Advertisment

கங்குலியின் பாஸிட்டிவ் பதில்; களத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் 'ரிலாக்ஸ்' கிடைக்குமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2020, Sourav Ganguly, mumbai indians, cricket news, ஐபிஎல் 2020, சவுரவ் கங்குலி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்

IPL 2020, Sourav Ganguly, mumbai indians, cricket news, ஐபிஎல் 2020, சவுரவ் கங்குலி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்

IPL: 2020 ஐபிஎல் தொடரை இந்தாண்டு எப்படியாவது நடத்த வேண்டி, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து, பிசிசிஐ அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் கங்குலி எழுதியுள்ள கடிதத்தில்: "இந்த ஆண்டு, மூடப்பட்ட அரங்கினுள் எப்படியாவது ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளிலும் பிசிசிஐ பணியாற்றி வருகிறது. ரசிகர்கள், உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பிற அனைத்து பங்குதாரர்களும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்துவதன் சாத்தியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா 'மிக்ஸிங் வித்' பாகிஸ்தான் - பெஸ்ட் டி20 அணி அறிவித்த பாபர் ஆஸம்

"சமீபத்தில் இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், ஐபிஎல்லில் பங்கேற்பது குறித்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், இது தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து பி.சி.சி.ஐ விரைவில் முடிவு செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

க்ளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்-லில் பங்கேற்பது குறித்து பகிரங்கமாக தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்திய நிலையில், புதன்கிழமை நடந்த ஐ.சி.சி வாரியக் கூட்டத்தைத் தொடர்ந்து வைத்த கங்குலியின் இந்த கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பையின் எதிர்காலம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை தள்ளி வைத்தால், ஐ.பி.எல். நடத்தும் சாதகமான வாய்ப்பு ஏற்படும்.

பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் கன்சோலியில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை பயிற்சியைத் தொடங்கியது. மும்பையில் வசிக்கும் வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், க்ருனல் பாண்ட்யா, தவால் குல்கர்னி, மற்றும் ஆதித்யா தாரே போன்றவர்கள் பங்கேற்க விரும்பினால் பங்கேற்கலாம் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நான் பயிற்சி மேற்கொள்வேன் என்பதை உறுதிப்படுத்திய யாதவ், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் முடிவை அவரவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் விட்டுவிட்டது என்றார். "மும்பை இந்தியன்ஸ் நாங்கள் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. நான் அங்கு செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மீண்டும் பேட்டைப் பிடிப்பது போன்ற உணர்வு எதுவும் இல்லை. கடந்த இரண்டு மாதங்களில் நான் வீட்டை விட்டு வெளியேறவில்லை, நிச்சயமாக விளையாடுவதைத் தவறவிட்டேன்," என்று சூர்ய குமார் யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

நோ ஷேவாக்... ஒய் ஜடேஜா? - இது வாசிம் ஜாஃபரின் 'ஆல் டைம்' இந்திய அணி XI பஞ்சாயத்து

தனி நபர் இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்று யாதவ் கூறினார். வலைப்பயிற்சியின் போது, பந்துவீச்சு இயந்திரம் மூலமே பெரும்பான்மையாக பேட்டிங் பயிற்சி செய்யப்படும் என்பதால், செஷனில் உமிழ்நீருக்கு அங்கு வேலையில்லை என்பதும் உறுதி செய்யப்படும். "தனி நபர் இடைவெளி உட்பட அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

எனினும், இந்த ஆண்டு ஐ.பி.எல் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment