Advertisment

IPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்!

IPL Auction 2019, Chennai Super Kings Players Auction Updates: யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கே வாங்கியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL Auction 2019 Live: யுவராஜ் சிங் தரிசனம் கன்ஃபார்ம்! ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்

IPL Auction 2019 Live: யுவராஜ் சிங் தரிசனம் கன்ஃபார்ம்! ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்

Chennai Super Kings Auction in IPL 2019: ஐபிஎல் 2019 சீசனுக்கான ஏலம் இன்று நடந்து முடிந்தது. இதில், மொத்தமாக 350 வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 228 பேர் இந்தியர்கள். ‘பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில், மதியம் 3.30 மணியளவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. கடந்த சீசனைப் போல, இம்முறையும் ஜெயதேவ் உணட்கட் அதிக தொகைக்கு விலை போயுள்ளார். 8.40 கோடிகளை கொட்டிக் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், கேன் ரிச்சர்ட்சன், வினய் குமார், குசல் பெரேரா, முஷ்ஃபிகுர் ரஹீம், லுக் ரோஞ்சி, ஜேசன் ஹோல்டர், கோரே ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ், ஹாஷிம் ஆம்லா, ஷான் மார்ஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் பலரை யாருமே ஏலத்தில் இதுவரை கேட்கவில்லை. 45 நிமிட இடைவேளைக்குப் பிறகு, ஏலம் மீண்டும் தொடங்கியது. ஷிர்ஃபேன் ரூதர்போர்ட் எனும் வீரர் 2 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஒருவழியாக, இந்தாண்டும் யுவராஜ் சிங் ஐபிஎல்-லில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கே வாங்கியுள்ளது.

இதுபோல, மற்ற அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் குறித்து முழுதாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்

09:30 PM - மொத்தமாக 60 வீரர்கள் ஐபிஎல் 2019 ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறார்கள். 40 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள்.

09:10 PM - தமிழக ஸ்பின்னர் முருகன் அஷ்வின், 20 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

08:50 PM - ஒருவழியாக, இந்தாண்டும் யுவராஜ் சிங் ஐபிஎல்-லில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கே வாங்கியுள்ளது.

08:30 PM - லியம் லிவிங்ஸ்டன் - 50 லட்சம் - ராஜஸ்தான் ராயல்ஸ்

கீமா பால் - 50 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்

பிரயாஸ் ராய் பர்மன் - 1.50 கோடி - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

08:15 PM 

ஹேரி கர்னே - 75 லட்சம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஹிம்மத் சிங் - 60 லட்சம் - பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ்

ஹார்டஸ் வில்ஜோன் - 75 லட்சம் - கிங்ஸ் XI பஞ்சாப்.

பிரப்சிம்ரன் சிங் - 4.80  கோடி - கிங்ஸ் XI பஞ்சாப்.

08:00 PM - ஓஷானே தாமஸ் 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

07:45 PM - 45 நிமிட இடைவேளைக்குப் பிறகு, ஏலம் மீண்டும் தொடங்கியது. ஷிர்ஃபேன் ரூதர்போர்ட் எனும் வீரர் 2 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

07:30 PM - வருண் சக்கரவர்த்தி... ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாமல், 8.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ள தமிழக வீரர். யார் இந்த வருண் சக்கரவர்த்தி? 

07:15 PM - டின்னர் கேப் இது. டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், கேன் ரிச்சர்ட்சன், வினய் குமார், குசல் பெரேரா, முஷ்ஃபிகுர் ரஹீம், லுக் ரோஞ்சி, ஜேசன் ஹோல்டர், கோரே ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ், ஹாஷிம் ஆம்லா, ஷான் மார்ஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் பலரை யாருமே ஏலத்தில் இதுவரை கேட்கவில்லை.

07:00 PM - அதிக தொகைக்கு ஏலம் போயுள்ள வீரர்கள் இதுவரை,

06:45 PM - இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரன் 7.20 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இந்திய வீரர் ஸ்ரன் பரிந்தர் 3.40 கோடி ரூபாய்க்கு மும்பை வாங்கியுள்ளது. லாக்கி ஃபெர்கியூசன் 1.60 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

06:30 PM - தென்னாப்பிரிக்க வீரர் காலின் இங்க்ரமை 6.40 கோடிக்கு வாங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

06:10 PM - அணிகள் மீதம் தொகை வைத்திருக்கும் விவரம்

06:00 PM - 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையோடு ஏலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வருண் சக்கரவர்த்தி எனும் வீரரை, 8.40 கோடி கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளது பஞ்சாப் அணி

05:20 PM - தேவ்தத் படிக்கல் எனும் வீரரை பெங்களூரு அணி 2௦ லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அன்மோல் ப்ரீத் சிங் எனும் வீரரை 80 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

05:05 PM - சமீப காலமாக நல்ல ஃபார்மில் இருக்கும் வரும் ஆரோனை 2.40 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், மோஹித் ஷர்மாவை 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வாங்கியுள்ளன.

04:50 PM - இஷாந்த் ஷர்மாவை டெல்லி அணி 1.10 கோடிக்கும், மலிங்காவை 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. முகமது ஷமியை 4.80 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் அணி.

04:45 PM - கடந்த சீசனைப் போல, இம்முறையும் ஜெயதேவ் உணட்கட் அதிக தொகைக்கு விலை போயுள்ளார். 8.40 கோடிகளை கொட்டிக் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

04:32 PM - ரிதிமான் சாஹாவை சன்ரைசர்ஸ் அணி 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

04:30 PM - சன் ரைசர்ஸ் அணி 2.20 கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை வாங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் 4.20 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

04:20 PM - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்கை, சென்னை உட்பட எந்த அணியும் வாங்கவில்லை.

04:15 PM - குர்கீரத் மன் 50 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு அணியும், ஆஸ்திரேலிய வீரர் மாய்சஸ் ஹென்ரிக்ஸ் 1 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், அக்ஷர் படேலை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியும் வாங்கியுள்ளன.

04:00 PM - வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல், மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிரத்வெயிட் 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

03:45 PM - ஹனுமா விஹாரியை டெல்லி கேபிடல்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Ipl Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment