சென்று வருகின்றனர். 3 ஓவர்களுக்கு 30 ரன்களை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ்.

    22:11 (IST)02 May 2019

    முதன் முறையாக கப்தில்

    வார்னருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில் இன்று களமிறங்கியுள்ளார். மறந்துவிடாதீர்கள்… தன பெயரில் இரண்டு டி20 சதங்களை பதிவு செய்து வைத்திருக்கும் அபாயகரமான பேட்ஸ்மேன் இவர்… ஆனால், இன்கன்சிஸ்டன்சி இவரது பலவீனம்.

    21:53 (IST)02 May 2019

    163 ரன்கள் இலக்கு

    மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. 

    டி காக் 58 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட பாதி இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.

    21:31 (IST)02 May 2019

    அரைசதம் தாண்டி தெறிக்கும் டி காக்

    நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்காவது அரைசதத்தை பூர்த்தி செய்த குயிண்டன் டி காக், இனியாவது அதிரடியாக ஆடுவாரா என்று பார்ப்போம்.

    21:22 (IST)02 May 2019

    பாண்ட்யா அவுட்

    பாண்ட்யா சோலியை நாமே முடிச்சிட்டோம்-னு நினைக்குறேன். புவனேஷ் குமார் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களில் கேட்ச் ஆக, வான்கடே ரெஸ்ட் இன் சைலண்ட்!!

    21:14 (IST)02 May 2019

    ராக்ஸ்டார் பாண்ட்யா

    லெவிஸ் விக்கேட்டுக்குப் பிறகு களமிறங்கி இருப்பது ஹர்திக் பாண்ட்யா. 

    இறங்கிய முதல் ஓவரிலேயே, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ்...

    இந்த சீசனில் இதுவரை 28 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார் இந்த மனிதர்.

    21:05 (IST)02 May 2019

    இங்க ஒருத்தர் இருந்தாரே எங்கப்பா?

    முகமது நபி எப்போதெல்லாம் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் விக்கெட் எடுத்துப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

    எவின் லெவிஸ் 1 ரன்னில் நபி ஓவரில் கேட்சாக, மும்பை தனது 3வது விக்கெட்டை இழந்தது.

    20:58 (IST)02 May 2019

    சூர்யகுமார் யாதவ் அவுட்

    சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் ரஷித் கான் ஓவரில் சிக்ஸ் லைனில் கேட்ச் ஆனார். நல்ல ரன் ரேட்டுடன் ஆடி வரும் மும்பை, 200 ரன்களை நெருங்க நல்ல வாய்ப்புள்ளது.

    20:36 (IST)02 May 2019

    53-1

    7 ஓவர்கள் முடிவில் மும்பை 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. 

    டி காக், சூர்யகுமார் யாதவ் களத்தில்.....

    20:26 (IST)02 May 2019

    பொசுக்கென்று காலியான ரோஹித்

    நல்ல டச்சில் ஆடிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மா, கலீல் அஹ்மது ஓவரில், புல் ஷாட் ஆட நினைத்து, டைமிங் மிஸ்ஸாக 24 ரன்களில் கேட்ச் ஆனார். 

    ஹிட்மேன்னு சொல்லி சொல்லியே காலி பண்ணிட்டீங்களே டா!!

    20:16 (IST)02 May 2019

    களத்தில் ஹிட்மேன்

    மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் ரோஹித் - டி காக். 

    அதில், ரோஹித் இன்று ஆரம்பத்திலேயே கியர் மாற்றி ஆடி வருவதைப் பார்த்தால், ஒரு பெரிய ஸ்கோர் காத்திருக்குன்னு நினைக்குறேன்.

    19:55 (IST)02 May 2019

    அந்தரத்தில் ராஜஸ்தான் நிலைமை!

    இன்றைய போட்டியில் மும்பை வென்றால், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப்-க்கு அந்த அணி முன்னேறும். சன் ரைசர்ஸ் வென்றால், 14 புள்ளிகளுடன் அந்த அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர்களின் ரன் ரேட் மிக அதிகம். ஆனால், சன் ரைசர்ஸ் வெல்லும் பட்சத்தில் ராஜஸ்தான் வெளியேற்றப்படும்.

    19:51 (IST)02 May 2019

    மும்பை பிளேயிங் XI

    ரோஹித் ஷர்மா(c), டி காக்(wc), சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, பரிந்தர் ஸ்ரன், ராகுல் சாஹர், ஜஸ்ப்ரீத் பும்ரா, லசித் மலிங்கா

    19:40 (IST)02 May 2019

    மும்பை பேட்டிங்

    டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

    வச்சு நல்லா செய்யுறதுக்கு இந்த முடிவோ!!

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment