IPL 2020: இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி அபுதாபியில் நடைப்பெற்றது. இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை.
வேளாண் சட்டத்தை எதிர்த்து ராகுல் காந்தி டிராக்டர் பேரணி; ஹரியானாவில் தடுத்து நிறுத்தம்
டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனால் முதல் இன்னிங்ஸின் இறுதியில் (20 ஓவர்களில்) 193 ரன்கள் குவித்தது மும்பை. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பதால், மும்பையுடனான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. கடந்த போட்டிகளில் சரியாக செயல்படாத வீரர்களை நீக்கி விட்டு, கார்த்திக் தியாகி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கித் ராஜ்புத் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டனர்.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர். முந்தைய போட்டியில் சிறப்பாக ஆடிய டி காக் இந்தப் போட்டியில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய இஷான் கிஷன் டக் அவுட் ஆக, பொல்லார்டு இடத்தில் பேட்டிங் செய்ய வந்த க்ருனால் பாண்டியா நிதான ஆட்டம் ஆடி 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் கடைசி வரை களத்தில் நின்று 79 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது மும்பை.
194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ட்ரென்ட் போல்ட் - பும்ரா வேகப் பந்துவீச்சு ஜோடி பெரும் அதிர்ச்சி அளித்தது. முதல் 3 ஓவர்களில் போல்ட் 2, பும்ரா 1 என மொத்தம் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஜெய்ஸ்வால் 0, ஸ்மித் 6, சஞ்சு சாம்சன் 0 என வரிசையாக ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய லோம்ரார் 11, டாம் கர்ரன் 15, ராகுல் திவேதியா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் பட்லர் மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்தார்தனியாக போராடி 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் படுதோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.
கூகுளுக்கு சவால்விடும் பேடிஎம்… மினி ஆப் ஸ்டோர் வெளியீடு
மும்பையின் பந்து வீச்சைப் பொறுத்தவரை, பும்ரா படு அசத்தலாக செயல்பட்டார். 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”