IPL 2020: 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதையொட்டி பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகளில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் ஏற்கனவே துபாய் சென்று விட்டனர்.
எஞ்சிய இரு அணிகளான ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியினரும் மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.
ஒவ்வொரு அணி வீரர்களும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல், 3 முறை கொரோனா பரிசோதனைக்கு பிறகு அங்கு பயிற்சியை தொடங்க உள்ளார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது! இங்கிலாந்தின் பல ரெக்கார்டுகளை தகர்த்த இளம் வீரர்!
துபாய் சென்ற சிஎஸ்கே அணி தற்போது 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நெகட்டிவ் முடிவு வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
சென்னை ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவில் இருந்து நேராக துபாய் சென்றடைந்தார். அங்குள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாயில் உள்ள அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேபோல், தோனி உட்பட அணியின் சக வீரர்கள் அனைவரும் 7 நாள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
அதேபோல், உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, அவருக்கான அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அப்போது, ஹிந்தி மற்றும் மலையாள பாடல்களை கேட்டுக் கொண்டே பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் ஃபயிற்சி செய்வதை பார்த்தா, கப் நிச்சயம் நமக்கு தான் போல!!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil