அவர்கள் அணியுடன் வருவார்கள், போட்டி தொடங்கும் வரை இருப்பார்கள்
இந்தியன் பிரீமியர் லீக் 2020 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், குறைந்தது 50 முகம் தெரியாத இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கப் போகிறது. அவர்கள் எட்டு அணிகளுடன் “பிரத்யேக” பந்து வீச்சாளர்களாக பயணம் செய்ய உள்ளனர்.
Advertisment
குறைந்த பட்சம் மூன்று உரிமையாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை இந்த பிரத்யேக பந்து வீச்சாளர்களின் பட்டியலைத் தயாரிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தின.
இந்த பட்டியலில் பெரும்பாலும் முதல் தர, யு -19 மற்றும் யு -23 மாநில அளவிலான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், அவர்கள் எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, ரிஷாப் பந்த் ஆகியோருக்கு ஒரு மாதத்திற்கு மேல் பந்து வீசப் போகிறார்கள்.
இந்த சீசனில் உள்ளூர் பந்து வீச்சாளர்கள் வலைப் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளனர். ஆனால் போட்டிகளுக்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். அனைத்து அணிகளும், தரமான பந்து வீச்சாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
"எல்லாம் சரியாக நடந்தால், பயிற்சி அமர்வுகளுக்காக யுஏஇக்கு பிரத்யேகமாக 10 பந்து வீச்சாளர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அவர்கள் அணியுடன் வருவார்கள், போட்டி தொடங்கும் வரை இருப்பார்கள்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவர்களுடைய பட்டியலில் 10 பிரத்யேக பந்து வீச்சாளர்களும் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தினர், இது மும்பை முன்னாள் கேப்டன் மற்றும் அவர்களின் அகாடமி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோரால் கையாளப்படலாம்.
"இது ரஞ்சி டிராபியில் விளையாடிய வீரர்களின் கலவையாக இருக்கும், சிலர் யு -23 மற்றும் யு -19 நேஷ்னல் லெவல் போட்டிகளில் விளையாடியுள்ளனர்" என்று கே.கே.ஆர் முகாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி "bio bubble"-ன் ஒரு பகுதியாக இருக்கும் ஆறு பிரத்யேக பந்து வீச்சாளர்களை அழைத்துச் செல்கின்றன.