ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட ஜெயிக்கவில்லை.
ஆனால், அந்த அணியின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் அதிக அளவில் டிரெண்டாகி வருகிறார்.
ஆட்டம் தொடங்கும்போது உற்சாகமாக காணப்படும் அவர், அதன் பிறகு சோர்வடைந்து விடுகிறார்.
இப்படி அவர் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும்போது கொடுக்கும் ரியாக்ஷன்களை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற தனது முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்டது ஐதராபாத் அணி. இந்த முறை கேன் வில்லியம்சன் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அந்த ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஐதராபாத் வீரர்கள் விக்கெட்டை பறிகொடுக்கும் போதெல்லாம் ஆட்டத்தை பார்க்கும் காவ்யா கவலைப்படும் ரியாக்ஷன்களை கொடுத்து வருகிறார்.
அந்தப் புகைப்படங்களை தொகுத்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட மீமை பாருங்கள். சிரித்த புகத்துடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து அதன் மீது மேட்ச் தொடங்கும்போது காவ்யா அக்கா இந்த மாதிரி சிரிச்சுட்டு இருக்காங்க.
மேட்ச் நடக்கும்போது அவங்களோட பலவித ரியாக்ஷன்களை பாருங்கன்னு அவர் சோகமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மற்றொரு சமூகவலைதளவாசி, ஹைதரபாத் ஆட்டத்தில் நல்ல விஷயம் காவ்யா மட்டும் தான் என்று கூறி அவருடைய பகிர்ந்துள்ளார்.
SRH vs LSG highlights: ஐதராபாத் போராட்டம் வீண்; லக்னோவுக்கு அசத்தல் வெற்றி!
மற்றொரு ரசிகர், சந்தேகமே இல்லை. எனக்கு ஐதராபாத் அணியை பிடிக்கும் என்று இவருடைய புகைப்படங்களை பகிர்ந்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், ஒரே ஒரு பாசிட்டிவான விஷயம் காவ்யாவின் புன்னகை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவ்யாவை இப்படி பார்ப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று மற்றொரு நெட்டிசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறாக காவ்யா, சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் டிரெண்டாகி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“