Vivo IPL 2019, KKR vs SRH Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரின் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் 2019 சீசன் நேற்று சிறப்பாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற, இன்று சூப்பர் சண்டே என்று சொல்லும் அளவிற்கு, செமயான இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இன்று மாலை நான்கு மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புவனேஷ் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
மேலும் படிக்க – தல, தளபதி இருந்தாலும் அங்க சூப்பர் ஸ்டார் யாராக இருக்க முடியும்? – சிஎஸ்கே vs ஆர்சிபி பெஸ்ட் மொமன்ட்ஸ்
கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇ தமிழில் காண இணைந்திருங்கள். மாலை 4 மணி முதல் லைவ் கிரிக்கெட்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.
இங்கே க்ளிக் செய்யவும்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட, ஷகிப் அல் ஹசன் பந்து வீசினார். அதில், இரு சிக்ஸர்களை விளாசிய ஷுப்மன் கில், வெற்றியை உறுதி செய்தார். ரசல் 19 பந்துகளில் 49 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 பந்துகளில் 18 ரன்களும் விளாசி வெற்றியை உறுதி செய்தனர்.
ஒண்ணுமில்ல…. புவனேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் ரசல் அடித்த ரன்கள் தான் இவை!.
சித்தார்த் கவுலின் 18வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ரசல்.
விளக்குகள் மீண்டும் சரி செய்யப்பட்டு, ரஷித் கான் வீசிய முதல் பந்திலேயே நிதிஷ் ராணா 68 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.
மைதானத்தின் பிரம்மாண்ட லைட் போஸ்ட்டில் விளக்குகள் திடீரென அணைந்ததால், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
நிதிஷ் ராணா தனது ஆறாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். இன்னும் ஆட்டம் முடியவில்லை. வெற்றிப் பெறும் வரை ராணா களத்தில் நிற்க வேண்டியது அவசியம்.
14 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரசல், ராணா…..
சித்தார்த் கவுல் ஓவரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் ஆனார். முக்கியமான கட்டத்தில் இரு முக்கிய விக்கெட்டுகளை காலி செய்துள்ளார் சித்தார்த்
சித்தார்த் கவுல் ஓவரில், ஆஃப் ஸ்டெம்ப்புகள் சிதற 35 ரன்களில் வெளியேறினார் உத்தப்பா. ஆனால், நின்றிருந்தால் நிச்சயம் கதி கலங்க வைத்திருப்பார் என்பது உறுதி!
ஷகிப் வீசிய 11வது ஓவரில் இரண்டு ஹியூஜ் சிக்ஸர்களை உத்தப்பா பறக்கவிட்டுள்ளார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள்.
பத்து ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 112 ரன்கள் தேவை.
தொடக்கத்திலேயே க்ரிஸ் லின் விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், ராபின் உத்தப்பா – நிதிஷ் ராணா ஜோடி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம், ரஷித் கான் ஓவரில், கைக்கு வந்த எளிதான கேட்சை யூஸுப் பதான் கோட்டைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக க்ரிஸ் லின், நிதிஷ் ராணா களமிறங்கியுள்ளனர்.
முதல் 10 ஓவரில் 92 ரன்கள் எடுத்த எஸ்ஆர்ஹெச், கடைசி பத்து ஓவரில் 89 ரன்களே எடுத்தது. அதில், 40 ரன்கள் விஜய் ஷங்கர் அடித்தது.
தொடக்கத்தில் இருந்த ஸ்கோருக்கு, இது குறைவான டார்கெட் தான் என்றாலும், இறுதிக் கட்டத்தில் விஜய் ஷங்கர் 2 சிக்ஸ், 2 பவுண்டரி என அடிக்க இந்த ஸ்கோர் வந்தது. 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் விஜய் ஷங்கர்!
18.3வது விஜய் ஷங்கர் ஒரு கிராக்கிங் சிக்ஸ் அடிக்க, அதே ஓவரின் 5வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், ரிவியூவில் அவர் அவுட் இல்லை என்பது தெளிவாக, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.
ரசலில் ஒரு சிறப்பான லென்த் பந்தில், யூஸுப் பதான் போல்டானார்.
761 டேவிட் வார்னர்<br />757 ரோஹித் ஷர்மா
746 சுரேஷ் ரெய்னா
615 க்ரிஸ் கெயில்
543 ஷிகர் தவான்
15.3வது ஓவரில், ரசல் ஓவரில் வார்னர் ஒரு அட்டகாசமான ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடித்து அசத்தல். ஆனால், ரசலில் இந்த ஓவர், உண்மையிலேயே அபாயகரமானது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு யார்க்கர் பந்துகளை அள்ளி வீசினார். ஆனால், கடைசி பந்தில் வார்னர், உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 53 பந்துகளில் 85 ரன்கள் அடித்து வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 5 ஓவர்கள் மீதமுள்ளது. எவ்வளவு அடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கடந்த சீசன்களில் சாதாரண வீரராக அறியப்பட்ட விஜய் ஷங்கர், இன்று ஹைதராபாத் அணியின் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வந்த உடனேயே, சுனில் நரைன் ஓவரில், ஒரு அட்டகாசமான ஹேண்ட்சம் சிக்ஸ் ஒன்றையும் விளாசினார்.
ரொம்ப நேரமாக அடிக்கவும் முடியாமல், அவுட்டாகவும் முடியாமல் தவித்து வந்த ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து, பியூஷ் சாவ்லா ஓவரில், ஆஃப் ஸ்டெம்ப் பறக்க போல்டானார்.
ஐபிஎல் தொடரில் அதிக 50 அடித்த வீரர்கள்:
டேவிட் வார்னர் – 40
விராட் கோலி – 38
கம்பீர் / ரெய்னா – 36
ரோஹித் ஷர்மா – 35
ஷிகர் தவான் – 32
11 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்துள்ளது. சில கேட்சுகள், ரன் அவுட்கள் தவறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனது கம் பேக் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் டேவிட் வார்னர். இது அவரது 37வது ஐபிஎல் அரைசதம் ஆகும்.
ஈடன் கார்டன் பிட்ச், ஸ்பின் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கிறது. 150 ரன்கள் அடித்தாலே, அது கொல்கத்தாவிற்கு ஆபத்தான ஸ்கோர் என கண்டிப்பாக சொல்லலாம்.
சுனில் நரைனின் 6வது ஓவரில் டேவிட் வார்னர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு பெரிய ஷாக்!
ஐந்து ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.
பியூஷ் சாவ்லா ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார் கம் பேக் வார்னர்… இருக்கு…இன்னைக்கு ஒரு வேட்டை இருக்கு.
பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிலும், ஒரு நோ-பால் பேர்ஸ்டோ-வால் தவறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க்ரிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (w/c), ஆந்த்ரே ரசல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லோகி ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா
டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ(W), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன், விஜய் ஷங்கர், யூஸுப் பதான், ரஷித் கான், புவனேஷ் குமார் (c), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்
சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சிறிய சர்ப்ரைஸ் தான். ஸோ, ஐபிஎல் 2019 முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அதேசமயம், தடையில் இருந்த டேவிட் வார்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது சன் ரைசர்ஸுக்கு மிகப்பெரிய பூஸ்ட் என்றால் மிகையல்ல…
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
வெல்கம் நண்பர்களே! இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா vs ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸ் காணத் தயாரா? வார்னர் வந்தாச்சு!! செம சரவெடி காத்திருக்கு! உங்களுக்காக லைவ் மேட்சும் காத்திருக்கு….