20 ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவருமான ரோஜர் பெடரர், அடுத்த வாரம் நடைபெறவுள்ள லாவர் கோப்பை தனது கடைசி ஏ.டி.பி போட்டியாக இருக்கும் என்று கூறி, டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “அடுத்த மாதம் லாவர் கோப்பை எனது கடைசி ஏ.டி.பி சுற்றுப்பயணமாக இருக்கும். நான் இனி கிராண்ட்ஸ்லாம் அல்லது டென்னிஸ் சுற்றுப்பயணத்தில் விளையாட மாட்டேன்" என்று ரோஜர் பெடரர் கூறினார்.
"கடுமையான போட்டி நிறைந்த வடிவத்திற்கு திரும்புவதற்கு நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடலின் திறன் மற்றும் வரம்பு எனக்கும் தெரியும். எனக்கு 41 வயது, 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை தாராளமாக நடத்தியுள்ளது, மேலும் எனது போட்டி வாழ்க்கையை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நான் அங்கீகரிக்க வேண்டும். நான் நிச்சயமாக அதிக டென்னிஸ் விளையாடுவேன், ஆனால் கிராண்ட்ஸ்லாம் மற்றும் டென்னிஸ் சுற்றுப்பயணத்தில் அல்ல. இது ஒரு கசப்பான-இனிப்பு முடிவு, ”என்று அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: ‘டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி ஓய்வு பெறலாம்’ – அப்ரிடியை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் அக்தர்
மேலும், "இது ஒரு கசப்பான முடிவு, ஏனென்றால் டென்னிஸ் சுற்றுப்பயணம் எனக்கு வழங்கிய அனைத்தையும் நான் இழக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், கொண்டாட நிறைய இருக்கிறது. நான் பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலி மனிதர்களில் ஒருவராக கருதுகிறேன். டென்னிஸ் விளையாட எனக்கு ஒரு சிறப்புத் திறமை வழங்கப்பட்டது, நான் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நான் அதைச் செய்தேன், நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன், ”என்றும் ரோஜர் பெடரர் தனது ட்விட்டர் பதிவில் கூறினார்.
2003 ஆம் ஆண்டு விம்பிள்டனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற பிறகு ஆண்கள் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்திய பெடரர், சமீபத்திய ஆண்டுகளில் காயங்களால் சிரமப்பட்டார்.
பெடரர் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் மற்றும் அவரது கடைசி போட்டி 2021 விம்பிள்டனில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸுக்கு எதிரான கால் இறுதி தோல்வியாகும்.
பெடரர், நீண்ட கால போட்டியாளரும் நண்பருமான ரஃபேல் நடாலுடன் லண்டனில் நடந்த லாவர் கோப்பையில் இரட்டையர் ஆட்டத்தில் விளையாடும் போது, சுற்றுப்பயணத்திற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
பாசலில் உள்ள வீட்டில் சுவிஸ் உள்ளரங்கு போட்டியில் விளையாடவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.