Advertisment

IPL 2020: மும்பை அணி வெற்றிக்கு வழி வகுத்த ரோஹித் - பும்ரா!

கேகேஆர் அணியின் பேட்ஸ்மேன்கள் யார் இறங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து பந்துவீச்சை மாற்றினார் ரோஹித் சர்மா.

author-image
WebDesk
New Update
IPL 2020 Mumbai Indians Vs KKR

ஐபிஎல் 2020

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியை மந்தமாக தொடங்கிய, மும்பை இந்தியன்ஸ் மீண்டு வந்து தனது பாணியில் கர்ஜித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Advertisment

கடன் தவணை செலுத்த வேண்டாம்: என்ன சொல்கிறது எஸ்.பி.ஐ மறு சீரமைப்புத் திட்டம்?

பேட்டிங்கில், மும்பையின் கேப்டன் ரோஹித் சர்மா நல்ல அடிதளத்தை அமைத்தார். 54 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அப் மற்றும் மிடில் ஆர்டரில் இருந்து வந்த பயனுள்ள பங்களிப்புகள் அவர்களை 195 ரன்களை குவிக்கச் செய்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் அதன் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கும் டாஸ்கை கொடுத்தது.

இறுதி ஆய்வில், இரு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடு அந்தந்த வேக தாக்குதல்களில் இருந்தது. கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் லைனிலும், லென்திலும் தவறாக வழி நடத்தப்பட்டு மந்தமாக தோன்றினார்கள். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான மும்பை அணி வீரர்கள் நோக்கத்துடன் ஆற்றல் மிகுந்து காணப்பட்டார்கள்.

ரோஹித் தூக்கத்தில் கூட புல் ஷாட்டை அடிப்பார் எனத் தெரிகிறது.  மிகைப்படுத்தப்பட்ட கால் அசைவு இல்லை, ஆனால் அவரது சிறந்த கை-கண் ஒருங்கிணைப்பு, சரியாக பந்தை எதிர் கொள்ள உதவுகிறது. அதனால் தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ரோஹித்துக்கு குறுகிய பந்து வீசுவது இல்லை.

அப்படி என்றால்... அவர் எந்தவிதமான பலவீனங்களும் இல்லாத ஒரு பேட்ஸ்மேனா? இல்லை. 33 வயதான ரோஹித் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர். வேகப்பந்து வீச்சாளர்கள் இறுக்கமான கோடுகளை வீசுவதோடு, அவுட்-ஸ்விங்கின் குறிப்பைக் கொண்டு ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே ஒரு டாட் ஃபுல்லரை எடுக்க முடிந்தால், ரோஹித்தை ஆரம்பத்திலேயே அவுட் செய்ய முடியும்.

இது ஒரு எளிய, நேரடியான திட்டமாகத் தோன்றலாம், ஆனால் கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் அதை தங்கள் ஐ.பி.எல் சீசன் துவக்கத்தில் செயல்படுத்த போராடினர். தொடர்ந்து மும்பை கேப்டனிடம் சுருக்கமாக தோண்டி எடுத்தார்கள். எளிதான அபுதாபி பாதையில், ரன்களை குவிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார் ரோஹித். விரக்தியுடன், கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள தவறினர். ஒட்டுமொத்தமாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோஹித் 250-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டை அனுபவித்தார்.

மும்பை அணி பந்துவீச்சில் திட்டமிட்டு செயல்பட்டது. கேகேஆர் அணியின் பேட்ஸ்மேன்கள் யார் இறங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து பந்துவீச்சை மாற்றினார் ரோஹித் சர்மா. குறிப்பாக பும்ராவுக்கு தொடக்கத்தில் ஒரு ஓவர் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார். 16வது ஓவர் வீசிய பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சில் ரஸல், மோர்கன் விக்கெட்டை காலி செய்தார்.

ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் மரணம்

கம்மின்ஸுக்கு பந்துவீசும்வரை பும்ரா 3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையான பந்துவீ்ச்சை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் பும்ராஓவரில் 4 சிக்ஸர்களை விளாசியதால் பும்ரா கணக்கில் ஒட்டுமொத்தமாக 32 ரன்கள் சேர்ந்தது. பும்ரா டெக்கைக் கடுமையாகத் தாக்கி, கூர்மையான இயக்கத்தையும், அபுதாபி பாதையில் இருந்து செங்குத்தான துள்ளலையும் பிரித்தெடுத்தார். அவர் மும்பையின் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்ல. ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஜேம்ஸ் பாட்டின்சன் ஆகியோர் போல சமமான ஆற்றலுடனும் ஆக்ரோஷத்துடனும் பும்ரா காணப்பட்டனர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ipl Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment