KXIP vs KKR 2019 Online Streaming: ஐபிஎல் 2019 தொடரில் இன்று (மார்ச்.27) நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் 2019 தொடரில், இரு தமிழ் பிள்ளைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெறுகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா vs பஞ்சாப் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டை காண இங்கே க்ளிக் செய்யவும்
கொல்கத்தா தனது முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்த, பெரும் சர்ச்சைக்கு இடையே பஞ்சாப் அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.
பஞ்சாப் நிகழ்த்திய அந்த பெரும் சர்ச்சை என்னவென்று அறிய இங்கே க்ளிக் செய்யவும்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கடந்த போட்டியில் நிதிஷ் ராணா சிறப்பாடி ஆடி அரைசதம் அடித்தார். உத்தப்பாவின் 'டச்' அபாரமாக இருந்தது. தவிர, தினேஷ் கார்த்திக், க்ரிஸ் லின், ஷுப்மன் கில் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். ஆண்ட்ரே ரசல் தான் அல்டிமேட். அவரது அதிரடி எப்பேற்பட்ட பவுலர்களையும் அச்சுறுத்துகிறது.
பந்துவீச்சில், சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, லோகி ஃபெர்கியூசன் ஆகியோர் டஃப் கொடுக்க காத்திருக்கிறார்கள்.
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை, 'யுனிவர்சல் பாஸ்' க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், சர்ஃபரஸ் கான் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகோலஸ் பூரன் ஆட்டம் எடுபடவில்லை. அவரும் ஃபார்முக்கு வரும் பட்சத்தில் பஞ்சாப் பேட்டிங் மேலும் வலிமை பெறும்.
பவுலிங்கில் அஷ்வின், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சவால் அளிக்கக் கூடிய வகையில் பந்துவீசுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், அன்கித் ராஜ்புத்-ன் பவுலிங்கும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்.