scorecardresearch

CSK vs LSG: சுழலில் மிரட்டிய மொயீன் அலி; லக்னோவை வீழ்த்திய சென்னைக்கு முதல் வெற்றி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

CSK vs LSG Score | IPL  2023 Live |  CSK vs LSG Match Live
 சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்கோர்

IPL 2023, CSK vs LSG Match Highlights in tamil10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (திங்கள் கிழமை) அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai   07 June 2023

Chennai Super Kings 217/7 (20.0)

vs

Lucknow Super Giants   205/7 (20.0)

Match Ended ( Day – Match 6 ) Chennai Super Kings beat Lucknow Super Giants by 12 runs

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடி காட்டத் தொடங்கிய இந்த ஜோடியில் ருதுராஜ் கிருஷ்ணப்பா கவுதம் ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு சில பவுண்டரிகளை ஓட விட்ட அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மறுமுனையில் ருதுராஜூக்கு ஈடுகொடுத்து பந்துகளை விரட்டியடித்த கான்வே 4 பவுண்டரிகளுடன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பிறகு வந்த சிவம் துபே ஒரு பவுண்டரியுடன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 27 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த மொயீன் அலி ஹாட்ரிக் பவுண்டரிகளை துரத்தி 19 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்களில் ஸ்டோக்ஸ் 8 ரன்னிலும், ஜடேஜா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் களம் புகுந்த தோனி 2 சிக்ஸர்களை மட்டும் பறக்கவிட்டு 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில், களத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. இதனால், லக்னோ அணிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 218 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய லக்னோவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கைல் மேயர்ஸ் சென்னையின் பந்துவீச்சை தும்சம் செய்தார். அவருக்கு பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே அடுத்தடுத்த நோ-பால்களுடன் 11 பந்துகளில் 18 ரன்களை வாரி வழங்கினார். அதிரடியை சற்றும் நிறுத்தாத மேயர்ஸ் அரைசதம் அடித்தார். 22 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸருடன் 53 ரன் எடுத்த அவர் மொயீன் அலி பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்னிலும், மறுமுனையில் இருந்த கேப்டன் ராகுல் 20 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட க்ருனால் பாண்டியா 9 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை விரட்டிய நிக்கோலஸ் பூரன் 32 ரன்னில் அவுட் ஆனார்.

களத்தில் இருந்த கிருஷ்ணப்பா கவுதம் – ஆயுஷ் படோனி சென்னையின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதில் படோனி 23 ரன்னில் அவுட் ஆனார். லக்னோவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே ஒயிடு, நோ-பாலுடன் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இறுதியில். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் 3வது லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளரான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 8ம் தேதி) இரவு 7:30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
23:28 (IST) 3 Apr 2023
லக்னோ வெற்றிக்கு 6 பந்துகளில் 28 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. லக்னோ அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 28 ரன்கள் தேவை.

23:11 (IST) 3 Apr 2023
நிக்கோலஸ் பூரன் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை விரட்டிய நிக்கோலஸ் பூரன் 32 ரன்னில் அவுட் ஆனார்.

23:05 (IST) 3 Apr 2023
15 ஓவர்கள் முடிவில் லக்னோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. லக்னோ அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 68 ரன்கள் தேவை.

22:43 (IST) 3 Apr 2023
11 ஓவர்கள் முடிவில் லக்னோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. லக்னோ அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 108 ரன்கள் தேவை.

22:27 (IST) 3 Apr 2023
அடுத்தடுத்த விக்கெட் இழப்பு… திணறும் லக்னோ… மிரட்டும் சென்னை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. லக்னோ அணியில் அதிரடியாக விளையாடிய கைல் மேயர்ஸ் 53 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹூடா 2 ரன்னிலும், களத்தில் இருந்த கேப்டன் ராகுல் 20 ரன்னிலும் அடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

22:20 (IST) 3 Apr 2023
கைல் மேயர்ஸ் அவுட்… தொடக்க ஜோடியை காலி செய்த மொயீன் அலி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. லக்னோ அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேயர்ஸ் 22 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 53 எடுத்தார்.

21:29 (IST) 3 Apr 2023
ரன் மழை பொழிந்த சென்னை… லக்னோவுக்கு 218 ரன்கள் இலக்கு!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், டெவோன் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

21:05 (IST) 3 Apr 2023
ஸ்டோக்ஸ் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. ஒரு பவுண்டரியை விரட்டிய பென் ஸ்டோக்ஸ் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

20:57 (IST) 3 Apr 2023
மொயீன் அலி அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. ஹாட்ரிக் பவுண்டரியை விரட்டிய மொயீன் அலி 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

20:54 (IST) 3 Apr 2023
15 ஓவர்கள் முடிவில் சென்னை

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

20:49 (IST) 3 Apr 2023
துபே அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட சிவம் துபே 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20:36 (IST) 3 Apr 2023
கான்வே அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய டெவோன் கான்வே அதிரடியாக விளையாடினார். அரைசசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20:32 (IST) 3 Apr 2023
10 ஓவர்கள் முடிவில் சென்னை!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

20:28 (IST) 3 Apr 2023
ருதுராஜ் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர் மழை பொழிந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார். அரைசதம் அடித்த அவர் 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

20:07 (IST) 3 Apr 2023
பவர் பிளே முடிவில் சென்னை !

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இருவரும் அதிரடியாக மட்டையை சுழற்றி வருகின்றனர். பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்துள்ளது.

19:36 (IST) 3 Apr 2023
சென்னை பேட்டிங்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

19:07 (IST) 3 Apr 2023
இரு அணிகளின் பிளேயிங் லெவன்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்

19:06 (IST) 3 Apr 2023
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலிங் தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யும்.

18:47 (IST) 3 Apr 2023
CSK vs LSG: சி.எஸ்.கே vs லக்னோ… ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

https://tamil.indianexpress.com/sports/ipl/csk-vs-lsg-ipl-2023-live-streaming-when-and-where-to-watch-chennai-super-kings-vs-lucknow-super-giants-in-tamil-627282/

18:47 (IST) 3 Apr 2023
ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க வருகை தரும் ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணிக்க வழிவகை செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் பார்கோடுகளை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஸ்கேன் செய்து இலவசமாக பயணிக்கலாம். இரவு நேர போட்டி நடக்கும் நாட்களில் மட்டும் மெட்ரோ ரெயில் சேவை 1½ மணி நேரம் நீட்டிக்கப்படும்.

அத்துடன் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு சிரமமின்றி செல்ல பேருந்து சேவையும் அளிக்கப்படுகிறது. மேலும் வடபழனி, சென்டிரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெரிய திரைகளில் ஐ.பி.எல். போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

18:23 (IST) 3 Apr 2023
லக்னோ அணியின் உத்தேச வீரர்கள்!

கே.எல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மார்க் வூட், ரவிஸ் பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட், அவேஷ் கான்

இம்பாக்ட் பிளேயர் – கே கௌதம்

18:18 (IST) 3 Apr 2023
சென்னை அணியின் உத்தேச லெவன்!

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

இம்பேக்ட் பிளேயர் – சிமர்ஜீத் சிங்

18:17 (IST) 3 Apr 2023
சென்னையின் கோட்டை!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். இங்கு 56 ஆட்டங்களில் ஆடி 40-ல் வெற்றிகளை குவித்துள்ள சென்னை அணி இந்த சீசனில் இங்கிருந்து வெற்றிக்கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

18:16 (IST) 3 Apr 2023
3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில்….!

இன்றைய ஆட்டம் சென்னை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற இருப்பது சிறப்பம்சமாகும். ஏனெனில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம்.

18:08 (IST) 3 Apr 2023
இரவு 7:30 மணிக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

18:07 (IST) 3 Apr 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Csk vs lsg live score chennai super kings vs lucknow super giants ipl 2023 6th match live tamil commentary news updates in tamil