Advertisment

GT vs CSK: ருதுராஜ் அதிரடி வீண்; தொடக்க ஆட்டத்தில் வெற்றியை ருசித்தது குஜராத்

நேற்று முதல் தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2023, CSK vs GT Live Score in tamil

ஐபிஎல் 2023, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

Chennai Super Kings vs Gujarat Titans Highlights in tamil: 10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் கோலாகலமாக தொடங்கியது. இரவு 7.30 மணிக்கு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமாடியது. தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்ய களம் புகுந்தனர். ருதுராஜ் அதிரடியாக தொடங்க, கான்வே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த மொயீன் அலி ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகளை விரட்டியடித்து 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு பவுண்டரியை ஓட விட்ட ஸ்டோக்ஸ் 7 ரன்னிலும், ஒரு சிக்ஸர் அடித்த அம்பதி ராயுடு 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே, களத்தில் சிக்ஸர் மழையைப் பொழிய தொடங்கிய ருதுராஜ் அரைசதம் விளாசினார். 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட தொடக்க வீரர் ருதுராஜ் 92 ரன்கள் குவித்தார்.

அவருக்குப் பிறகு வந்த ஷிவம் துபே மற்றும் கேப்டன் தோனி தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 19 மற்றும் 14 ரன்களை எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதனால், குஜராத் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிணயிக்கப்பட்டது. குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 179 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 63 ரன்னில் அவுட் ஆன நிலையில், சென்னை அணிக்கான வெற்றி முகம் தெரிந்தது. ஆனால், சென்னையின் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கவே, ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. தீபக் சாஹர் பந்தில் ரஷித் கான் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி ஆட்டத்தில் மேலும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை என இருந்த நிலையில், 20வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே முதல் பந்தில் ஒயிடும், 2வது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் தெவாடியா பவுண்டரி விரட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம், குஜராத் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil


  • 23:37 (IST) 31 Mar 2023
    குஜராத் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை!

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 179 ரன்கள் கொண்ட இலக்கை குஜராத் துரத்தி வருகிறது. அந்த அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை


  • 23:13 (IST) 31 Mar 2023
    அரைசதம் அடித்த கில் அவுட்; 15 ஓவர்கள் முடிவில் குஜராத்!

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 179 ரன்கள் கொண்ட இலக்கை குஜராத் துரத்தி வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்துள்ளது.

    அரைசதம் விளாசி அதிரடியாக விளையாடி வந்த கில் 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தற்போது களத்தில் விஜய் சங்கர் - ராகுல் தெவாடியா ஜோடி விளையாடி வருகின்றனர்.


  • 22:53 (IST) 31 Mar 2023
    கில் அரைசதம்!

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 179 ரன்கள் கொண்ட இலக்கை குஜராத் துரத்தி வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அரைசதம் விளாசியுள்ளார்.


  • 22:52 (IST) 31 Mar 2023
    10 ஓவர்கள் முடிவில் குஜராத்!

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 179 ரன்கள் கொண்ட இலக்கை குஜராத் துரத்தி வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்துள்ளது.

    களத்தில் தொடக்க வீரர் ஷுப்மான் கில் - ஹர்திக் பாண்டியா ஜோடி விளையாடி வருகின்றனர்.


  • 22:29 (IST) 31 Mar 2023
    பவர் பிளே முடிவில் குஜராத்!

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 179 ரன்கள் கொண்ட இலக்கை குஜராத் துரத்தி வருகிறது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.

    களத்தில் தொடக்க வீரர் ஷுப்மான் கில் - சாய் சுதர்சன் ஜோடி விளையாடி வருகின்றனர்.


  • 21:36 (IST) 31 Mar 2023
    ருதுராஜ் ரன் மழை; சென்னையிடம் அடிவாங்கிய குஜராத்-க்கு 179 ரன்கள் இலக்கு!

    குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், குஜராத் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிணயிக்கப்பட்டுள்ளது.

    8 சிக்ஸர்க 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட தொடக்க வீரர் ருதுராஜ் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


  • 20:56 (IST) 31 Mar 2023
    குஜராத்தை நொறுக்கி அள்ளும் சென்னை; ருதுராஜ் ரன் மழை!

    குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. 8 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள ருதுராஜ் 78 ரன்கள் எடுத்துள்ளார்.

    தற்போது களத்தில் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் துபே விளையாடி வருகின்றனர்.


  • 20:55 (IST) 31 Mar 2023
    குஜராத்தை நொறுக்கி அள்ளும் சென்னை; ருதுராஜ் ரன் மழை!

    குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. 8 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள ருதுராஜ் 78 ரன்கள் எடுத்துள்ளார்.

    தற்போது களத்தில் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் துபே விளையாடி வருகின்றனர்.


  • 20:54 (IST) 31 Mar 2023
    கேன் வில்லியம்சனுக்கு காயம்!

    சென்னை வீரர் ருதுராஜ் அடித்த சிக்ஸரை மறைக்க முயன்ற கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


  • 20:28 (IST) 31 Mar 2023
    சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதம் விளாசிய ருதுராஜ்; வலுவான நிலையில் சென்னை!

    குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.


  • 20:10 (IST) 31 Mar 2023
    பவர்பிளேயில் பட்டையை கிளப்பிய சென்னை!

    குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும், ஒரு சிக்ஸர் 4 பவுண்டரியை விரட்டிய மொயீன் அலி 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தற்போது களத்தில் ருதுராஜ் கெய்க்வாட் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி விளையாடி வருகின்றனர்.


  • 19:37 (IST) 31 Mar 2023
    களத்தில் சென்னை!

    குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கியுள்ளனர்.


  • 19:32 (IST) 31 Mar 2023
    குஜராத் டைட்டன்ஸ் துணை வீரர்கள்!

    பி சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோஹித் ஷர்மா, அபினவ் மனோகர், கேஎஸ் பாரத்


  • 19:31 (IST) 31 Mar 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் துணை வீரர்கள்!

    துஷார் தேஷ்பாண்டே, சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, நிஷாந்த் சிந்து


  • 19:27 (IST) 31 Mar 2023
    இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்!

    குஜராத் டைட்டன்ஸ்:

    விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்


  • 19:17 (IST) 31 Mar 2023
    டாஸ் வென்ற குஜராத் பவுலிங்; சென்னை முதலில் பேட்டிங்

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


  • 19:08 (IST) 31 Mar 2023
    நேருக்கு நேர்!

    கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் 2 லீக் ஆட்டங்களிலும் சென்னையை வீழ்த்தியது.


  • 19:07 (IST) 31 Mar 2023
    ஐபிஎல் 2023 கோலாகல தொடக்கம்: சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஜடேஜா ஸ்பெஷல் மெசேஜ்!

    சி.எஸ்.கே அணி குஜராத்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் களமாடும் நிலையில், ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/ipl/ipl-2023-gt-vs-csk-jadeja-shares-special-message-for-csk-fans-tamil-news-625039/


  • 19:04 (IST) 31 Mar 2023
    குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பட்டியல்!

    ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, கேன் வில்லியம்சன், உர்வில் பட்டேல், கே.எஸ்.பரத், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஒடியன் சுமித், ஜெயந்த் யாதவ், பிரதீப் சங்வான், ராகுல் திவேதியா, ஷிவம் மாவி, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மொகித் ஷர்மா, அபினவ் மனோகர், நூர் அகமது, யாஷ் தயாள்.


  • 19:02 (IST) 31 Mar 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்!

    எம்.எஸ் தோனி (கேப்டன்), டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், சுப்ரன்ஷூ சேனாபதி, அம்பத்தி ராயுடு, அஜிங்யா ரஹானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோயரிஸ், மிட்செல் சான்ட்னெர், பகத் வர்மா, மொயீன் அலி, ஷிவம் துபே, பென் ஸ்டோக்ஸ், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, மதீஷா பதிரானா, சிசாண்டா மகாலா, ஆகாஷ் சிங்


  • 19:01 (IST) 31 Mar 2023
    புதிய விதிகள்!

    இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்' (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை அறிமுகமாகிறது. இதன்படி ஆட்டத்தின் போது எந்த ஒரு கட்டத்திலாவது ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை களம் இறக்கலாம். அந்த மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். இது ஆட்டத்தின் போக்கு, சூழலுக்கு தக்கப்படி கூடுதலாக ஒரு பவுலரையோ அல்லது பேட்ஸ்மேனையோ பயன்படுத்த வழிவகை செய்கிறது. நிச்சயம் இந்த விதிமுறை ஐ.பி.எல். தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்களின் ஆவல் எகிறியுள்ளது.

    ஆனால் 'டாஸ்' போடும் போதே மாற்று வீரர்களின் 4 பேர் பட்டியலை கொடுத்து விட வேண்டும். வழக்கமாக 'டாஸ்' போடுவதற்கு முன்பாக ஆடும் 11 வீரர்களின் பட்டியலை இரு அணிகளின் கேப்டன்களும் பரிமாறிக் கொள்வார்கள். அதில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இனி 'டாஸ்' போட்ட பிறகு 11 வீரர்களை இறுதி செய்யும் நடைமுறை இந்த ஐ.பி.எல்.-ல் புதிதாக வருகிறது. விக்கெட்டுக்கு மட்டுமின்றி வைடு அல்லது நோ-பால் நடுவர் வழங்கியதில் ஆட்சேபனை இருந்தாலோ அல்லது அவற்றை வழங்க கோரியோ டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்யவும் இந்த முறை அனுமதிக்கப்படுகிறது.


  • 19:01 (IST) 31 Mar 2023
    'ஜியோ சினிமா' ஒளிபரப்பு!

    இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை டி.வி-யில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதற்கான டிஜிட்டல் உரிமத்தை வியாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை இணையதளத்தில் 'ஜியோ சினிமா'வில் வர்ணனையுடன் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளது.


  • 18:26 (IST) 31 Mar 2023
    பரிசுத்தொகை!

    நடப்பு ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகை விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. என்றாலும் கடந்த ஆண்டை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு (தகுதி சுற்றில் தோற்கும் அணி) ரூ.7 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு (வெளியேற்றுதல் சுற்றில் தோற்கும்அணி) ரூ.6½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி கவுரவத்துடன் ரூ.15 லட்சமும், அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலருக்கு ஊதா நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும் கிடைக்கும்.


  • 18:25 (IST) 31 Mar 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முழு பட்டியல்; முகேஷ் சவுத்ரி இடத்தில் யார்?

    முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை சென்னை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    https://tamil.indianexpress.com/sports/ipl/ipl-2023-csk-full-squad-mukesh-choudharys-replacement-tamil-news-625003/


  • 18:16 (IST) 31 Mar 2023
    சென்னை அணி எப்படி?

    சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள். அம்பத்தி ராயுடு, ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங்குக்கு வலுசேர்க்கிறார்கள். ரூ.16¼ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கால் முட்டி பிரச்சினையால் தொடக்க கட்ட ஆட்டங்களில் பந்து வீசமாட்டார். ஒரு வகையில் இது பின்னடைவு தான். அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட உள்ளார். பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ் பாண்டே நம்பிக்கை அளிக்கிறார்கள்.


  • 18:16 (IST) 31 Mar 2023
    குஜராத் அணி எப்படி?

    கடந்த ஆண்டு அறிமுக அணியாக அடியெடுத்து வைத்து எல்லா அணிகளையும் பதம் பார்த்து கடைசியில் கோப்பையையும் வென்று வரலாறு படைத்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என்று மேட்ச் வின்னர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இதில் டேவிட் மில்லர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடுவதால் முதல் இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார்.

    கடந்த சீசனில் நடந்த இரு லீக்கிலும் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அமர்க்களப்படுத்திய குஜராத் அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. அதே சமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க டோனி படை வரிந்து கட்டும். இதனால் தொடக்க ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.


  • 18:00 (IST) 31 Mar 2023
    தோனி புதிய மைல்கல்!

    கடந்த ஆண்டில் முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதுடன் கடைசியில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை அணி அந்த மோசமான நிலைமையை மாற்றி வெற்றியுடன் தொடங்கும் ஆவலில் வியூகங்களை தீட்டி வருகிறது. 41 வயதான கேப்டன் டோனிக்கு அனேகமாக இது தான் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு மட்டையை சுழற்ற வருவதால் அவரது தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பு போல் முத்திரை பதிப்பாரா ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இன்னும் 22 ரன் எடுத்தால் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார்.


  • 17:53 (IST) 31 Mar 2023
    பங்கேற்கும் அணிகள் விபரம்?

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.


  • 17:51 (IST) 31 Mar 2023
    போட்டி நடைபெறும் இடங்கள்?

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.


  • 17:15 (IST) 31 Mar 2023
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Cricket Sports Chennai Super Kings Live News Live Updats Gujarat Titans Ipl Live Score Ipl News Ipl Cricket Live Updates Live Cricket Score Ahmedabad Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment