SRH Vs KKR: ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று ஹைதராபாத் அணியை வீழ்த்தி, கொல்கத்தா வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 163 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அணியும் 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.
99 வயது சுதந்திரப் போராட்ட வீரர்; பென்ஷனுக்காக 23 ஆண்டுகள் இழுத்தடிப்பதா? நீதிபதி வேதனை
இதனால் சூப்பர் ஓவர் முறைக்கு ஆட்டம் சென்றது. இதில் ஹைதராபாத் அணி மோசமாக சொதப்பியது. இதையடுத்து கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. இதில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுல் திரிபாதி 23 ரன்கள் குவித்தார். ஷுப்மன் கில் 36 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்தவர்கள் முறையே நிதிஷ் ராணா 29, ரஸ்ஸல் 9, மார்கன் 34 ரன்கள் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடி 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.
ஹைதராபாத் அணியில், வில்லியம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். பேர்ஸ்டோ 36, ப்ரியம் கார்க் 4, மனிஷ் பாண்டே 6, விஜய் ஷங்கர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்துல் சமத் அதிரடி ஆட்டம் ஆடி 23 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் ஹைதராபாத் அணி சரியாக 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் டை ஆனதால், சூப்பர் ஓவர் முறை மேற்கொள்ளப்பட்டது. சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா அணி ரஷித் கான் வீசிய சூப்பர் ஓவரில் 4வது பந்தில் வெற்றி பெற்றது.
MI Vs KXIP: நேற்று நடந்த 2-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியும் மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. ரோகித் 9 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் வந்த இஷான் கிஷண் 7 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து டி காக் - குருணல் பாண்டியா ஜோடி 58 ரன் சேர்த்தது. 39 பந்தில் அரை சதம் அடித்த டி காக், 53 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் போலார்டு - கோல்டர் நைல் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது.
இந்தியாவில் கோவிட்-19 உச்சம் அடைந்தது; மத்திய அரசு குழு அறிவிப்பு
20 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்து அவுட்டனார். இறுதியில் 6 விக்கெட் இழப்பு பஞ்சாப் அணி 176 ரன் எடுத்ததால் போட்டி டையானது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 5 ரன்கள் எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் மும்பை அணி 1 விக்கெட் இழந்து 11 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 15 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”