வெற்றிப் பாதைக்கு திரும்பிய மும்பை; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது!

Punjab Kings vs Mumbai Indians live score, LIVE Updates and match highlights in tamil: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 136 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2021 match LIVE Updates: MI vs PBKS live score and match highlights in Tamil

MI vs PBKS match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை 7:30 மணிக்கு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் சுவாரஷ்யமாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் – மன்தீப் சிங் ஜோடி களமிறங்கியது.

இந்த ஜோடியில் மன்தீப் சிங் 15 ரன் சேர்த்து ஆட்டமிழ்ந்த நிலையில் பின்னர் வந்த சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் 1 ரன்னுடனும், அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் கேஎல் ராகுல் 21 ரன்னுடனும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இவர்களுக்கு பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் பும்ராவின் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆகி 2 ரன்னுடன் வெளியேறினார். இதனால் அந்த அணி 8 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான தருணத்தில் களத்தில் இருந்த ஐடன் மார்க்ரம் – தீபக் ஹூடா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த ஜோடியில் 6 பவுண்டரிகளை ஓடவிட்டு 42 ரன்களை சேர்த்த ஐடன் மார்க்ரம் மும்பையின் ராகுல் சாஹர் வீசிய 15.2 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்து 28 ரன்கள் சேர்த்த தீபக் ஹூடா பும்ராவின் வேகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார். இவர்களைத்தொடர்ந்து களம் கண்ட ஹர்பிரீத் பிரார் 14 ரன்னுடனும், நாதன் எல்லிஸ் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய , ஜஸ்பிரித் பும்ரா, கியரோன் பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 136 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். 2 பவுண்டரிகளை விரட்டிய தொடக்க வீரர் குயின்டன் டி காக் 27 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். எனவே மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை மட்டுமே சேர்த்து இருந்தது.

தொடர்ந்து களமாடிய சவுரப் திவாரி – ஹர்திக் பாண்டியா ஜோடி நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது. இந்த ஜோடியில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகள் என 37 பந்துகளில் 45 ரன்களை குவித்து அதிரடி காட்டி வந்த சவுரப் திவாரி நாதன் எல்லிஸ் வேகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார். எனினும், பின்னர் வந்த கியரோன் பொல்லார்ட் உடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மிகவும் பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடியில் கியரோன் பொல்லார்ட் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசி 15 ரன்களை சேர்த்திருந்தார். அதிரடி காட்டி பர்மிற்கு திருப்பிய ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளை பறக்க விட்டு 30 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 136 ரன்கள் கொண்ட இலக்கை 19வது ஓவரிலேயே எட்டிப் பிடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றி மூலம் 2 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை அணி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6வது இடத்தில் உள்ளது.

Indian Premier League, 2021Sheikh Zayed Stadium, Abu Dhabi   20 October 2021

Mumbai Indians 137/4 (19.0)

vs

Punjab Kings   135/6 (20.0)

Match Ended ( Day – Match 42 ) Mumbai Indians beat Punjab Kings by 6 wickets

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
5:49 (IST) 28 Sep 2021
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!

136 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

5:41 (IST) 28 Sep 2021
வெற்றியை நோக்கி மும்பை அணி!

136 ரன்கள் இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 29 ரன்கள் தேவை!

5:23 (IST) 28 Sep 2021
சவுரப் திவாரி அவுட்!

2 சிக்ஸர் 3 பவுண்டரிகள் என 37 பந்துகளில் 45 ரன்களை குவித்து அதிரடி காட்டி வந்த சவுரப் திவாரி நாதன் எல்லிஸ் வேகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார்.

5:18 (IST) 28 Sep 2021
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

136 ரன்கள் இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 93 ரன்களை சேர்த்துள்ளது.

4:56 (IST) 28 Sep 2021
“பிளேஆஃப்க்கு முந்தைய கடைசி இரண்டு லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் விளையாடப்படும்”- ஐபிஎல் நிர்வாகம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப்க்கு முந்தைய கடைசி இரண்டு லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் விளையாடப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

4:53 (IST) 28 Sep 2021
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

136 ரன்கள் இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 63 ரன்களை சேர்த்துள்ளது.

4:47 (IST) 28 Sep 2021
2 புதிய ஐபிஎல் அணிகள் அக்டோபர் 25 அறிவிப்பு!

அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் களமிறங்க உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற அக்டோபர் 25ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

4:32 (IST) 28 Sep 2021
பவர் பிளே முடிவில் மும்பை அணி!

136 ரன்கள் இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் அந்த அணி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) 30 ரன்கள் சேர்த்துள்ளது.

4:23 (IST) 28 Sep 2021
சூர்யகுமார் யாதவ் அவுட்!

பஞ்சாபின் ரவி பிஷ்னோய் வீசிய 3.3 ஓவரில் 8 ரன் மட்டும் சேர்த்த கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், பிஷ்னோய் வீசிய அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.

4:21 (IST) 28 Sep 2021
ரோகித் சர்மா அவுட்!

பஞ்சாபின் ரவி பிஷ்னோய் வீசிய 3.3 ஓவரில் 8 ரன் மட்டும் சேர்த்த கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

4:05 (IST) 28 Sep 2021
களமிறங்கிய மும்பை அணி!

136 ரன்கள் இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா – குயின்டன் டி காக் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

4:00 (IST) 28 Sep 2021
டெல்லிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

https://tamil.indianexpress.com/sports/kkr-vs-dc-highlights-in-tamil-kolkata-knight-riders-win-by-3-wickets-348240/

3:53 (IST) 28 Sep 2021
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து மிகச்சிறப்பாக பந்துகளை வீசிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 135 ரன்கள் சேர்த்தது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3:27 (IST) 28 Sep 2021
தொடர் விக்கெட் சரிவு; நிதான ஆட்டத்தில் பஞ்சாப் அணி!

16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் அணி 112 ரன்கள் சேர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

2:50 (IST) 28 Sep 2021
டி 20 கிரிக்கெட்டில் பொல்லார்ட்டின் புதிய சாதனை!

பஞ்சாப் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசி வரும் மும்பை அணியின் கியரான்பொல்லார்ட் டி 20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

2:49 (IST) 28 Sep 2021
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப் அணி!

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் மன்தீப் சிங் 15 ரன் சேர்த்து ஆட்டமிழ்ந்த நிலையில் பின்னர் களமிறங்கிய சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் 1ரன்னுடனும், அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் கேஎல் ராகுல் 21 ரன்னுடனும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

இவர்களுக்கு பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் பும்ராவின் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆகி 2 ரன்னுடன் வெளியேறினார். இதனால் அந்த அணி 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.

2:14 (IST) 28 Sep 2021
‘வலிமை அப்டேட் என்னால் மறக்க முடியாதது’ – நெகிழும் மொயீன் அலி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலி, ‘தன்னிடம் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டது தன்னால் மறக்க முடியாத ஒன்று’ என்று கூறியுள்ளார்.

https://tamil.indianexpress.com/sports/cricket-news-in-tamil-moeen-ali-about-actor-ajiths-valimai-update-348077/

2:13 (IST) 28 Sep 2021
ஆட்டம் இனிதே ஆரம்பம்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் – மன்தீப் சிங் ஜோடி களமிறங்கியுள்ளது.

அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்து வரும் இந்த ஜோடி 3 ஓவர்கள் முடிவில் 21 ரன்களை சேர்த்துள்ளது.

1:44 (IST) 28 Sep 2021
கொல்கத்தாவுக்கு அடுத்த வெற்றி வெற்றி!

இன்று மதியம் 3:30 மணி முதல் நடைபெற்று வந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் பந்து வீச்சில் மிரட்டி பேட்டிங்கில் நிதானம் காட்டி ரன் சேர்த்த கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

1:38 (IST) 28 Sep 2021
இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:-

மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்) அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கியரோன் பொல்லார்ட், நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் லெவன்) அணி: KL ராகுல் (w/c), மன்தீப் சிங், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

1:38 (IST) 28 Sep 2021
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

1:21 (IST) 28 Sep 2021
நேருக்கு நேர்:

இதுவரை நடந்த 27 போட்டிகளில் மும்பை அணி 14 முறையும், பஞ்சாப் அணி 12 முறையும் வெற்றி கண்டுள்ளன.

1:18 (IST) 28 Sep 2021
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

மும்பை: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

பஞ்சாப்: கேஎல் ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்

12:41 (IST) 28 Sep 2021
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் வாழ்வா சாவா? ஆட்டத்தில் மோதவுள்ளன.

Web Title: Ipl 2021 match live updates mi vs pbks live score and match highlights in tamil

Next Story
தந்தை அவுட் ஆனதும் விரக்தியடைந்த மகன்… சேரை ஓங்கி அடிக்கும் வைரல் காட்சி!RCB VS MI match highlights in tamil: AB de Villiers' son express his angry
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com