ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியதில் முக்கியப் பங்காற்றினார்.
23 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.
இந்நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் பிளெஸ்சிஸ் இவரை பாராட்டினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சர்வதேச போட்டிக்கு திரும்ப வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
போராட்ட குணம் நிறைந்த வீரர். நெருக்கடியான தருணத்திலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் எங்கள் அணியின் சிறந்த சொத்தாகும். அவர் இறுதி கட்டத்தில் பதற்றமின்றி செயல்படுவது சக வீரர்களும் நன்றாக விளையாட உதவுகிறது என்றார்.
சிஎஸ்கே பயிற்சி அகாடெமி!
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்திலும் சேலம் வாழப்பாடி ஆகிய இடங்களில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடெமி தொடக்க விழா நேற்று நடந்தது.
சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், , பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி, தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் இணைய வழியில் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
இதில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் வீரர்கள் சூப்பர் கிங்ஸ் அகாடெமி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ராகுல் சாதனையை சமன் செய்த கொல்கத்தா வீரர்…
அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் உடன் கம்மின்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் அந்த அணி தடுமாறினாலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் அவருடன் இணைந்து கம்மின்ஸ் தனது பங்கிற்கு சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் இருந்தார். இந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் கேஎல் ராகுல் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ராகுல் தற்போது லக்னோ அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
KKR vs MI Highlights: சிக்ஸர் மழை பொழிந்த கம்மின்ஸ்; மும்பையை வீழ்த்திய கொல்கத்தாவுக்கு அபார வெற்றி!
வருகிறார் அதிரடி வீரர் வார்னர்
லக்னோ அணியுடனான போட்டியில் பங்கேற்பதற்கு வார்னர், நோர்ஜே தயாராக இருப்பதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரை தங்கள் அணியில் ஏலம் எடுத்தது.
பாகிஸ்தான் தொடரில் தேசிய அணிக்காக விளையாடி வந்ததால் டெல்லி அணியின் போட்டிகளில் வார்னர் தற்போது வரை விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது லக்னோ அணியுடனான அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கு அவர் தயாராக இருப்பதாக அந்த அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
“டேவிட் வார்னர் பயோ பபிளில் இருந்து பயிற்சிக்கு திரும்பிவிட்டார். அடுத்த போட்டியில் விளையாட அவர் தயாராக இருக்கிறார். அதே போல் உடல்தகுதி தேர்வை முடித்துவிட்டு ஆன்ரிச் நோர்ஜேவும் அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கு தயாராக இருக்கிறார் ” என அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil