Advertisment

IPL 2020: சஞ்சு சாம்சனால் சென்னை சூப்பர் கிங்ஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐ.பி.எல்லில் சென்னை பெரும் சக்தியாக இருந்ததற்கு காரணம் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள்.

author-image
WebDesk
New Update
samson csk rr match

சஞ்சு சாம்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற 217 ரன்களை எடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் இன்னிங்ஸின் பாதியில், தாங்கள் தோல்வியடைவது தெரிந்தாலும், அவர்கள் கடைசி வரை போராடினார்கள். ஏழு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகும், ஃபாஃப் டு பிளெசிஸியின் தாக்கம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால் இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் 33 சிக்ஸர்களுடன் வெற்றி பெற்றது.

Advertisment

சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ்.. வெற்றியை தீர்மானிக்கப்போவது இவர்களா?!

4 ஓவர்களில் 79 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.  கடைசி ஆறு பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டபோது, சி.எஸ்.கே-விற்கு அதிக சேதத்தை தடுக்க முயன்றார் கேப்டன் எம்.எஸ்.தோனி.

ராயல்ஸைப் பொறுத்தவரை, 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் மூலம் வெற்றிக்கான தளம் அமைக்கப்பட்டது.

பூட்டுதலில் மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல, சாம்சனும், தனது பேட்டிங் திறன் இழப்பதைப் பற்றி பயந்தார். “இவ்வளவு நாட்களாக என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை. நான் மிகவும் விரும்பும் ஒன்றிலிருந்து விலகி இருக்க முடியாது. எனவே, நான் என் சகோதரனின் மொட்டை மாடியில் ஒரு சிறிய பகுதியை அமைத்தேன். அது வலைகளால் முழுமையாக மூடப்பட்டிருந்தது, அங்கு நான் டென்னிஸ் பந்துகளுடன் விளையாடினேன். சில நேரங்களில், நான் வேலை செய்ய விரும்பும் விஷயங்களில் வேலை செய்தேன்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்திருந்தார்.

டி 20 போட்டியில் முதன்முறையாக, ஸ்மித் செட்டிலாக சற்று நேரத்தை எடுத்துக் கொண்டார். சாம்சனுக்கு இரண்டாவது ஃபிடில் விளையாடியதில் ஸ்மித் மகிழ்ச்சியடைந்தார். சாம் குர்ரான் ஓவரில், 35 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

அவர் 47 பந்துகளில் 69 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, சாம்சனின் விக்கெட்டும் பறிபோனது. தொடர்ந்து களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மேட்சில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தினார். ஆட்டமிழக்காத அவர் கடைசி ஓவரில் லுங்கி என்ஜிடி பந்து வீச்சில், 8-பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

ஐ.பி.எல்லில் சென்னை பெரும் சக்தியாக இருந்ததற்கு காரணம் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள். போட்டிக்குப் பிறகும், சீசனுக்குப் பிறகும் எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஆனால் இந்த சீசனில் அவர்களின் இரண்டாவது மேட்சில், இந்த லாவகம் மிஸ் ஆனது. ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா எட்டு ஓவர்களில் 95 ரன்கள் கொடுத்தனர்.

இதற்கு நேர்மாறாக, ராயல்ஸின் சுழற்பந்து வீச்சாளர்களான ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ராகுல் தெவதியா ஆகியோருக்கு சிஎஸ்கே சகாக்களின் வம்சாவளியும் அனுபவமும் இல்லை. ஆனால் ஜடேஜா மற்றும் சாவ்லா செய்த தவறுகளிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

கோவாக்ஸ் தயாரிப்புக்கு 35 பில்லியன் டாலர் தேவை: WHO தகவல்

ஸ்கோர் விபரம் : ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 216 (சஞ்சு சாம்சன் 74, ஸ்டீவ் ஸ்மித் 69; சாம் குர்ரான் 3/33)

சென்னை சூப்பர் கிங்ஸ் 200/6 (ஃபாஃப் டு பிளெசிஸ் 72, ஷேன் வாட்சன் 33; ராகுல் தெவதியா 3/37) 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Csk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment