‘எங்களை பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியே போங்க’ – விராட் கோலி காட்டம்

இதற்கு என்னுடைய பதில் என்னவெனில், இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை

By: Published: November 7, 2018, 7:15:53 PM

விராட் கோலி என்றாலே சென்சேஷன் தான். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து சச்சினுக்கு டஃப் பைட் கொடுத்து வருகிறார். நிகழ் காலத்தின் டாப் கிரிக்கெட் மாஸ்டர் விராட் கோலி என்றால், அது மிகையல்ல.

அப்படிப்பட்ட சென்சேஷன் கோலி, இப்போது, ரசிகர் ஓருவருக்கு காட்டமாக பதில் சொல்லியிருப்பது மூலம், இம்முறை தனது பேச்சால் கிரிக்கெட் பக்கங்களை பரபரப்பாக்கி உள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தான் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில், “ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் அப்படி ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை விரும்பிப் பார்க்கிறேன் என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதற்கு என்னுடைய பதில் என்னவெனில், இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்?. நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்புகிற நீங்கள், இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள்” என்று விராட் கோலி அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க – ஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா…! இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kohli faces social media backlash for move out of india comment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X