Kings XI Punjab vs Delhi Capitals: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.20) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் நாக் அவுட் இன்னிங்ஸால், டெல்லி அணி 19.4 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
49 பந்துகளில் 58 ரன்களுடன் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.
23:45 (IST)20 Apr 2019
டெல்லி-னாலே டர்ரு தான் போல...
கடைசிக் கட்டத்தில் டெல்லியின் வெற்றிக்கு எந்தவித பரபரப்புக்கும் இடம் தராமல் ஆடிய கோலின் இங்ரம், 19 ரன்களில் ஷமி ஓவரில் மிடில் ஸ்டெம்ப் சிதற வெளியேறினார். ஆனால், அதற்கு பந்திலேயே அக்ஷர் படேல் ரன் அவுட் ஆனார்.
23:27 (IST)20 Apr 2019
ரிஷப் பண்ட் அவுட்
இந்த சீசனில் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக 78 ரன்கள் விளாசிய ரிஷப் பண்ட், அதன்பிறகு ஒரு ஆட்டத்தில் கூட சிறப்பாக ஆடவில்லை. இன்றும் அதே கதை தொடர்கிறது. வில்ஜோன் பந்தில் 6 ரன்களில் ரிஷப் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
23:20 (IST)20 Apr 2019
தவான் என்ட் கேம்
சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவான், 41 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வில்ஜோன் பந்துவீச்சில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.. வெற்றியை நோக்கி டெல்லி...
23:07 (IST)20 Apr 2019
தவான் 50
நடப்பு சீசனின் முதல் பாதியில் படு மோசமாக சொதப்பிய ஷிகர் தவான், இரண்டாம் பாதியில் ஃபார்முக்கு வந்திருக்கிறார். அதன் பலன், இன்றைய போட்டியிலும் அரைசதம். 13 ஓவர்கள் முடிவில், டெல்லி 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
22:56 (IST)20 Apr 2019
90-1
164 என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் டெல்லி அணி, 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் களத்தில்...
21:06 (IST)20 Apr 2019
கெயில் அவுட்
பஞ்சாப் அணிக்கு விழுந்த மெகா அடி! க்ரிஸ் கெயில் அவுட்! லமிச்சனே சிக்ஸர் அடித்த பிறகு, அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு விளாச எண்ணிய கெயில், சிக்ஸ் லைனில் கோலின் இங்ரமின் ப்ரில்லியன்ட்டான பீல்டிங்கால் கேட்சாகி வெளியேறினார்.
37 பந்துகளில் 67 ரன்களில் அவுட்
20:50 (IST)20 Apr 2019
பவுலர்களை டீலிங் செய்யும் கெயில்
க்ரிஸ் கெயில் அசால்ட்டாக பவுலர்களை டீலிங் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, க்ரிஸ் கெயில் அரைசதமும் அடித்து களத்தில் நிற்கிறார். நின்னா சாத்து... இல்லாட்டி பூட்டப்படும் பூத்து!
Caption
20:41 (IST)20 Apr 2019
எல்லோரும் ஹீரோவாக நினைத்தால்?
க்ரிஸ் கெயில் இப்போது தான் அடிக்க ஆரம்பித்து இருக்கிறார். டேவிட் மில்லர் ஸ்டிரைக் ரொடேட் செய்து கெயிலுக்கு கொடுக்கும் பணியை செய்திருக்கலாம். ஆனால், அக்ஷர் படேல் ஓவரில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்ட மில்லர், 7 ரன்களில் ப்ரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
20:26 (IST)20 Apr 2019
ஏன் மாயங் ஏன்?
நீங்க அடிக்கணும் நினைச்சது தப்பு இல்லை மாயங்... ஆனா, 147, 148 என்ற ஸ்பீடில் போடும் ரபாடாவின் பவுன்ஸ் பந்தில் சிக்ஸ் அடிக்க நினைத்தது ரெம்ப தப்பு.
மாயங்க் 2 ரன்கள் அவுட்!
20:18 (IST)20 Apr 2019
பஞ்சாப் பேட்டிங்
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்ய, பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் 12 ரன்களில் லமிச்சனே பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட, கெயில், மாயங்க் அகர்வால் களத்தில்...
Highlights