kerala fans huge response to sanju samson video dhoni rishabh pant - தண்ணீர் பாட்டில் தூக்கினாலும் சஞ்சு தான் அங்கு ஹீரோ; ரிஷப் பண்ட் நிலைமை பரிதாபமே - (வீடியோ)
கேரள கிரிக்கெட் ரசிகர்கள், பிசிசிஐ மீது செம காண்டில் இருக்கின்றனர். நேற்று(டிச.08) வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், மண்ணின் மைந்தன் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
Advertisment
ஆனால் ,ரிஷப் பண்ட்டுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. பேட்டிங்கில் 22 பந்துகளுக்கு 33 ரன்கள் என்று பாராட்டும் படி ஒன்றும் செய்யவில்லை. கீப்பிங்கிலும், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின் போது, 5வது ஓவரில், எவின் லூயிஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல், பண்ட் தவற விட்டார். அதிர்ச்சியான ரசிகர்கள், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் பெயரை உரக்க சொல்ல துவங்கினர். இதனால் கோலி கடுப்பானது தனிக்கதை.
முன்னதாக, சஞ்சு சாம்சன் இந்திய அணியினருடன் கேரளா வந்த போது, அவர்க்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலிக்கே 'சைடுல போங்க தம்பி' என்பது போல் இருந்தது சாம்சனுக்கான ரெஸ்பான்ஸ்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சஞ்சுவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பலரும்,சமூக தளங்களில் பிசிசிஐ மீது அதிக விமர்சனம் வைத்துள்ளனர்.
தண்ணீர் பாட்டில் தூக்கதான் அவரை அணியில் சேர்த்தீர்களா என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.