Tamil News: கொரனோ நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் கோயம்பேடு காய்கறி கடைகள் , பழம் , மலர் அங்காடிகள் தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து காய்கறிகள் மார்க்கெட் திருமழிசை பகுதிக்கும் , பழ அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்க்கும் மாற்றப்பட்டது. இந்நிலையில், வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறக்க அனுமதி அளித்தது.
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையில், மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, அவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. குடியரசுத்தலைவர், ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 3 வேளாண் மசோதாக்களும் சட்டமானது.
சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: அக்டோபர் 14ம் தேதிக்குள் விவரங்கள் அனுப்ப உத்தரவு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
தமிழ்நாடு மற்றும் தேசியச் செய்திகள், உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் பிளாகில் இணைந்திருங்கள்.
நாட்டில்கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதுதொடர்பாகமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில்கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக82 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து,பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 703ஆக உயர்ந்துள்ளது எனவும்,அவர்களில் 50 லட்சத்து 16 ஆயிரத்து 521 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thank you Honourable CM of Andhra Pradesh. @AndhraPradeshCM.
The honour you seek for our brother Shri.S.P.Balasubramaniam is a sentiment which true fans of his voice will echo, not only in Tamilnadu but throughout the whole nation. pic.twitter.com/eSeC4MnR8p
— Kamal Haasan (@ikamalhaasan) September 28, 2020
ஆந்திராவின் மாண்புமிகு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது நன்றி.
எங்கள் சகோதரர் ஸ்ரீ.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நீங்கள் தேடும் மரியாதை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு தேசத்தின் உணர்வாக உள்ளது என்று கமலஹாசன் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்த தமிழக முதல்வர் நெல் கொள்முதல் விலையை சாதாரண ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.70, சன்ன ரகத்துக்கு ரூ.50 என பெயரளவிற்கு உயர்த்தியிருப்பது திசைதிருப்பும் முயற்சி. குவிண்டாலுக்கு ரூ. 3000 கிடைக்கும்படி கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
பணி நீக்கத்துக்கு முன்னதான நோட்டீஸ், பணி நிறைவு செய்த ஒவ்வொரு வருடத்துக்கும் 15 நாட்களுக்கான ஊதியம், நோட்டீஸ் காலத்துக்கான ஊதியம் போன்ற உரிமைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மறுதிறன் வளர்த்தல் நிதியின் கீழ் கூடுதலாக 15 நாட்கள் ஊதியத்துக்கு நிகரான பணப் பலனை தொழிற்சாலை உறவுகள் குறியீடு வலியுறுத்துவதாக அமைச்சகம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தால் சமீபத்தில் ஒப்புதலளிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தங்களைப் பற்றிய பயங்களையும், சந்தேகங்களையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் போக்கியுள்ளது.
இவற்றைப் பற்றிய விமர்சனங்கள் ஆதாரமற்றதென்றும், தேவையற்றதென்றும் அமைச்சகம் கூறியது. பணியாட்கள் நீக்கம் மற்றும் நிறுவனத்தை மூடுவதற்காக முன்கூட்டியே அனுமதி வாங்குவதற்கான பணியாளர்கள் எண்ணிக்கையை 300-ஆக உயர்த்தியிருப்பதை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சகம், இது குறித்த பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கப்பட்டுள்ளதே தவிர, இதர பலன்கள் மற்றும் பணியாளர்களின் உரிமைகள் அப்படியே தான் உள்ளன என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
கோவிட்-19 நோய் தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த விவரங்கள் அடங்கிய இணையதளத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இன்று தொடங்கி வைத்தார்
கொரோனா தொற்றுகுள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் துணைவியாரும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பதப்படுத்தப்பட்டபாசிப்பயறு, உளுந்து ஆகியவற்றை சில்லரை விற்பனைக்காக மாநிலங்களுக்கு தனது இருப்பிலிருந்து மானியவிலையில் வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலர் லீலா நந்தன் கருத்துதெரிவிக்கையில், விலை உயர்வை தடுக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில், ``தங்களை முதல்வராக்கியது யார்'' என ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இடையே வாக்குவாதம் என தகவல் வெளியாகியுள்ளது. தன்னை முதல்வராக்கியது ஜெயலலிதா என ஓ.பி.எஸும், இருவரையுமே முதல்வராக்கியது சசிகலாதான் என ஈபிஎஸும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வரும் அக்.7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான அறிகுறியுடனான கொரோனா பாதிப்பு இருந்து குணமடைந்த நிலையில் தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை 10மணிக்குத் தொடங்கிய அதிமுக செயற்குழு கூட்டம் மூன்று மணிநேரத்திற்கும் மேலாகத் தொடருகிறது. இதனால் முதல்வர் வேட்பாளர் விவகாரம் மீண்டும் இந்தக் கூட்டத்தில் எழுந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளரை அந்த குழுதான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் வலியுறுத்தியதாகவும் அதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பதாலும்தான் இந்த விவாதம் நீட்டித்துக்கொண்டு போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மண், மக்கள் மற்றும் விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காகவே இந்த வேளாண் மசோதா எதிர்ப்புப் போராட்டம். தமிழக முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. என்ன நடந்தாலும் போராட்டத்திலிருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை' என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழகமெங்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக மாற்றக்கூடிய இந்த நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும் அல்லது விவசாயிகள் கேட்கும் பாதுகாப்புகளை இந்தச் சட்டத்துக்குள் கொண்டு வரவேண்டும்' என்று கூறினார்.
"வேளாண் சட்ட மசோதாக்கள் நமது விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை. அவர்களின் குரல் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான சான்று இங்கே" என்ற வாக்கியதோடு செய்தித்தாள் நகல் ஒன்றை இணைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மத்திய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும். மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம். கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் தமிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு என அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை .ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே' என்ற பதாகைகளுடன் துணை முதல்வரின் ஆதரவாளர்கள். அதிமுக செயற்குழுவில் பங்கேற்க வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலை அணிவித்து, கையில் வாள் கொடுக்கப்பட்டது
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக, மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த எஸ்பிபி குடும்பத்தினருக்கு மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு முன்பு மேலும் பணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த மருத்துவமனை மிகச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியவர் கைதுதென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஃபேஸ்புக்கில் முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியதால் பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்பட 14 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 30-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights