CSK vs RR Indian Premier League 2023 Highlights in tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி பந்துவீசுவதாக அறிவித்தார். அதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகளை விரட்டி 38 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பிறகு வந்த கேப்டன் சஞ்சு ஜடேஜாவின் சுழலில் சிக்கி ரன் ஏதும் இன்றி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
ஒரு பவுண்டரியுடன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்வின் 30 ரன்னில் அவுட் ஆனார். 36 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த தொடக்க வீரரான பட்லர் 52 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2 பவுண்டரி 2 சிக்ஸரை விளாசிய ஷிம்ரோன் ஹெட்மியர் 30 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். அவருடன் ஜோடியில் இருந்த துருவ் ஜூரல் (4 ரன்), ஜேசன் ஹோல்டர் (0), ஆடம் சம்பா (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து இருந்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதனால், சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களில் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரியை துரத்திய அஜிங்க்யா ரஹானே 31 ரன்களுடன் அவுட் ஆனார். பின்னர் வந்த சிவம் துபே (8 ரன்), மொயீன் அலி (7 ரன்), ராயுடு (ஒரு ரன்) ஆகியோர் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
கடைசி வரை களத்தில் போராடிய தோனி - ஜடேஜா ஜோடி பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றனர். சென்னையின் வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா ஓவரை எதிர்கொண்ட கேப்டன் தோனியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஷ்வின் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:27 (IST) 12 Apr 2023சென்னையை சாய்த்த ராஜஸ்தானுக்கு த்ரில் வெற்றி!
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தியது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணியால் 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், ராஜஸ்தான் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- 22:57 (IST) 12 Apr 2023சென்னையின் வெற்றிக்கு 24 பந்துகளில் 59 ரன்கள் தேவை!
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னையின் வெற்றிக்கு 24 பந்துகளில் 59 ரன்கள் தேவை
- 22:53 (IST) 12 Apr 2023பந்துவீச்சில் கட்டுப்படுத்தும் ராஜஸ்தான்... சென்னைக்கு அதிரடி தேவை!
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னையின் வெற்றிக்கு 30 பந்துகளில் 63 ரன்கள் தேவை
- 22:28 (IST) 12 Apr 202310 ஓவர்கள் முடிவில் சென்னை!
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.
- 22:00 (IST) 12 Apr 2023சென்னைக்கு சிறப்பான தொடக்கம்!
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. பவர்பிளே முடிவில் (6ஓவர்கள்) சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
- 21:19 (IST) 12 Apr 2023பட்லர் அரைசதம்; பந்துவீச்சில் அசத்திய சென்னைக்கு 176 ரன்கள் இலக்கு!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. அதனால், சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக அரைசதம் விளாசிய பட்லர் 52 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
- 20:55 (IST) 12 Apr 2023பட்லர் க்ளீன் போல்ட்!
அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் மொயீன் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி 52 ரன்னுடன் வெளியேறினார்.
- 20:47 (IST) 12 Apr 2023அஸ்வின் அவுட்; 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்வின் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 20:33 (IST) 12 Apr 202313 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:20 (IST) 12 Apr 2023படிக்கல் - சஞ்சு சாம்சன் அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
சுழலில் மிரட்டி வரும் ஜடேஜாவின் பந்துவீச்சில் தேவ்தத் படிக்கல் (38 ரன்கள்), அவருக்கு அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
- 20:10 (IST) 12 Apr 2023தொடக்க ஜோடியை உடைத்த சென்னை... ராஜஸ்தான் நீதான ஆட்டம்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
- 19:44 (IST) 12 Apr 2023அஸ்வின் vs ஜடேஜா: சேப்பாக்கத்தில் கில்லி யார்?
அஸ்வின் இதுவரை சேப்பாக்கத்தில் விளையாடியுள்ள 40 ஐ.பி.எல் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
- 19:42 (IST) 12 Apr 2023யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் துஷார் தேஷ்பாண்டே பந்தில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 19:35 (IST) 12 Apr 2023ராஜஸ்தான் பேட்டிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
- 19:28 (IST) 12 Apr 2023இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சிசண்டா மகலா, மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்
- 19:27 (IST) 12 Apr 2023இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர் / கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
- 19:05 (IST) 12 Apr 2023டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு; ராஜஸ்தான் முதலில் பேட்டிங்
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
- 18:53 (IST) 12 Apr 2023'தோனிக்கு வெற்றியை சமர்ப்பிப்போம்': ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு இது 200-வது ஆட்டமாகும். "மிகவும் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றியை அவருக்கு பரிசாக அளிப்போம் என்று நம்புகிறேன்" என்று ஜடேஜா கூறியுள்ளார்.
- 18:52 (IST) 12 Apr 2023இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!
சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு அல்லது ரஹானே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), மொயீன் அலி, மிட்செல் சான்ட்னெர் / மகேஷ் தீக்சனா, சிசாண்டா மகாலா அல்லது பிரிட்டோரியஸ், துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத்சிங்.
ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜோரெல், ஜாசன் ஹோல்டர், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், முருகன் அஸ்வின்.
- 18:31 (IST) 12 Apr 2023ராஜஸ்தான் எப்படி?
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (பஞ்சாப்புக்கு எதிராக) 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் தான் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். இருவரும் தலா இரு அரைசதம் நொறுக்கியுள்ளனர். கேப்டன் சாம்சன், ரியான் பராக் மற்றும் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் வியூகங்களை தீட்டியுள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
- 18:14 (IST) 12 Apr 2023சென்னைக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?
தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவின் மின்னல்வேக அரைசதமும், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலமும் வெற்றிக்கு உதவின.
இந்த நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தை உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்திய சென்னை அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது.
தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. இதே போல் பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என்று சென்னை வீரர் ஜடேஜா நேற்று கூறினார். அதனால் உள்ளூர் ஆட்டத்தை ஸ்டோக்சும் தவற விடுகிறார். மற்றபடி ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஜடேஜா, ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, கேப்டன் டோனி உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.
- 18:03 (IST) 12 Apr 2023‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.