ஐ.பி.எல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 13 ஆட்டங்களில் 7 இல் வெற்றி பெற்று 15 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ப்ளே ஆஃப்க்கு செல்வதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சி.எஸ்.கே அணி துரதிர்ஷ்டவசமாக, சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த கடைசி ஹோம் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், சுனில் நரைன் (2/15), வருண் சக்ரவர்த்தி (2/36) போன்ற கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்களால் சென்னை அணி பேட்டிங்கில் தடுமாறி, தோல்வி அடைந்தது.
இதையும் படியுங்கள்: IPL 2023 Playoffs chances: சென்னைக்கு வெற்றி முக்கியம்; மும்பை, லக்னோ, பெங்களூருவின் வாய்ப்பு எப்படி?
இப்போது அனைத்து ரசிகர்களுக்கும் உள்ள கேள்வி என்னவென்றால், சி.எஸ்.கே அணி இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறாததால், ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறுமா என்பது தான்.
சி.எஸ்.கே அணி இறுதியாக 15 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தால், நிச்சயம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது. ஏனெனில் சி.எஸ்.கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. மே 20 ஆம் தேதி டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சி.எஸ்.கே அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் தோற்றால், சி.எஸ்.கே அணி 15 புள்ளிகளுடன் மட்டுமே இருக்கும்.
அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே 16 புள்ளிகளுடன் சி.எஸ்.கே.,வை விட முன்னணியில் உள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகிய அணிகள் 15 புள்ளிகளுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது. மும்பை அதிகபட்சமாக 18 புள்ளிகளை அடையலாம், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகியவை அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெறலாம்.
மும்பை அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன. மே 16 ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எதிர்கொள்கிறது. மே 21 ஆம் தேதி மும்பையில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
பெங்களூரு அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன. மே 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் எஸ்.ஆர்.எச் அணியை எதிர்கொள்கிறது. மேலும், மே 21 அன்று பெங்களூரில் குஜராத் அணியுடன் மோதுகிறது.
பஞ்சாப் அணிக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன. மே 17 அன்று தர்மசாலாவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மேலும் மே 19, தர்மசாலாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடன் மோதுகிறது.
மும்பை, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களையும் வென்றால் முறையே 18, 16 மற்றும் 16 புள்ளிகளை எட்டும். எனவே சி.எஸ்.கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.
டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சி.எஸ்.கே தோற்று, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியல் கீழ்கண்டவாறு இருக்கும்.
குஜராத் - 16/18
மும்பை – 18
பெங்களூரு – 16
பஞ்சாப் – 16
சென்னை – 15
இதனால் 5 ஆம் இடத்தைப் பிடிக்கும் சென்னை அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது. எனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.