Advertisment

அசல் ஹீரோவான ரசல்! போராடி தோற்றது பஞ்சாப்!

KKR vs KXIP IPL 2019 Match 6: கொல்கத்தா வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019: KKR beat KXIP

IPL 2019: KKR beat KXIP

KKR vs KXIP: ஐபிஎல் 2019 தொடரில் இன்று (மார்ச்.27) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதின. இதில், கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

இரு தமிழ் பிள்ளைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தினேஷ் கார்த்திக் இறுதியில் வெற்றிப் பெற்றார்.

 

Live Blog

Vivo IPL 2019 KKR vs KXIP Match 6 Live Score



























Highlights

    23:38 (IST)27 Mar 2019

    கொல்கத்தா வெற்றி!

    28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றிப் பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டும் எடுத்து பஞ்சாப், இந்த தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது.

    23:34 (IST)27 Mar 2019

    யோவ் கணிப்பு....

    யோவ் கணிப்பு... நாளைய மேட்சுக்கு இந்தப் பக்கம் வந்துடாத... நீ என்ன சொல்றியோ அதுக்கு ஆப்போசிட்டா தான் எல்லாம் நடக்குது.. உன்னால, நான் செருப்படி வாங்க வேண்டியதா இருக்குயா... தயவு செஞ்சு நாளைக்கு வந்துடாத...

    அத, நாளானைக்கு பாப்போம்...

    23:33 (IST)27 Mar 2019

    மில்லர் 50

    டேவிட் மில்லர் 50 அடித்தும், எந்தவித ஆர்ப்பட்டமும் இல்லை. எங்க, அதான் முடிஞ்சு போச்சே! 

    23:28 (IST)27 Mar 2019

    12ல் 57

    முடியுமா? ம்ஹூம்!! அப்புறம் என்ன முழிப்பு, போய் தூங்குடா கைப்புள்ள...!

    23:20 (IST)27 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்!!

    வாய்யா... நீ தான் கொல்கத்தா ஜெயிக்கும்-னு பிளேட்டையே மாத்திப் போட்டுட்டியே... இப்போ எதுக்கு வந்த?

    கன்ஃபார்மா கொல்கத்தா தான் ஜெயிக்கும்-னு சொல்லிட்டு போக வந்தேன்...

    அத பச்சக் குழந்தை கூட சொல்லிடும்... கெளம்பு, கெளம்பு!

    23:14 (IST)27 Mar 2019

    மாயங்க் அவுட்!

    34 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த மாயங்க் அகர்வால், பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் லெக் ஸ்டெம்ப்பை பறிகொடுத்தார். நல்ல கூக்ளி பந்து. சரி, பரவால, விடு... என்ன பண்ண முடியும்? இமய மலையை விட, பெருசா டார்கெட் இருந்தா சுத்த தான் முடியும்.

    23:11 (IST)27 Mar 2019

    133-3

    15 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிப் பெற 30 பந்துகளில் 86 அடிக்கணும். ரொம்ப ரொம்ப கடினமான ஒரு டார்கெட் இது. கெயில் - டி வில்லியர்ஸ் மாதிரியான ஒரு பார்ட்னர்ஷிப் கடைசி வரை களத்தில் நின்றால் கூட, கடினமான இலக்கு இது.

    23:03 (IST)27 Mar 2019

    மாயங்க் 50

    இந்தப் பையன்ட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்குறோம்!! கேம் இன்னும் முடியல மாயங்க்.... தோற்றாலும் பரவால்ல... கடைசி வரைக்கு களத்தில் நின்று, முடிந்ததை அடிங்க.. பிசிசிசியை விட ரசிகர்கள் உங்களை கூர்மையா கவனிக்குறாங்க

    23:00 (IST)27 Mar 2019

    7 ஓவருக்கு 102 அடிக்கணும்

    இன்னும் சரியாக 42 பந்துகளில் 102 ரன்கள் அடிக்கணும் வெற்றிப் பெற, முடியுமா?

    22:54 (IST)27 Mar 2019

    மில்லர் கேம் ஸ்டார்ட்ஸ்

    டேவிட் மில்லர் அடுத்தடுத்து 2 சிக்ஸ் மற்றும் பவுண்டரியை அடித்து தனது கணக்கை தொடங்கியுள்ளார். மாயங்க் நல்ல சப்போர்ட் கொடுத்தால், இப்போ கூட, பஞ்சாப் டஃப் கொடுக்க வாய்ப்புகள் இருக்கு!

    22:46 (IST)27 Mar 2019

    நாளைக்கு இருக்கு செம மேட்சு!

    நாளைக்கு யார் மோதப் போறாங்கனு நினைக்குறீங்க? கோலி vs ரோஹித்!! யெஸ்... பெங்களூரு vs மும்பை!! செம மேட்சுல... யாரு நாளைக்கு முதல் வெற்றியை ரெஜிஸ்டர் பண்ணப் போறாங்களோ!!

    22:36 (IST)27 Mar 2019

    மில்லர்... கில்லர்

    டேவிட் மில்லர் களமிறங்கியாச்சு... அட்லீஸ்ட் 5 சிக்ஸர்களை எதிர்பார்க்கலாம்!! என்ன நான்ஜ் சொல்றது!?

    22:35 (IST)27 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    இப்போ சொல்லுயா பார்ப்போம், உம்ம கணிப்ப...

    இப்போதுள்ள நிலவரப்படி, கொல்கத்தா 70 சதவிகிதம் வெற்றிப் பெற வாய்ப்பிருக்கு... என்னய்யா பொசுக்குனு உன் கணிப்பை மாத்திட்ட... 

    என்கிட்டே பேசுறது இருக்கட்டும், அங்க பாரு, சர்ஃபரஸ் அவுட்!

    ரசல் ஓவரில் 13 ரன்களில் சர்ஃபரஸ் அவுட்

    22:32 (IST)27 Mar 2019

    ஒரு ஃபோருக்கு இவ்ளோ அக்கப் போறா?

    5.1வது பந்தை அகர்வாலுக்கு பிரசித் வீசினார். அந்த பந்தை அவர் ஆஃப் சைடில் அடிக்க, பீல்டர் கையில் சிக்கியது. ஒரேயொரு சிங்கிள் மட்டும், ஓட, அந்த ஃபீல்டர், அம்பயர் பக்கம் பந்தை த்ரோ செய்ய, அதை சரியாக கவனிக்காத ரசல், கைகளால் தலையை மூடிக் கொண்டு, பந்தை விட, அது பவுண்டரிக்கு சென்றுவிட்டது. அதற்கு அம்பயர் நான்கு ரன்கள் அறிவிக்க, உத்தப்பாவும், தினேஷ் கார்த்திக்கும் அம்பயர்களை வட்டமிட்டுவிட்டனர். ஒரு நிமிடத்திற்கு காரமான வாக்குவாதம் பரிமாற, நம்ம அஷ்வின் எல்லைக் கோடு அருகே டென்ஷனாக நிற்க..... ஒரு ஃபோருக்கு இவ்ளோ அக்கப் போறா!!?

    22:18 (IST)27 Mar 2019

    கெயில் அவுட்!

    'யுனிவர்சல் பாஸ்' வீட்டுக்கு கிளம்பிட்டார். 20 ரன்களில், ரசல் ஓவரில் கெயில் அவுட். 47 ரன்னையும் அடிச்சிட்டு, கெயில் விக்கெட்டையும் காலி பண்ணிடாப்ள... நேரம் உச்சத்துல இருக்கு போல...

    22:09 (IST)27 Mar 2019

    மாயங்க், இது உனக்கான களம்!

    மாயங்க் அகர்வாலை பற்றி நாம போன மேட்சே பேசினோம். ஆரம்பம் முதலே சரவெடியா வெடிக்கக் கூடிய ஒரு பேட்ஸ்மேன். 15வது ஓவர் வரை களத்தில் நின்னுட்டா, கொல்கத்தாவுக்கு நிச்சயம் நெருக்கடி தான்.

    22:04 (IST)27 Mar 2019

    லோகேஷ் ராகுல் அவுட்!

    தம்பி... என்ன தம்பி, பொசுக்குனு போயிட்டீங்க...? உலகக் கோப்பைக்கு உங்களை வச்சு பிசிசிஐ கனவுக் கோட்டையே கட்டியிருக்கு தம்பி!! நீங்க பாட்டுக்கு 1 ரன்னுல அவுட்டாகிட்டு போறீங்க!! அதுசரி, உங்கள் லாபி ரொம்ப ஸ்ட்ராங்!! கவலையில்ல...

    22:01 (IST)27 Mar 2019

    ஒரு 6, ஒரு 4

    பிரசித் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி... அடிச்சது கெயில்... ஆனா, பிரசித் வீசிய பந்துகள்-லாம் 145+ ரகம்!! பரவலாயே!!!

    21:58 (IST)27 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே வாங்கண்ணே!! பஞ்சாப் ஜெயிக்கும்-னு நீ சொன்னதுக்காகவே, கொல்கத்தா 218 ரன் அடிச்சாங்கன்னு நான் சொல்ல மாட்டேன்-னே.., சொல்லவே மாட்டேன்... சரி, இப்போ சொல்லு யாரு ஜெயிப்பா?

    நீ என்ன சொன்னாலும் சரி... ஜெயிக்கப் போவது பஞ்சாப் தான்!.

    அப்டீங்களா-னே... சரிங்கனே, சரிங்கனே

    21:56 (IST)27 Mar 2019

    களத்தில் பஞ்சாப்

    கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், க்ரிஸ் கெயில் களமிறங்கியுள்ளனர். 219 டார்கெட்... முடியுமா? பார்ப்போம்

    21:46 (IST)27 Mar 2019

    219 ரன்கள் இலக்கு!

    20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 218 ரன்கள் விளாசியுள்ளது.

    21:40 (IST)27 Mar 2019

    ரசல் அவுட்!

    மனசாட்சியே இல்லாமல் 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய, டை ஓவரில் சிக்ஸ் லைனில், மாயங்க் அகர்வாலின் சிறப்பான பீல்டிங்கால் கேட்ச் ஆனார். ஸோ, அவரை யாரும் அவுட் பண்ணல.. அவர் அவுட்டாகி போயிருக்கார்!!.

    21:36 (IST)27 Mar 2019

    216664

    ஷமி வீசிய 19வது ஓவரில் ரசல் கொஞ்சிய பந்துகள் இவை! லாஸ்ட் ஓவர் என்ன ஆகப் போகுதோ!!!

    21:31 (IST)27 Mar 2019

    மூர்க்கத்தனமாக அடிக்கும் ரசல்!

    சும்மாவே இந்த மனுஷன் பொளப்பான்... இதுல, போல்ட் வேற ஆகி, அது ஃப்ரீ ஹிட்டா மாறி, அந்தக் கோவத்துல, இப்போது பபுதுசு புதுசா பொளக்குறான். பாவம் பஞ்சாப் பவுலர்ஸ்!

    21:24 (IST)27 Mar 2019

    ரசல் போல்ட்!

    ஷமி... இந்த விக்கெட்... இந்த விக்கெட் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரித்துவிட்டது என்று சொல்லத் தான் ஆசை... ஆனா, நோ-பால். கைக்கு கிடைச்சது வாய்க்கு கிடைக்காம போச்சே!! 

    21:18 (IST)27 Mar 2019

    ராபி 50

    உத்தப்பாவிடம் இந்த சீசனில் நல்ல சேஞ் காண முடிகிறது. அவரது ஷார்ட்ஸ் நேர்த்தியாக, சரியான நேரத்தில் டச் செய்து பந்துகளை வெளியே அனுப்புகிறார். இப்போது 50... வெல் டன் ராபி.. நீங்க சாதிக்க இன்னும் நிறைய இருக்கு. 

    21:09 (IST)27 Mar 2019

    வருணின் முதல் விக்கெட்!

    களத்தை ஆக்கிரமித்து துவம்சம் செய்துக் கொண்டிருந்த நிதிஷ் ராணாவை 63 ரன்களில் வெளியேற்றினார் தமிழகத்தில் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. கமான் வருண்.... வீட்டுக்கு வந்துடாத, ஐபிஎல் ஃபுல்லா ஜமாய்ச்சிட்டு வா!

    21:06 (IST)27 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    வாய்யா.. வா... நீ பஞ்சாப் தான் ஜெயிக்கும்-னு சொன்ன போதே தெரியும், கொல்கத்தா தான் ஜெயிக்கும்-னு... மானவாரிய கொல்கத்தா அடிக்குதுயா.. இதுக்கு என்ன சொல்லப் போற?

    இப்பவும் சொல்றேன்.... ஜெயிக்கப் போவது பஞ்சாப் தான்.

    அடப் போயா!!

    21:04 (IST)27 Mar 2019

    ராணா 50.... எகிறும் ரன் ரேட்

    முதல் போட்டியில் அரைசதம் அடித்த நிதிஷ் ராணா, இப்போட்டியிலும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இவரது அதிரடி ஆட்டத்திற்குப் பிறகு, கொல்கத்தாவின் ரன் ரேட் 10-ஐ தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

    20:59 (IST)27 Mar 2019

    கொல்கத்தா அபாரம்!

    2 விக்கெட்டுகள் இழந்த பிறகும், கொல்கத்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பான, ராணா, சிக்ஸர் மழையை பொழிந்து வருகிறார். உத்தப்பா வழக்கம் போல், தனது நீட் டச்-சால் ரன்களை குவித்து வருகிறார். 

    20:49 (IST)27 Mar 2019

    89-2

    10 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 89 ரன்கள் எடுத்துள்ளது.

    20:39 (IST)27 Mar 2019

    வாய்ப்புகளை வீணடிச்சுடாதீங்க ப்ரோஸ்!!

    தமிழகத்தை சேர்ந்த முருகன் அஷ்வின் யாருமே எதிர்பார்க்காத அளவில் கோடிகளை கொட்டி ஐபிஎல்-ல் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அடுத்த சீசனில் அவர் ஆளையே காணும். அதேபோல், இப்போ மீண்டும் வருண் சக்கரவர்த்தி ஆகிடுவாரோ-னு பதட்டமாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் அடித்தளமாக இருந்தது தமிழ்நாடு பிரீமியர் லீக். நீங்க சாதிச்சா தான் ப்ரோ, அடுத்து வர்றவங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    20:29 (IST)27 Mar 2019

    Walking down the Track உத்தப்பா எங்கே?

    இப்போ கிரிக்கெட் பார்க்குறவங்களுக்கு எல்லாம் தெரியாது, ராபின் உத்தப்பா எப்படிப்பட்ட பிளேயர்-னு. ரோஹித் ஷர்மாவுக்கு இந்திய அணி அளித்த வாய்ப்புகளில் பாதி வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்திய அணியில் இன்று தவிர்க்க முடியாத வீரராகி இருப்பார். யார்க்கர் பந்தில் சிக்ஸ் அடிச்சு பார்த்து இருக்கீங்களா? அது யார்க்கராக மாறுவதற்கு முன்னாலேயே டவுன் டூ தி டிராக் நடந்து வந்து, புல்டாஸ் பந்தாகவே அதை சிக்சருக்கு அனுப்பியவர் உத்தப்பா!! ம்ம்ம்ம்.... என்னத்த சொல்ல!

    20:22 (IST)27 Mar 2019

    நரைன் அவுட்!

    அறிமுக தென்னாப்பிரிக்க பவுலர் ஹார்டஸ் வில்ஜோன்-ன் ஷார்ட் பிட்ச் பந்தில், டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார் சுனில் நரைன்... ஆக, கொல்கத்தா ஓப்பனர்ஸ் இருவரும் காலி!!

    20:14 (IST)27 Mar 2019

    க்ரிஸ் லின் அவுட்!

    வேகம் இருக்கலாம்... விவேகமும் இருக்கணும்... எல்லா பந்தையும் தூக்கி அடிச்சா இப்படித் தான். ஷமி ஓவரில் 10 ரன்களில், க்ரிஸ் லின் கேட்ச் ஆனார்.

    20:13 (IST)27 Mar 2019

    என்னை செதுக்கிய சுனில் நரைன் - வருண் சக்கரவர்த்தி

    'ஸ்பின் பந்துவீச்சில் என்னை செதுக்கியவர் சுனில் நரைன்' என்று நமது ஐஇ தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரிலேயே 25 ரன்கள் விளாசியுள்ளார் சுனில் நரைன்.

    20:09 (IST)27 Mar 2019

    வருண் சக்கரவர்த்தி முதல் ஓவர்...

    1,6,2,4,6,6    நம்ம 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரில், சுனில் நரைன் தனி ஆளாக அடித்த ரன்கள் இவை. மொத்தமாக 25 ரன்கள்.. மோசம் தான்.. இருந்தாலும், தமிழன் மீண்டு வருவான் பா...

    20:01 (IST)27 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்!

    மேட்சுக்கு முன்னாடி ஒரு Prediction சொல்லப்பா.....

    ம்ம்ம்... இன்னைக்கு பஞ்சாப் ஜெயிக்கத் தான் வாய்ப்புகள் இருக்குறதா என் கண்ணுக்குத் தெரியுது!!

    அப்போ.. பஞ்சாப் ஜோலி ஓவர்...!

    19:59 (IST)27 Mar 2019

    சுனில் நரைன் ரசிகரா நீங்க?

    முதல் ஆட்டத்தில் க்ரிஸ் லின்னுடன், நிதிஷ் ராணா களமிறங்கிய நிலையில், இப்போட்டியில் சுனில் நரைன் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். எந்த பவுலர் சிக்கப் போறாரோ!?

    19:57 (IST)27 Mar 2019

    கொல்கத்தா பிளேயிங் XI

    க்ரிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக்(w/c), ஷுப்மன் கில், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லோகி ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா

    19:47 (IST)27 Mar 2019

    பஞ்சாப் பிளேயிங் XI

    க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், ரவிச்சந்திரன் அஷ்வின்(c), வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, ஆண்ட்ரூ டை

    19:34 (IST)27 Mar 2019

    பஞ்சாப் பவுலிங்! வருண் சக்கரவர்த்தி அணியில்....

    டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதில், தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி முதன் முதலாக அணியில் இடம் பிடித்துள்ளார். அதாங்க.. நம்ம '6 வேரியேஷன்' ஸ்பின்னர்.

    19:13 (IST)27 Mar 2019

    டேய்.... நான் யுனிவர்சல் பாஸ் டா....

    என்னங்கடா.... சும்மா ரசல், குசல்-னு பேசிக்கிட்டு... இங்குட்டு நான் யுனிவர்சல் பாஸ் இருக்கிறேன்... மறந்துடாதீங்க என இன்று மீண்டும் கெத்து காட்ட முயற்சிப்பாரா பஞ்சாப் அணியின் க்ரிஸ் கெயில்...? 

    19:01 (IST)27 Mar 2019

    மிரட்டும் ரசல்

    ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்ட்ரே ரசல் ஆட்டம் மிரட்டியது. அவரது பேட்டில் படும் பந்துகள் அனாயசமாக பெவிலியனை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறக்கின்றன. நிச்சயம், ரசல் இன்றைய போட்டியிலும் பெரிய அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை.

    18:39 (IST)27 Mar 2019

    வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

    நேற்று ப்ரோ.. இன்றைக்கு நெஞ்சங்களே... தமிழ், ஆங்கிலம் இரண்டும் நமது கண்கள் அல்லவே! அதேபோல், நம் இரு தமிழ் கண்மணிகளான தினேஷ் கார்த்திக், அஷ்வின் நேருக்கு நேர் இன்று மோதுகின்றனர். எந்த கண்ணு-ல குத்துனாலும் வலி நமக்கே. ஸோ, இன்னைக்கு ஒன்லி ஃபீலிங்ஸ் தான். அப்புறம், நம்ம 'கணிப்பு கண்ணாயிரமும்' உங்களுக்காக கணிப்புகளை அள்ளித் தெளிக்க காத்திருக்கிறார்.

    Kxip Vs Kkr Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment