இறுதிக் கட்டத்தில் சரிந்த விக்கெட்டுகள்… இப்படியும் ஜெயிக்கலாம் என கற்பித்த பஞ்சாப் அணி!

IPL 2019, Rajasthan Royals vs Kings XI Punjab: பஞ்சாப் த்ரில் வெற்றி

Rajasthan Royals vs Kings XI Punjab

IPL 2019 RR vs KXIP: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடந்த 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதின. இதில், கிங்ஸ் XI பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

IE Tamil commentary

Indian Premier League, 2019Sawai Mansingh Stadium, Jaipur 05 April 2020

Rajasthan Royals 170/9 (20.0)

vs

Kings XI Punjab 184/4 (20.0)

Match Ended ( Day - Match 4 ) Kings XI Punjab beat Rajasthan Royals by 14 runs

Live Blog

IPL 2019: RR vs KXIP Live, Rajasthan Royals vs Kings XI Punjab

23:37 (IST)25 Mar 2019
பஞ்சாப் வெற்றி!

14 ரன்கள் வித்தியாசத்தில் அஷ்வினின் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 

23:33 (IST)25 Mar 2019
கிருஷ்ணப்பா அவுட்!

அட போங்கப்பா.... 164-9

23:32 (IST)25 Mar 2019
8.40 கோடி அவுட்!

அதாங்க.... நம்ம ஜெயதேவ் உணட்கட் அவுட்

23:29 (IST)25 Mar 2019
ஆர்ச்சர் ரன் அவுட்!

அடுத்த விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான்! யாரோ பெருசா திருஷ்டி வச்சுடாங்க போல... ஒருவேள, நாம தான் கணிப்பு கண்ணாயிரம்-ங்கற பேருல கண்ணு வச்சிடமோ!!! 19 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 164-7

23:24 (IST)25 Mar 2019
திரிபாதி அவுட்!

என்னய்யா பண்றீங்க!! ராகுல் திரிபாதி அவுட்! முஜீப் உர் ரஹ்மான் ஓவரில் இவரும் அவுட்டாக, ஆட்டத்தில் பரபரப்பு

23:21 (IST)25 Mar 2019
பென் ஸ்டோக்ஸ் அவுட்!

முஜீப் உர் ரஹ்மானின் ஓவரில், முதல் பந்தில் சிக்ஸ் அடித்த பென் ஸ்டோக்ஸ், அவரது அடுத்த கூக்ளி பந்தில் மீண்டும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆனார். கடந்த 20 நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சி.

23:18 (IST)25 Mar 2019
சஞ்சு சாம்சன் அவுட்!

நீ நல்லா போட்டதால விக்கெட் விழுந்துச்சா... இல்ல விக்கெட் கிடைச்சதால, நீ நல்லா போட்ட-னு அர்த்தமானு கேட்பது போல், இந்த ஓவரில் இரண்டாவது விக்கெட்டாக சஞ்சு சாம்சனும் கேட்ச் ஆனார். 2 இன் 2.

23:16 (IST)25 Mar 2019
பிரம்மிக்க வைத்த ராகுல்....

சாம் குர்ரன் பந்தில், பந்தை லாங் ஆஃப்-ல் தூக்கி அடிக்க, 1995களில்  பூஸ்ட் விளம்பரத்துக்கு வரும் சச்சின் பாய்ந்து வந்து பந்தை பிடிப்பதை போல, ஒரு அட்டகாசமான கேட்சை பிடித்து அசத்தினார் லோகேஷ் ராகுல்

23:12 (IST)25 Mar 2019
வெற்றியை நோக்கி....

யாருன்னு தான கேட்குறீங்க... அது தெரிஞ்சா நாங்க சொல்ல மாட்டோமா..? பட், எங்க 'கணிப்பு கண்ணாயிரம்' என்ன சொல்றார்-னா, ராஜஸ்தான் தான் ஜெயிக்குமாம்!!! 

23:00 (IST)25 Mar 2019
2 ஃப்ரீ ஹிட்!

ராஜ்புட் அடுத்தடுத்து 2 ஃப்ரீ ஹிட் பந்துகளை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீசியும், 2 பந்திலும் ஒரு ரன் கூட அடிக்கவில்லை, ஒரு வருட தடை காலத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ஸ்மித்.... நான் யாரு??? நான் இப்போ எங்க இருக்கேன்?

22:55 (IST)25 Mar 2019
பஞ்சாப் வெற்றிப் பெறுமா?

இப்போதுள்ள நிலவரப்படி, நம்ம கணிப்பு கண்ணாயிரம் என்ன சொல்றார்-னா, 65% ராஜஸ்தானுக்கும், 35% பஞ்சாபுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்குறதா சொல்றார்!!.

22:53 (IST)25 Mar 2019
இதுவும் அஷ்வின் மேஜிக் தான்!

12.6வது ஓவர்...அஷ்வின் பந்துவீச, எதிர்முனையில் இருந்த பட்லர், கிரீஸை விட்டு முன்னோக்கி நகர, அஷ்வின், பைல்ஸை தட்டிவிட்டு, ரன் அவுட் அப்பீல் செய்தார்... அவுட்!! யெஸ்... ஹீ ஈஸ் அவுட்! 69 ரன்களில் பட்லர் வெளியேற்றப்பட்டார். இருவருக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் திட்டிக் கொண்டே வெளியேறினார் பட்லர்... பிம்பிலிக்கி பிலாக்கி....

22:46 (IST)25 Mar 2019
100-1

12வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது ராஜஸ்தான்... இப்படியே போனா....? ஏதாவது பண்ணுங்க பஞ்சாப்! இந்த ஜெய்ப்பூர் ஸ்டேடியத்துல, இதுவரை ஒரு மேட்சை கூட வென்றதில்லை-ங்கற ராஜஸ்தானோட ஏக்கம் இன்னைக்கு தீர்ந்திடும் போல....

22:38 (IST)25 Mar 2019
பட்லர் 50*

2018 சீசன் இன்னும் முடியல-னு பட்லர் நினைச்சிட்டாரு போல... மீண்டும் ஒரு 50.... பட்லரின் பேட்-டுக்கு ஒரு எண்டே கிடையாதா!!?

22:34 (IST)25 Mar 2019
இதுதான் அஷ்வின் மேஜிக்!

இது தான் அஷ்வின்-ங்கறது.... என்ன மாதிரியான கேரம் பால் அது!!! அஷ்வினை இந்திய அணியை விட்டு விலக்கி வைத்திருக்கும் பிசிசிஐ-க்கு ரஹானேவின் பின்னால் பறந்த ஸ்டெம்ப்புகள் ஒரு சான்று!

22:30 (IST)25 Mar 2019
கணிப்பு கண்ணாயிரம்!

இப்போதுள்ள நிலவரப்படி, நமது கணிப்பு கண்ணாயிரம் என்ன சொல்றார்-னா, 78% ராஜஸ்தான் ஜெயிக்க தான் வாய்ப்புள்ளதாம்!... 

22:23 (IST)25 Mar 2019
அஷ்வின் பராக்!

வாப்பா... வாப்பா... சீக்கிரம் வாப்பா... என்னா அடி அடிக்குறாய்ங்க.... 

22:21 (IST)25 Mar 2019
ஜோஸ் பட்லர் கபளீகரம்

5.2வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தது ராஜஸ்தான்... அதிலும், சக இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் பந்துவீச்சை, மனசாட்சி இல்லாமல் அடித்து சாத்தினார் ஜோஸ் பட்லர். சாம்-ன் ஆறாவது ஓவரில் 19 ரன்கள்... செம சாத்து-ல....

22:12 (IST)25 Mar 2019
பட பட பட்லர்

ஆப்கானிஸ்தானின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடித்து தனது இன்னிங்சை தொடங்கியுள்ளார் ஜோஸ் பட்லர்.

22:00 (IST)25 Mar 2019
முதல் ஓவரில் 12 ரன்கள்

சாம் குர்ரன் வீசிய முதல் ஓவரில், கேப்டன் ரஹானே 3 அழகான பவுண்டரிகளை டச் செய்தார். உண்மையில் ஒரு நேர்த்தியான ஷார்ட்ஸ் அது!

21:57 (IST)25 Mar 2019
களமிறங்கியது ஆர்ஆர்

தொடக்க வீரர்களாக அஜின்க்யா ரஹானே, ஜோஸ் பட்லர்,,,

21:55 (IST)25 Mar 2019
ஜெய்பூரில் பெஸ்ட் சேஸிங்

197 ராஜஸ்தான்  vs டெல்லி, 2012179 ராஜஸ்தான் vs புனே, 2013177 ராஜஸ்தான் vs சிஎஸ்கே, 2018172 ராஜஸ்தான்  vs பெங்களூரு, 2013

21:44 (IST)25 Mar 2019
185 ரன்கள் இலக்கு!

கடைசி பந்தில் சர்ஃப்ரஸ் சிக்ஸுடன் முடிக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

21:36 (IST)25 Mar 2019
பூரன் அவுட்!

ஸ்டோக்ஸ் பந்தில் 12 ரன்களில் பூரன் கேட்ச் ஆனார். லாங்-ஆஃப்-ல் ரஹானேவிற்கு ஒரு எளிதான கேட்ச்

21:35 (IST)25 Mar 2019
டார்கெட் என்ன?

19 ஓவர்கள் முடிவில் 167/3... கடைசி ஓவரில் எவ்வளவு ரன்கள் வரும்? கெஸ் சொல்லுங்க பார்ப்போம்....

21:26 (IST)25 Mar 2019
குறைந்த ரன் ரேட்

கெயில் அவுட்டான பிறகு, பஞ்சாப் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்திருக்கிறது. இனி, பூரன் அடித்தால் தான் உண்டு. சர்ஃபராஸ் அடிக்க முற்படுகிறாரே தவிர, பந்து எல்லைக்கு செல்ல மாட்டேங்குது!.

21:16 (IST)25 Mar 2019
வாவ் கேட்ச்... மிரட்டிய கெயில்

16வது ஓவரை வீசிய பென் ஸ்டோக்ஸ் ஓவரை கெயில் பிரித்து மெய்ந்துவிட்டார் க்ரிஸ் கெயில்... முதல் நான்கு பந்தில் 6,4,4,4 என சாத்து சாத்திய கெயில், ஐந்தாவது பந்தில், சிக்ஸ் லைனில் திரிபாதியின் அபாரமான கேட்சால் அவுட்டானார். கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும், அது ஃபிளாட் சிக்ஸ்....

21:05 (IST)25 Mar 2019
ஆர்ச்சர் ஓவரில் சிக்ஸ்... என்னவொரு ஆச்சர்யம்!

மணிக்கு 150கி.மீ. மேல் பந்து வீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓவரிலும், கிரிஸ் கெயில் ஒரு சிக்ஸை பறக்கவிட, அரங்கம் அதிர்ந்தது!

20:58 (IST)25 Mar 2019
444610

ஏதோ ஒரு ஊரோட பின் கோட்-னு நினைச்சிடாதீங்க.... உணட்கட் ஓவரில், க்ரிஸ் கெயில் அடித்த ரன்கள் இவை. அதுமட்டுமில்ல, 33 பந்தில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

20:46 (IST)25 Mar 2019
களத்தில் சர்ஃபராஸ்!

இந்த சர்ஃபராஸ் யார் தெரியுதா? பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் லோ ஆர்டரில் நல்லா தடியா ஒரு பையன் இறங்கி பொள பொள-வென பொளக்க முயற்சி செய்வானே.... அதே சிறுவன் தான்... இப்போ கொஞ்சம் பெரிய பையன் ஆகிட்டார். 

20:41 (IST)25 Mar 2019
மாயங்க் அவுட்!

அடக் கடவுளே!!! இப்போதான் மாயங்க் பற்றி பேசினோம்... அதற்குள் அவுட்டாகிவிட்டார்... ஆனா பாருங்க, சிக்ஸ் அடிக்க நினைத்து, எல்லைக் கோட்டின் மிக அருகே தான் கேட்ச் ஆகியிருக்கிறார். 24 பந்துகளில் 22 ரன்கள்.

20:38 (IST)25 Mar 2019
கெயில் சிக்ஸ்!

வா தலைவா... வா தலைவா... 2019 சீசனில், முதல் பந்தை கெளதம் ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பியிருக்கிறார் க்ரிஸ் கெயில்

20:36 (IST)25 Mar 2019
யார் இந்த மாயங்க்?

மாயங்க் அகர்வால் பற்றி ஒன்று சொல்லியே ஆக வேண்டும்.... இவரிடம் இல்லாத திறமைகளே இல்லை. டி2௦க்கு ஏற்றார் போலவும் விளையாடுவார், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறும் கியரை மாற்றுவார். குறிப்பாக, டி20ல் இவரது ரியல் அதிரடி ஆட்டம் இதுவரை வெளியாகவில்லை என்றே சொல்ல வேண்டும். அடிக்க ஆரம்பித்தால், நிச்சயம் விளாசித் தள்ளிவிடுவார். பொறுத்திருந்து பாருங்க!!

20:28 (IST)25 Mar 2019
அடக்கி வாசிக்கும் கெயில்

வழக்கம் போல், நம்ம கெயில் அடக்கி வாசிக்கிறார். அப்போ.. பின்னாடி சூடு வைக்கப் போறது கன்ஃபார்ம்... 6 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் 32-1

20:19 (IST)25 Mar 2019
கெயில் 4000*

க்ரிஸ் கெயில் இன்று 6வது ரன் எடுத்த போது, ஐபிஎல்-ல் தனது 4000-மாவது ரன்னை பூர்த்தி செய்தார். இதன் மூலம், ஐபிஎல்-ல் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த வீரர் எனும் பெருமையை கெயில் பெற்றுள்ளார். 

20:05 (IST)25 Mar 2019
லோகேஷ் அவுட்!

யோவ்... என்னய்யா நீ!! பிங்க் சிட்டியில் ஆடிய கர்நாடக மைந்தன் லோகேஷ் ராகுல் 4 ரன்னில், குல்கர்னி ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

20:03 (IST)25 Mar 2019
நான்கு ஃபாரினர்ஸ் யார்?

கெயில், பூரன், சாம் குர்ரான், முஜிப் உர் ரஹ்மான் ஆகிய நான்கு வெளிநாட்டுப் பிளேயர்கள் பஞ்சாப் அணியில்.

20:01 (IST)25 Mar 2019
'யுனிவர்சல் பாஸ்' ஆன் தி கிரீஸ்

'யுனிவர்சல் பாஸ்' க்ரிஸ் கெயில் மற்றும் நம்ம உள்ளூர் பையன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

19:54 (IST)25 Mar 2019
வருண் சக்கரவர்த்தி எங்கே?

8.4 கோடி கொட்டிக் கொடுத்து பஞ்சாப் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. இது என்ன மாதிரியான டீலிங்-னு தெரியலையே!!

19:47 (IST)25 Mar 2019
பஞ்சாப் பிளேயிங் XI

க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், நிகோலஸ் பூரன், மந்தீப் சிங், சாம் குர்ரன், ரவிச்சந்திரன் அஷ்வின்(c), முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அங்கித் ராஜ்புத்

19:44 (IST)25 Mar 2019
ராஜஸ்தான் பிளேயிங் XI

ரஹானே(c), ஜோஸ் பட்லர்(wk), ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கெளதம், கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், உணட்கட், குல்கர்னி

19:33 (IST)25 Mar 2019
பஞ்சாப் பேட்டிங்

ராஜஸ்தான் கேப்டன் அஜின்க்யா ரஹானே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

Web Title:

Ipl 2019 rajasthan royals vs kings xi punjab live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close