‘நீ வேணும்னா முட்டாளா இருந்துட்டு போ; ஆனா சைலண்ட்டா இரு’ – யாரை சொல்றார் இவர்?

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் கிரிக்கெட் களத்தை தாண்டி, சமூக தளத்தில் மிக ஆக்டிவாக இயங்கக் கூடியவர். பெரும்பாலும் இவரது ட்வீட்கள் கிண்டல் ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். நியூஸி., மட்டுமில்லாது, உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஜிம்மி, அதைப் பற்றிய தனது கருத்துகளை…

By: March 19, 2020, 5:40:56 PM

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் கிரிக்கெட் களத்தை தாண்டி, சமூக தளத்தில் மிக ஆக்டிவாக இயங்கக் கூடியவர். பெரும்பாலும் இவரது ட்வீட்கள் கிண்டல் ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். நியூஸி., மட்டுமில்லாது, உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஜிம்மி, அதைப் பற்றிய தனது கருத்துகளை அல்லது விமர்சனங்களை பாரபட்சமின்றி ட்விட்டரில் வைத்துவிடுவார்.

மேக்ஸ்வெல் அனுபவித்த ‘இந்திய நிச்சயதார்த்தம்’ – காதலியை விட ரொம்ப வெட்கப்படுறாப்ல! (வீடியோ)

அப்படியொரு அவரது ட்வீட் ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


கொரோனா வைரஸ் அமெரிக்காவையும் விட்டுவைக்காமல் அச்சுறுத்திக் கொண்டிருக்க, அங்கு மியாமி நகரில் இளசுகள் ஒன்று கூடி எந்த வித பாதுகாப்பு உணர்வுமின்றி பார்ட்டி ஒன்றை நடத்தி இருக்கின்றனர். பார்ட்டி நடத்தியது மட்டுமின்றி, ‘கொரோனா வைரஸை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை; வாழ்க்கை இன்பமாக வாழ்வதற்கே என்றெல்லாம் பேட்டிகளை அள்ளித் தெளிக்க, டென்ஷனாகிவிட்டார் நீஷம்.

கொக்கரிக்கும் கொரானா – ‘போடா டேய்’ மோடில் தோனி (வீடியோ)

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “முட்டாள்தனமான கருத்துகள் குறித்து ஒரு பொது ஊடகத்தில் பேசுவது என்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பது எனக்கு எப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் விரும்பினால் முட்டாள்தனமாக இருங்கள், ஆனால் அதை அமைதியாக வைக்க முயற்சி செய்யுங்கள்” என்று காண்டாகி ட்வீட் செய்திருக்கிறார்.

அறியா வயசுல.. அதான் இப்படி துள்ளுதுக!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Jimmy neesham miami spring breakers for partying despite coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X