வரும் ஆண்டுகளில், இந்த போட்டி உயர்தர டி-20 பேட்ஸ்மேன்ஷிப்பிற்கு மட்டுமல்லாமல், விளையாட்டின் பரிணாம வளர்ச்சிகளை அதிகரித்து, கற்பனையின் எல்லைகளை விரிவுப்படுத்தும். மயங்க் அகர்வாலின் சதம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, இந்த லீக்கில் அதிக ரன்களை குவித்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு நரம்பு தெரிக்கும் மற்றொரு விஷயத்தை செய்து, போட்டியை வென்றது.
Tamil News Today live : திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று..!
ரசிகர்களை ஈர்க்காத வீரராக இருந்த ராகுல் திவேதியா 31 பந்துகளில் 53 ரன்களை எடுத்தார். ஆனால், ஒருவித பதற்றத்துடனேயே இருந்தார். களத்தில் உள்ள வலதுகை பேட்ஸ்மேன் சாம்ஸனுக்கு ஜோடியாக இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதாலும் திவேதியா களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அதிகமான பந்துகளை எடுத்துக்கொண்டார். 19 பந்துகளில் 8 ரன்கள் மட்டுேம சேர்த்தால் ஆட்டத்தில் அழுத்தம் கூடியது. பந்துகளை வீணடித்துக் கொண்டே இருந்தார் திவேதியா. இதனால் ஒருவித வெறுப்பு தோன்றியது. சாம்ஸன் ஆட்டம் இழந்த பின்னர், ராஜஸ்தான் அணி இனி அவ்வளவு தான் என்ற எண்ணம் தான் பெரும்பாலானோருக்கு எழுந்தது.
50% அமெரிக்கர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு விருப்பம்: புதிய சர்வே கூறுவது என்ன?
கடைசி 3 ஓவரில், 18 பந்துகளில் 51 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவைப்பட்டது. அந்த சமயம் ராபின் உத்தப்பா மீது லென்ஸ் பெரிதாக்கப்பட்டது. திவேதியா மீது பார்வை படவில்லை. காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் திவேதியா தனது மறு பக்கத்தைக் காட்டினார். லெக்கில் ஒரு சிக்ஸர், ஃபுல்டாஸில் ஒரு சிக்ஸர், வைட் லாங்-ஆனில் ஒரு சி்க்ஸர், மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர் என 4 சிக்ஸர்கள், 5-வது பந்து டாட் பால், 6-வது பந்தில் மறுபடியும் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர் என ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி 30 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே திவேதியா மாற்றினார். தொடர்ந்து 31 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”