scorecardresearch

குதிரை மேல் நின்றவாறு 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனை; அசத்தும் கோவை உடன்பிறப்புகள்

8 ஆம் வகுப்பு படித்து வரும் நித்தியாஶ்ரீ, தொடர்ந்து 2 மணி நேரம் ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகளின் விழிப்புணர்வு படங்கள் என 11 படங்களை வரைந்து சாதனை

குதிரை மேல் நின்றவாறு 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனை; அசத்தும் கோவை உடன்பிறப்புகள்
சிலம்பம் சுற்றும் ரோகன் குமார் மற்றும் நித்யா ஸ்ரீ

குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றிய 5 வயது சிறுவன் மற்றும் தொடர்ந்து 2 மணி நேரம் ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகளின் விழிப்புணர்வாக   11 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ள 13 வயதான பள்ளி மாணவி.

குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து இரண்டு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனை படைத்த ஐந்து வயது சிறுவன் ரோகன் குமார்

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன் – உமாமகேஷ்வரி தம்பதி. இவர்களது 5 வயது மகன் ரோகன்குமார் எல்.கே.ஜி படித்து வருகிறார். ரோகன்குமார் 4 வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

இதையும் படியுங்கள்: கோவையில் ‘பேஷன் பிளே இந்தியா’ சார்பில் இயேசு சிலுவை பாதை நிகழ்ச்சி: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வாக உடல் உறுப்புகளின் 11 படங்களை வரைந்து சாதனை படைத்த 13 வயது சிறுமி நித்யா ஸ்ரீ

இந்நிலையில் இன்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடத்தில் மீண்டும் குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். சாதனையை நிகழ்த்திய சிறுவனை பெற்றோர், உறவினர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறுவன் ரோகன்குமார் செய்த சாதனைக்கான கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதே போல அவர்களது மூத்த மகள் நித்தியாஶ்ரீ (13), 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் தொடர்ந்து 2 மணி நேரம் ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகளின் விழிப்புணர்வு படங்கள் என 11 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kovai siblings creates new record on silambam

Best of Express