IPL 2020: இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்றே தெரிகிறது. இது வரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி முதல் மேட்சை தவிர, அடுத்தடுத்த 3 மேட்சுகளிலும் தோல்வியை தழுவி, ரசிகர்களின் பொறுமையை சோதித்திருக்கிறது.
ஆட்டிப் படைக்கும் ஐபிஎல் ஃபீவர்: தர்ஷா ஆதரவு யாருக்கு?
இதில் பெரிய சோகம் என்னவென்றால், இலக்கிற்கு பக்கத்தில் வந்து தோற்பதே சி.எஸ்.கே-வுக்கு வாடிக்கையாகியிருக்கிறது. ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தார். 15 ஓவர் வரைக்கும் மந்தமாக ஆடிய அந்த அணி அடுத்த 5 ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி என ரன் மழை பொழிந்தது. இதனால் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 164 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சிஎஸ்கே அணி, சேஸிங்கில் மீண்டும் சொதப்பி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரண்டு அணிகளுமே இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி அதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமான ஒன்றாக இருப்பதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
சிஎஸ்கே அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். முரளி விஜய், ருதுராஜ் கெயிக்வாட், ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்குர், டிவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டனர். இதனாலும் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை நீட்டித்தனர்.
69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ஹைதராபாத் அணியை உள்ளூர் வீரர்கள் ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா மீட்டனர். அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். ப்ரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதனால் 20 ஓவர்களின் இறுதியில் 164 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.
165 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ் மேன் வாட்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாப் டுபிளெசிஸ், ராயுடு அடுத்து நிதான ஆட்டம் ஆடி, பின் வேகம் எடுத்த போது விக்கெட்டை இழந்தனர். ஜாதவ் 10 பந்துகளில் போராடி 3 ரன்கள் எடுத்தார்.
ஹத்ராஸில் உ.பி போலீஸின் நடவடிக்கை பாஜக பிம்பத்தை குறைத்துள்ளது: உமா பாரதி கருத்து
தோனி நிதானமாக ஆடினார். ஜடேஜா முதலில் நிதானமாக ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். தோனி அதன் பின் வேகம் எடுத்தாலும், தேவைப்படும் ரன் ரேட் 20-க்கும் மேல் எகிறியது. இறுதி ஓவரில் 27 ரன்கள் தேவை என்றபோது, 20 ரன்களை மட்டுமே சி.எஸ்.கே பதிவு செய்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்தது சென்னை அணி. இது இந்த அணியின் ஹாட்ரிக் தோல்வியும் கூட.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”