IPL 2020: ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சொதப்பலாக பந்து வீசிய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், 16-வது ஓவர் வரை ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. வார்னர் 52, பேர்ஸ்டோ 97 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை திணற வைத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது.
தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு
16-வது ஓவரில் வார்னரும், பேர்ஸ்டோவும் அவுட் ஆனதும், அடுத்த ஓவர்களில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 41 ரன்களை சேர்த்து, 20 ஓவர் முடிவில் 201 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது. கடைசி ஐந்து ஓவரில் ஆதிக்கம் செலுத்தினாலும், அனைத்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். பின்னர் 202 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் பஞ்சாப் சேஸிங் செய்ய வந்தது.
பந்துவீச்சைப் போலவே, பேட்டிங்கிலும் சொதப்பியது பஞ்சாப். ராகுல் 11, மயங்க் அகர்வால் 9. சிம்ரன் சிங் 11, மேக்ஸ்வெல் 7, மந்தீப் சிங் 6, முஜீப் உர் ரஹ்மான் 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதற்கிடையே நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து அணியை கரை சேர்க்க போராடினார். ஆனால், ரஷித் கான் பந்துவீச்சில் அவரும் வீழ்ந்தார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் குளுக்குக்கு அறிவிப்பு
ரஷித் கான் இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட் மெய்டன் ஓவரும் வீசி அசத்தினார். பஞ்சாப் அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”