ஒருபக்கம் அணிகள்; மறுபக்கம் வீரர்கள் – மனரீதியாக ஐபிஎல்லுக்கு பக்கா ரெடி!

கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

By: August 12, 2020, 5:09:36 PM

IPL 2020: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த முறை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் 13-வது ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதிகாரபூர்வ போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் தொடங்குவதற்ற்கு முன்பெல் சிறு சறுக்கலாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷந்த் யாக்னிக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

‘ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்’ – சிஇஓ காசி விஸ்வநாதன்

இதை அவர் தனது டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘‘கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், பிசிசிஐ-யின் வழிகாட்டு நெறிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைய எனக்கு இன்னும் இரண்டு நெகட்டிவ் முடிவு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஐபிஎல் அணிகள் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 23 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட, முதல்-தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் பந்து வீச்சாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது. இவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 நெட் பவுலர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 பேரை அழைத்துச் செல்ல இருக்கிறது. டெல்லி அணி 6 வீரர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது.

யுஏஇ செல்லும் 10 ‘எக்ஸ்க்ளூஸிவ்’ நெட் பவுலர்ஸ் – வலுவான அடித்தளமிடும் சிஎஸ்கே

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் இன்று தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரன்னிங், வார்ம் அப் என்று பயிற்சி மேற்கொள்ளும் தவான், ” ஐபிஎல்-லை முன்னிட்டு பயிற்சி என்று கேப்ஷனிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.


அணிகள் ஒருபக்கம் தயாராக, வீரர்களும் தங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2020 csk mi shikhar dhawan cricket video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X